அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' இறப்புக்கு ரூ.1 கோடி நிவாரணம்: தி.மு.க., தீர்மானம்

Updated : ஏப் 18, 2020 | Added : ஏப் 16, 2020 | கருத்துகள் (128)
Share
Advertisement
'கொரோனா', இறப்பு, ரூ.1 கோடி, நிவாரணம்,தி.மு.க.,  தீர்மானம்

சென்னை: 'கொரோனா நோயால் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு, 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்' என, தி.மு.க., தலைமையில், நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தி.மு.க., தலைவர், ஸ்டாலின் தலைமையில், அனைத்து கட்சிக் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று நடந்தது. காலை, 11:00 மணிக்கு, அனைத்து தலைவர்களும், காணொலி காட்சியில் இணைந்தனர்.தமிழக காங்கிரஸ் தலைவர், அழகிரி, ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர், பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர், முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், திருமாவளவன் உட்பட, 11 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்த பின், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, ஸ்டாலின் அளித்த பேட்டி: சென்னையில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், தன் துறை சார்ந்த அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தியுள்ளார். அமைச்சர், சி.வி.சண்முகம், விழுப்புரத்தில் உள்ள அதிகாரிகளை அழைத்து, கூட்டம் நடத்தியுள்ளார்.


தி.மு.க., தலைமையில், 11 கட்சிகளின் தலைவர்கள் கூடும் கூட்டத்துக்கு, இவ்வளவு கட்டுப்பாடுகள் விதிக்கும் அரசு, இத்தகைய கூட்டங்களுக்குத் தடை விதிக்காதது ஏன்; அமைச்சர்களுக்கு, இது பொருந்ததாதா? இது குறித்து, அடுத்து கூடுகிற, அனைத்து கட்சி கூட்டத்தில், உரிய முடிவெடுத்து அறிவிப்போம்.இவ்வாறு, அவர் கூறினார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்:

*கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம், ஊதிய உயர்வுகள் வழங்க வேண்டும். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு, 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்

*மருத்துவ உபகரணங்கள் கொள்முதலில், மேலும் தாமதத்தைத் தவிர்க்க வேண்டும்

*அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் சிறப்பு நிவாரணமாக, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்

* அனைத்து பிரிவு மக்களுக்கும், தேவையான நிவாரண உதவிகளை செய்ய, 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, அதற்கான செயல் திட்டத்தை, மாநில அரசு அறிவிக்க வேண்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான, நிவாரண பொருளாதார உதவிக்கு, புதிய செயல் திட்டம் உருவாக்க வேண்டும்.இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Advertisement




வாசகர் கருத்து (128)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
19-ஏப்-202012:36:40 IST Report Abuse
Swaminathan Chandramouli ஸ்டாலின் யார் ஒரு கோடி ருபாய் கொடுக்க தீர் மானம் போடுவதற்கு ? அரசாங்கத்தில் அங்கம் வகிக்கிறாரா . இந்தியாவில் உள்ள அத்தனை மிகப்பெரிய , கருப்பு பணம் பதுக்கி வைத்து இருக்கும் திமுக , காங்கிரஸ் ப சிதம்பரம் போன்ற கட்சிகள் தங்கள் பணத்தை மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கவேண்டும் கொரோனா வைரஸ் இல் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அந்த தொகை பகிர்ந்தளிக்க போதும்
Rate this:
Cancel
s vinayak - chennai,இந்தியா
18-ஏப்-202009:08:37 IST Report Abuse
s vinayak இன்றைய வாழ்க்கை சூழலில் 1 கோடி அறிவித்தால் பல இறப்புகள் ஏற்பட்டு விடும். (இதைகாரணம் காட்டி). மக்கள் வாக்குகள், உயிருக்கு விலை பேசுவதே திமுக ( கலைஞர், ஸ்டாலின்) , மற்றும் கூட்டணிகளின் வியாபாரமாகிவிட்டது.
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
18-ஏப்-202000:03:47 IST Report Abuse
Matt P கரோனா வருவதற்கு முன்னே பல இறப்புகள் தமிழ் நாட்டில் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது. அந்த இறப்புகள் அரசின் கையாலாகா தன்மை காரணமாகவும் இருக்கலாம். விவாசயிகள் கூட மழை பொய்த்தல், காவிரி நீர் கிடைக்காமை போல கந்து வட்டி கொடுமை மேலும் பல காரணங்களுக்காக உயிரை போக்கி இருக்கலாம். அது திமுக அரசிலும் நடந்திருக்கலாம். எப்படி இறந்தாலும் இறப்பு இறப்பு தான் .அது இழப்பு தான். அப்போவெல்லாம் கோடி கொடுக்க வேண்டும் என்று சொல்லாதவர் இப்போ கோடி என்று ஏன் சொல்ல வேண்டும். கரோனாவுக்கு தனி மதிப்பா? ..இப்படி சொல்லி மக்களிடம் அனுதாபம் பெற்று மக்களும் கோடி பெற்று விட்டார்களென்றால் ,அதன் மூலம் தான் அமைச்சன்என்ற அந்தஸ்தை பெற முயற்ச்க்கும் தமிஸ்நாட்டில் அன்றி வேறு எங்கும் நடக்குமோ. பொது வாழ்வுக்கு வந்துவிட்டால் மனித தன்மையோடு நடக்க பாருங்கப்பா? ,,,அப்பன் தான் அப்படி இருந்தார். அதற்காக புள்ளையும் அப்படி இருக்கணுமா? ....கறொனாவிலிருந்து நம்மை பாதுக்காக்க எத்தனையோ வழிமுறைகள் இருக்கு. சொல்கிறார்கள் முன்னெச்சரிக்கைகளை கடை புடிங்க. ..நான் கம்ப்யூட்டர் முன்னாடிருந்தே நான் முக கவசம் அணிஞ்சிருக்கேன் வெளியே போனா கண்டிப்பா அணியுங்க ...இல்லாட்டி வெளியே போகாதீங்க ..என்று சொல்லுங்க. பேரன் டெல்லியிலிருந்து வந்தான். ...80 வயசு பாட்டி 2 நாளில பரலோகத்துக்கு போய்ட்டாங்க .....இதுக்கெல்லாம் அரசு காரணமா? ..வெளிநாடுகளில் ஏற்பட்ட கரோனா விபரீதங்களை பார்க்கும் பொது தமிழ்நாட்டில் குறைவு தான். மக்கள் இன்னும் கவனமாக இருந்திருக்கலாம். ,,,என்ன இருந்தாலும் நடந்தது துரதிர்ஷ்டம் ...அனுதாபங்கள். இதை வைத்து அரசியல் வேண்டலாமே ....வருங்கால தமிழ்நாட்டையும் நினைவில் கொண்டு அள்ளி கொடுக்கும் எண்ணத்தை கஇ விடுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X