'அமெரிக்காவை மீண்டும் திறத்தல்': ஊரடங்கை தளர்த்த டிரம்ப் முடிவு

Updated : ஏப் 17, 2020 | Added : ஏப் 17, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
வாஷிங்டன்: உலகின் மிகப் பெரிய பொருளாதாரம் கொண்ட நாடான அமெரிக்காவில் இதுவரை, 6.5 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது; 32,186 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அமெரிக்காவில், 2.2 கோடிக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். நாட்டின் பொருளாதாரமும் மோசமான நிலையை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்,

வாஷிங்டன்: உலகின் மிகப் பெரிய பொருளாதாரம் கொண்ட நாடான அமெரிக்காவில் இதுவரை, 6.5 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது; 32,186 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அமெரிக்காவில், 2.2 கோடிக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். நாட்டின் பொருளாதாரமும் மோசமான நிலையை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


latest tamil news




இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரசின் தாக்கம் அதன் உச்சநிலையை கடந்துவிட்டதாக கூறி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், இன்று (17ம் தேதி) நடந்த ஆளுனர்கள் உடனான கூட்டத்திற்கு பின் தெரிவித்ததாவது:'அமெரிக்காவை மீண்டும் திறத்தல்' என்ற பெயரில், நாட்டின் பொருளாதாரத்தை முழு வீச்சில் இயங்க செய்யும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.



latest tamil news


இதன் மூலம், மாகாணங்களில் நடைமுறையிலுள்ள முடக்க நிலையை ஆளுனர்கள் படிப்படியாக முடிவுக்கு கொண்டுவர முடியும். இந்த பணியை மைய அரசின் உதவியுடன் அந்தந்த மாகாண ஆளுனர்களே நேரடியாக மேற்கொள்வார்கள்.
இந்த மாதத்தின் இறுதிக்குள்ளேயே, சில மாகாணங்கள் முடக்க நிலையை முற்றிலும் நீக்கக்கூடும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


latest tamil news



'மாகாண ஆளுனர்களுக்கு, ஊரடங்கை தளர்த்த எந்த அதிகாரமும் இல்லை. தனக்கு மட்டுமே எல்லா அதிகாரங்களும் இருக்கின்றன' என, இரு நாட்களுக்கு முன் டிரம்ப் தெரிவித்திருந்தார். 'அது, அமெரிக்க அரசியல் சட்டத்திற்கு எதிரானது' என, சட்ட வல்லுனர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து தன் நிலைப்பாட்டிலிருந்து பின் வாங்கிய டிரம்ப், மாகாண ஆளுனர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இன்று பேசியிருக்கிறார். இது டிரம்ப்பின் பக்குவமின்மையைக் காட்டுகிறது' என, அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.


latest tamil news


பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும் டிரம்பின் இந்தக் கருத்தால், கடந்த சில நாட்களாக வீழ்ச்சியைச் சந்தித்து கொண்டிருந்த அமெரிக்க பங்குச்சந்தைகள், மீண்டும் ஏற்றம் காணத் துவங்கியுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh - Thirunagar,இந்தியா
21-ஏப்-202017:23:15 IST Report Abuse
Ramesh வாவ் சூப்பர்
Rate this:
Cancel
VARADHARAJANAYATHURA - Salem,இந்தியா
17-ஏப்-202017:31:10 IST Report Abuse
VARADHARAJANAYATHURA மக்கள் மடிந்தாலும், மருந்தே இல்லை என்றாலும், நட்டத்தை தடுக்கவும், பணமதிப்பை உயர்த்தவும், உலகநாடுகளை தாழ்த்தவும், தனிமனித வருமானத்தை உயர்த்தவும், வரி இம்மி குறையாமல் பிழிந்து எடுக்கவும், போட்டியாளர்களான சீன,ரஷ்யா, ப்ரிட்டனை பின்னுக்கு தள்ளி வளர்ச்சி விகிதம் உயர்த்தவும், கண்டிப்பான பேசும் உத்தரவுகளை யோசிக்காமல் வீசுகிறார் என்றால், காரணம் விரைந்து எதிர்நோக்கும் "அதிபர் தேர்தல்" ஒன்றே பதவி வெறி,ஆளுமை வெறி,அதிகார வெறி, அடக்குமுறை வெறி அத்தனையும் அவிழ்த்து விட காரணமாகிறது. அமெரிக்காவும், பணபலமும், அதிகார பலமும், இராணுவபலமும் ஓங்கி இருக்கும் நேரத்தில், பாவிகளான 33℅வரி செலுத்தும் மக்கள் ,தினமும் ஆயிரக்கணக்கில் மடிந்து அழிவார்கள். அமெரிக்காவுக்கு சங்கு ஊதுங்கள் ஏனெனில் அமெரிக்கா உயருகிறது
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
17-ஏப்-202016:12:04 IST Report Abuse
sundarsvpr நம்மை மீறி ஒரு செயல் நடந்தால் எதை தின்னால் பித்தம் தெளியும் என்ற நிலை எல்லோருக்கும். அந்த நிலை தான் அமெரிக்க அதிபருக்கு. ஊரடங்கு தளர்வு அப்படிதான் எடுத்துக்கொள்ளவேண்டும். இந்தியாவில் 20 தேதிக்கு பிறகு சிறிய தளர்வு. இது ஒரு முயற்சி. இதில் வெற்றிகண்டாலும் தோல்வியடைந்தாலும் நிர்வாகம் மட்டுமல்ல. நாமும் பொறுப்பு நடப்பது இயற்க்கை நடத்தும் படிப்பினை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X