ஒரே வென்டிலேட்டரில் 7 பேருக்கு சிகிச்சை; அமெரிக்காவில் ஹூரோ ஆன டாக்டர்

Updated : ஏப் 17, 2020 | Added : ஏப் 17, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
US,DrSaud Anwar,ventilator,Saud Anwar, Pakistani American doctor, doctor, COVID-19, split ventilator, senator, corona outbreak, coronavirus, corona, corona news, corona in us, corona updates, அமெரிக்கா,வென்டிலேட்டர்,ஹூரோ

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரே வென்விலேட்டரில் 7 பேருக்கு சிகிச்சை அளிக்கும் புதிய சாதனத்தை உருவாக்கிய பாக்., வம்சாவளி டாக்டருக்கு, கார்களில் அணிவகுத்து மக்கள் நன்றி தெரிவித்தனர்.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. இதுவரை அங்கு 6.86 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 35,500 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கொரோனா இந்தளவு பாதிப்பை ஏற்படுத்த வென்டிலேட்டர் பற்றாக்குறையும் ஒரு காரணம். இந்நிலையில், மான்செஸ்டர் மெமோரியல் மருத்துவமனையில் நுரையீரல் டாக்டராக பணியாற்றி வரும், பாக்., நாட்டை சேர்ந்த டாக்டர் சவுத் அன்வர், புதிய சாதனம் ஒன்றை தயாரித்துள்ளார்.


latest tamil newslatest tamil newslatest tamil newsஒரு வென்டிலேட்டர் மூலம் ஒரே நேரத்தில் 7 பேருக்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்ட இச்சாதனத்தால், அவர் அந்நாட்டில் திடீர் ஹூரோவாக உருவாகி உள்ளார். அவரை பாராட்டும் விதமாக அவர் வசிக்கும் சவுத் விண்சர் பகுதியில் உள்ள மக்கள் வரிசையாக காரில் அணிவகுத்து, காருக்குள் இருந்தபடி கைகளை அசைத்தும், வாழ்த்து பேனர்களை காட்டியும் பாராட்டினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. டாக்டர் அன்வர், கனெக்டிகட் மாநில செனட்டராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Prabakaran - Chennai,இந்தியா
21-ஏப்-202007:45:24 IST Report Abuse
G.Prabakaran நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
18-ஏப்-202006:08:00 IST Report Abuse
D.Ambujavalli இவர்கள் போன்றவர்கள் தான் உண்மை ஹீரோக்கள். இந்த தொற்று, லாக் டவுன் முடிந்ததும், அவர், இவர் என்று எந்த திரைப்பட ஹீரோக்களுக்கும் போஸ்டர், பாலாபிஷேகம் செய்வதை விட்டுவிடுங்கள் ரசிகர்களே
Rate this:
Cancel
18-ஏப்-202002:47:12 IST Report Abuse
Ranjith Rajan Good. Hats Off
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X