பெண் போலீசிடம் பாலியல் சீண்டல்; எஸ்.பி., அதிரடி கைது

Added : ஏப் 17, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
கண்டமங்கலம் : புதுச்சேரியில், போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த பெண் போலீசிடம் ஆபாசமாக பேசி, பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற எஸ்.பி., கைது செய்யப்பட்டார்.திருவண்ணாமலையை சேர்ந்தவர் சுபாஷ், 38. புதுச்சேரி காவல் துறையில் பி.பி.எஸ்., அதிகாரியான இவர், புதுச்சேரி பல்கலைக்கழக பாதுகாப்பு எஸ்.பி.,யாக பணிபுரிந்து வந்தார். தற்போது, ஐ.ஆர்.பி., எனப்படும் இந்திய ரிசர்வ் பட்டாலியன் துணை
பெண் போலீசிடம் பாலியல் சீண்டல்; எஸ்.பி., அதிரடி கைது

கண்டமங்கலம் : புதுச்சேரியில், போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த பெண் போலீசிடம் ஆபாசமாக பேசி, பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற எஸ்.பி., கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலையை சேர்ந்தவர் சுபாஷ், 38. புதுச்சேரி காவல் துறையில் பி.பி.எஸ்., அதிகாரியான இவர், புதுச்சேரி பல்கலைக்கழக பாதுகாப்பு எஸ்.பி.,யாக பணிபுரிந்து வந்தார். தற்போது, ஐ.ஆர்.பி., எனப்படும் இந்திய ரிசர்வ் பட்டாலியன் துணை கமாண்டன்ட் ஆக பணியாற்றி வருகிறார். இவருக்கு, திருபுவனை பகுதியில் கொரோனா தடுப்பு, பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டது.

திருபுவனை, திருவண்டார்கோயில், மதகடிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு ரோந்து செல்லும் அவர், இடைப்பட்ட நேரத்தில் திருபுவனை போலீஸ் ஸ்டேஷனில் சற்று ஓய்வெடுப்பது வழக்கம். கடந்த 13ம் தேதி பிற்பகல், திருபுவனை போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓய்வெடுக்கச் சென்ற எஸ்.பி., சுபாஷ், அங்கு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியில் இருந்த, அதே பகுதியை சேர்ந்த பெண் போலீசிடம் ஆபாசமாக பேசி, கையை பிடித்து இழுத்து, அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் காவலர், டி.ஜி.பி.,யிடம் புகார் கொடுத்தார்.

அதைத் தொடர்ந்து, போலீஸ் தலைமையக உத்தரவின்பேரில், எஸ்.பி., சுபாஷ் மீது, திருபுவனை போலீசார் நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவர், ஜாமினில் விடுவிக்கப்பட்டார். பாலியல் சீண்டல் வழக்கில் போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


எஸ்.பி., சுபாஷ்க்கு என்ன ஆச்சு?


சுபாஷ் மனநலம் பாதிக்கப்பட்டு, கடந்த சில ஆண்டுகளாக மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பணியின்போது திடீர் திடீரென அப்செட் ஆவதும், தன்னை மறந்து பிரம்மை பிடித்தது போல் இருப்பதையும் போலீசார் நேரில் பார்த்துள்ளனர். பெண் காவலர் கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட எஸ்.பி., சுபாஷ், தான் ஒரு போலீஸ் அதிகாரி என்பதையே மறந்து, சிறுபிள்ளை போல, போலீஸ் ஜீப்பில் தானாக சென்று ஏறியதும் தெரிய வந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mahendran TC - Lusaka,ஜாம்பியா
21-ஏப்-202013:30:50 IST Report Abuse
Mahendran TC வேலியே பயிரை மேய்ந்த கதைதான் இது. மனநலம் பாதிக்கப்பட்ட இவனை உடனடியாக டிஸ்மிஸ் பண்ணனும். இல்லை என்றால் இவனோட ஆட்டம் தொடரும் , ஒவ்வொரு முறையும் இதையே(மனநலம் ) காரணம் காட்டி தப்பித்துவிடுவான் .
Rate this:
Cancel
Varun Ramesh - Chennai,இந்தியா
21-ஏப்-202008:43:27 IST Report Abuse
Varun Ramesh அது என்னய்யா குற்றச்செயலிலீடுபடுகிற அனைத்து காவல் துறை அதிகாரிகளும் இப்படி மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள், வருமானவரித்துறை ரெய்டின் போது நெஞ்சுவலி வரும் அரசியல்வாதிகளைப்போல்? உண்மை என்றே வைத்துக்கொண்டால் கூட, அவரை பணிக்கு சேர்க்கும் போது அவர் சரியான மனநிலையில்தான் இருக்கிறாரா என்பதை சோதிக்கவில்லையா? விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லையா? ஒருவேளை, பணியில் சேர்ந்த பின்னர்தான் மனநிலையில் பாதிப்பு என்றால், அவர்களை உடனடியாக பணிநீக்கம் செய்யும் விதிமுறை காவல்துறையில் இல்லையா? இவர் மனநிலை சரியில்லாதவர் என்ற கருத்தை பாதிக்கப்பட்ட பெண் காவலர் ஏற்றுக்கொள்கிறாரா? அல்லது ஏற்றுக்கொள்ளும்படி நிர்பந்திக்கப்படுகிறாரா?
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
20-ஏப்-202006:05:45 IST Report Abuse
D.Ambujavalli அவர் மனநலம் குன்றியவர் என்று உடன் வேலை செய்பவர்களே கேஸை மூட வழி செய்து கொடுத்து விட்டார்கள் . பின்னே, பெண் எக்கேடு கெட்டால் என்ன, ஸ்டேஷன் கவுரவம், காவல்துறை கம்பீரம் போகலாமா? அவனும் இதே கவசத்தின்பின் எத்தனை அட்டூழியம் வேண்டுமானாலும் செய்வான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X