அரசியல் செய்தி

தமிழ்நாடு

24 ஆயிரம் ரேபிட் கிட்கள் வந்துள்ளன: முதல்வர் இபிஎஸ்

Updated : ஏப் 17, 2020 | Added : ஏப் 17, 2020 | கருத்துகள் (46)
Share
Advertisement
சேலம்: தமிழகத்திற்கு முதல்கட்டமாக கொரோனா வைரஸ் பரிசோதனைக்கான 24 ஆயிரம் ரேபிட் கிட்கள் வந்துள்ளதாக முதல்வர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.சேலத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் இபிஎஸ் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: சமூக இடைவெளியை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட
Rapid test Kit, EPS, Coronavirus, CM, Tamil nadu, Coronavirus crisis, Corona, Covid-19, tamil nadu news, tn news updates, chennai, tn government, confirmed cases, covid 19 in tn,
ரேபிட்கிட், தமிழகம், இபிஎஸ், கொரோனா, வைரஸ், முதல்வர்

சேலம்: தமிழகத்திற்கு முதல்கட்டமாக கொரோனா வைரஸ் பரிசோதனைக்கான 24 ஆயிரம் ரேபிட் கிட்கள் வந்துள்ளதாக முதல்வர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் இபிஎஸ் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: சமூக இடைவெளியை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் 24 பேர் பாதிக்கப்பட்டு, 7 பேர் குணமடைந்துள்ளனர். சேலத்தில் கொரோனா பாதித்த 9 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் ரூ.1000 நிவாரணம் 98 சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


latest tamil newsரேபிட் கிட்

வேளாண் பொருட்களை விற்பனை செய்ய எந்த தடையும் இல்லை. அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலன் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஏப்.,20 முதல் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கும் என்பதை வரும் திங்கட்கிழமை அன்று நாங்கள் அமைத்த உயர்மட்ட குழு சார்பில் அறிவிக்கப்படும். மத்திய அரசு 12 ஆயிரம் ரேபிட் பரிசோதனை கிட் வழங்குவதாக அறிவித்திருந்தது. அது நமக்கு போதாது, 50 ஆயிரம் கிட்கள் வேண்டும் என கேட்டுள்ளோம். தமிழகம் ஆர்டர் செய்ததில் முதல்கட்டமாக 24 ஆயிரம் ரேபிட் கிட்கள் வந்துள்ளன. மத்திய அரசுக்கு முன்பே, தமிழக அரசு சார்பில் 4 லட்சம் ரேபிட் பரிசோதனை கருவிகளை ஆர்டர் செய்துள்ளோம்.


latest tamil newsஸ்டாலின்

பாதிக்கப்பட்ட மக்களை காப்பதே அரசின் கடமை. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் அதிகளவில் குணமடைந்து வருகின்றனர். அரசுக்கு எதிராக ஸ்டாலின் தேவையில்லாமல் தினமும் ஒரு அறிக்கையை வெளியிட்டு குறை கூறி வருகிறார். மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளை பின்பற்றியே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எதிர்கட்சியினர் நல்ல கருத்தினை கூறினால் அதை செயல்படுத்த தயாராக இருக்கிறோம். ஆனால் இதை வைத்து அரசியல் செய்யாதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jaisriram - coimbatore,இந்தியா
17-ஏப்-202019:47:43 IST Report Abuse
jaisriram தமிழ் நாளிதழில் தமிழையே காணோம்.
Rate this:
Cancel
தமிழன் என்று சொல்லி  தலை நிமிர்வோம் சிறப்பாகச் செயல்படுகிறோம்' என்று வார்த்தைகளை வைத்து மக்களைக் குழப்பும் வேலையில் தமிழக அரசு ஈடுபட்டிருப்பது வேதனை அளிக்கிறது. முழு அடைப்பை வரம்பின்றி நீட்டிக்க வேண்டும் என்று நாம் கூறவில்லை. ஆனால், போதிய தடுப்பு மற்றும் சிகிச்சையளிக்கும் நடவடிக்கைகள் இல்லாமலேயே நோய் குறைந்து விட்டது என்று பொய்யான ஒரு சித்தரிப்பை ஏற்படுத்துவது தமிழக மக்களை மிகப்பெரிய ஆபத்தில் கொண்டுபோய் தள்ளிவிடும்.
Rate this:
Cancel
chander - qatar,கத்தார்
17-ஏப்-202017:57:22 IST Report Abuse
chander முதல்வர் அவர்களே ராபிட் ஸ்கிட் வந்து விட்டது என்று சந்தோசப்படுவதை விட இந்திய நாடு எவ்வளவு பின்தங்கியுள்ளது என்பதை நாட்டு பற்று உள்ளவர்கள் தலைகுனிந்து நிற்கவேண்டிய சூழ்நிலை நாட்டுக்கு நல்லது செய்பவர்களையும் அதிகாரத்தால் தடுத்து நிறுத்தி மத அரசியல் செய்கிறார்கள் இதற்காகத்தான் மரணம் என்பதை கடவுள் கொடுத்துள்ளார்
Rate this:
Giri - Chennai ,இந்தியா
17-ஏப்-202020:03:25 IST Report Abuse
Giri இந்தியா எதிலும் பின்தங்கவில்லை. ஒவ்வொரு ஊரில் ஒன்று எளிதாக கிடைக்கும் ,... உலகை ஆளும் பல நாடுகளுக்கு (55 நாடுகள்) இந்தியா விடம் இருந்து மருந்து வாங்கவில்லையா ? நீங்கள் இருக்கும் கத்தார் நாட்டில் எல்லாம் கிடைக்கிறதா... ? இல்லை ... நம் பிறந்த நாட்டை குற்றம் சொல்வது மிகவும் தவறு சார். தவறு செய்பவர்களை பற்றி நமக்கு கவலை வேண்டாம் ... நாம் நேர்மையாக இருந்தோம் என்ற நிம்மதி போதும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X