பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனாவுக்கு 1372 பேர் பாதிப்பு; 15 பேர் பலி

Updated : ஏப் 18, 2020 | Added : ஏப் 18, 2020 | கருத்துகள் (62)
Share
Advertisement
Tamilnadu, CoronaVirus, CoronaCase, தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு, பலி, விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஏப்.,18) மேலும் 49 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1372 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களாக உயிரிழப்பு இல்லாததால் பலி எண்ணிக்கை 15 ஆக உள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வளர்ந்த நாடுகளை விட தமிழகத்தில் சிறப்பாக கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று 49 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1372 ஆக அதிகரித்துள்ளது. அதில் 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். இன்று 82 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மாநிலத்தில் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 365 ஆக உயர்ந்துள்ளது.


latest tamil newsஇன்று கூடுதலாக 3 சோதனை ஆய்வகங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக சோதனை ஆய்வகங்களை (31) கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், ஆய்வகத்தை அதிகப்படுத்தி சோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நாளில் 5363 சோதனைகள் நடத்தப்படுகின்றன. இன்று அதிகபட்சமாக திருப்பூரில் 28 பேரும், சென்னையில் 7 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 35,036 சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரேபிட் பரிசோதனை கிட்களை அதிக விலை கொடுத்து தமிழகம் வாங்கவில்லை. அதனை பரிசோதிக்க முறையாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இன்று முதல் ரேபிட் கிட்கள் மூலம் பரிசோதனை துவங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாலசுப்பிரமணியன் அ. மக்கள் அரசு கூறும் வழிமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்தால் தான் இந்த கொரானா மேலும் பரவாமல் தடுக்க முடியும். சில அரசியல் கட்சிகள் இதை அறியாமல் மக்களை தவறான பாதையில் செல்லத்தூண்டுவது மிகவும் வருத்தமளிக்கிறது.
Rate this:
Cancel
வல்வில் ஓரி அல்ல - Koodal,இந்தியா
19-ஏப்-202018:15:59 IST Report Abuse
 வல்வில் ஓரி அல்ல பொய் சொல்லாதே
Rate this:
Cancel
partha - chennai,இந்தியா
19-ஏப்-202015:31:03 IST Report Abuse
partha அரசு ஒரு கோடி கொடுத்தால் சுடலை ஒரு ரூபாய் ஆவது கொடுப்பாரா??
Rate this:
Abbavi Tamilan - Riyadh,சவுதி அரேபியா
19-ஏப்-202016:56:54 IST Report Abuse
Abbavi Tamilanஅரசு ஒரு கோடி கொடுத்தால், தப்லிக் அனைவருக்கும் கொரோனா உறுதிபடவில்லை சும்மா தனிமை படுத்தி வைத்திருந்தோம் என உண்மையை வெளியிட்டு இருபார்கள். மேலும் கோவை, திருமலை, குஜராத், உ பி யில் உண்மையாக கொரோனாவால் பாதித்தவர்கள் விவரம் வெளி வந்து இருக்கும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X