புதுடில்லி: கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைச் சிகரத்தில் இந்திய மூவர்ண தேசியக்கொடி ஒளிரவிடப்பட்டது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 22 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகமே கொரோனாவால் முடங்கியுள்ள நிலையில், சுவிட்சர்லாந்தின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றான மேட்டர்ஹார்ன் மலைச் சிகரத்தில் கடந்த ஒரு வாரமாக ஒவ்வொரு இரவும் வார்த்தைகள் அல்லது உருவங்கள் அடங்கிய ஒளிவடிவில் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், சுவிட்சர்லாந்தின் கொடியுடன் தொடங்கிய ஒளிக்காட்சிகள், ‛நம்பிக்கை', ‛ஒற்றுமை', ‛வீட்டில் இருங்கள்' போன்ற சொற்களும் ஒளிரப்பட்டன.

இந்நிலையில், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைச் சிகரத்தில் இந்திய மூவர்ண தேசியக்கொடி ஒளிரவிடப்பட்டது. இந்த புகைப்படத்தை இந்திய பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ‛உலகம் ஒன்றிணைந்து கொரோனா வைரசுடன் போராடுகிறது. இந்த தொற்றுநோயை மனிதநேயம் நிச்சயமாக வெல்லும்.' என பதிவிட்டுள்ளார்.
The world is fighting COVID-19 together.
Humanity will surely overcome this pandemic. https://t.co/7Kgwp1TU6A
— Narendra Modi (@narendramodi) April 18, 2020
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE