அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நோய் தடுப்பு நடவடிக்கை ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை'

Added : ஏப் 19, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
 'நோய் தடுப்பு நடவடிக்கை ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை'

சென்னை:''கொரோனா நோயை ஒழிக்க, தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கை, தி.மு.க., தலைவர், ஸ்டாலினுக்கு மட்டும் பிடிக்கவில்லை,'' என, மீன் வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் கூறினார்.

அவர் அளித்த பேட்டி:கொரோனா நோய் தொற்று, சமூக பரவலாக மாறாமல் இருக்க, அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து உள்ளது. நோய் கட்டுக்குள் இருப்பதை, சிலரால் பொறுக்க முடியவில்லை. தமிழக மக்கள், முதல்வர் கருத்தை ஏற்று செயல்படுகின்றனர்.

அனைத்து துறை ஊழியர்களும், அதிகாரிகளும், இரவு, பகல் பாராமல் பணியாற்றுகின்றனர். அனைவரும் ஓரணியில் இருந்து, நோயை முற்றிலும் ஒழிக்க, அரும்பாடுபட்டு வரும் நிலையில், ஸ்டாலினுக்கு மட்டும் பிடிக்கவில்லை.ஆரம்பத்தில், அரசின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்தார். தமிழக அரசு, மக்கள் மனதில் இடம்பிடித்து விடும் எனக்கருதி, அதற்கு இடையூறு கொடுக்கும் வகையில், ஸ்டாலின் அறிக்கை விடுகிறார்.

அந்த அறிக்கை, பீஹாரில் இருந்து வருகிறது; ஆலோசனை கூற, 340 கோடி ரூபாய் கொடுத்து உள்ளனர். கொரோனா விவகாரத்தில், வெளிப்படையாக அனைத்தும் தெரிவிக்கப்படுகிறது. நோய் விவகாரத்தில், மருத்துவர்கள் ஆலோசனை பெற வேண்டும்; அதிகாரிகளை முடுக்கி விட வேண்டும். இதை, அரசு செய்கிறது. இதை குறை கூறுவது கேலிக்குரிய விஷயம்.இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
19-ஏப்-202021:29:02 IST Report Abuse
Easwar Kamal அம்மா இருந்து இருந்தால் இந்த மாதிரி அணைக்காவிடிகள் வேலை எது. முதல்வர் மற்றும் துணை முதல்வர் இந்த மாதிரி ஆட்களை தூக்கி எரிய வேண்டும். அது எல்லாம் சேரி அமைச்சர்கள் ஒருத்தரையும் தொகுதி பக்கம் காண முடிய வில்லை. அதில் சில அமைச்சர்களை தவிர மற்ற எல்லாரும் பாதுகாப்பாக வீட்டுக்குள்ளயே இருக்கிறார்கள். ஐயா நீங்கள் எப்படி?
Rate this:
Cancel
Raju (GHANA) - Accra,கானா
19-ஏப்-202020:46:19 IST Report Abuse
Raju (GHANA) மாஸ்க் போட்டுக்கிட்ட மாதிரி காதையும் பொத்திப்போம். குற்றம் இருந்தால் சொல்லலாம். இப்ப உள்ள டெக்னாலஜி காலத்தில் தப்பு செய்தால் ஏதாவது ஒரு வகையில் வெளிப்பட்டு விடும்
Rate this:
Cancel
N.DURAI - trivandrum,இந்தியா
19-ஏப்-202020:02:11 IST Report Abuse
N.DURAI விடுங்க சார், நாட்டிலுள்ள பைத்திங்களில் இதுவும் ஒன்று .விடுங்க சார், நாட்டிலுள்ள பைத்திங்களில் இதுவும் ஒன்று.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X