திருநெல்வேலி; திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் 60 பேருக்கு மூன்று வேளைகள், நெல்லையை சேர்ந்த மனிதநேயர் ஒருவர் உணவளிக்கிறார் .

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நெல்லையை சேர்ந்த 58 பேர், தென்காசியை சேர்ந்த 14 பேர், துாத்துக்குடியை சேர்ந்த 4 பேர் என கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிறப்பு வார்டில் சிகிச்சையில் உள்ளனர்.
3 வேளை உணவு, பழங்கள்
இவர்களுக்கு உடல்நிலையை மேம்படுத்துவதற்கு சத்தான உணவு வழங்கிட திருநெல்வேலியை சேர்ந்த கே.எம்.ஏ.,நிஜாம், தமது சொந்த பொறுப்பில் 60 நோயாளிகளுக்கும் காலையில் இட்லி, ஆப்பம், பூரி உள்ளிட்ட டிபன், மதியம் பிரியாணி, நெய்சோறு, அசைவ, சைவ சாப்பாடு, இரவில் தோசை, சப்பாத்தி, இட்லி என தினமும் வழங்கிவருகிறார்.
மனசுக்கு திருப்தி கிடைக்கிறது
தினமும் ஆப்பிள், ஆரஞ்சு, செவ்வாழை, திராட்சை பழங்கள், குடிநீர் பாட்டில் என ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்தனி பைகளில் போட்டு வழங்குகிறார். நிஜாமின் சேவையை மருத்துவக்கல்லுாரி டீன் ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்கள் பாராட்டினர்.

நெல்லையில் அவர் உணவு தயாரிக்கும் பணியில் மும்முரமாக இருந்த அவர் இதுகுறித்து கூறுகையில்; ஒரு மனசு திருப்திக்காக இதனை மேற்கொள்கிறேன். திருநெல்வேலியில் பாதித்தவர்களுக்கு சத்தான உணவு தருவதன் மூலம் நோயை விரட்ட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
நெல்லையில் நோய் பாதித்தவர்கள் எல்லோருமே நடுத்தர வர்க்கத்தினர்.இந்த மனிதநேய பணியினை மேற்கொண்டு வருகிறார். இதற்காக இவரது குடும்பத்தினரும், நண்பர்களும் உறுதுணையாக உள்ளனர்.
அவரது மனிதநேயத்தை பாராட்டலாமே: மொபைல்: 9442018099.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE