சென்னை: கொரோனாவால் ஊரடங்கில் பாதிக்கப்பட்டுள்ள ஏழை குடும்பங்களுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை திமுக தலைமை அலுவலகத்தில் இருந்தபடி ஸ்டாலின் மாநில அனைத்து எதிர்கட்சி தலைவர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்கு பின்னர் இந்த கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்ட முடிந்த பின்னர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அளித்த பேட்டியில் கூறியதாவது: இன்றைய கூட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள். நிவாரண பணிகள், மத்திய அரசின் 20ம் தேதிக்கு பின்னர் தளர்வு, பிரதமர் உரையில் புதிய அறிவிப்புகள் இல்லாது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை உள்ளிட்டவை விவாதிக்கப்பட் டன. தொடர்ந்து 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .

அதன் விவரம் வருமாறு:
* கொரோனா தடுப்பு மற்றும் மருத்துவ பணியில் ஈடுபடுவோருக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் .
* கொரோனா தொற்றால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.ஒரு கோடி நிவாரணம் அறிவிக்கப்பட வேண்டும். மருத்துவ பணியில் ஈடுபட்டு வரும் சுகாதார பணியாளர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கும் ஒரு கோடி வழங்கிட வேண்டும்.
* திமுக வழங்கும் நிவாரண பொருட்களின் விநியோகத்திற்கு கோர்ட் விதித்த உத்தரவை பின்பற்ற வேண்டும்.
* ரேசன்கார்டுதாரர்களுக்கு ரூ. 5 ஆயிரம் அரசு வழங்க வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE