பொது செய்தி

இந்தியா

இந்திய நிறுவனங்களை வாங்க சீனா முயற்சி; மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

Updated : ஏப் 19, 2020 | Added : ஏப் 19, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: இந்திய பெரு நிறுவனங்களை வாங்க சீனா முயற்சிப்பதையடுத்து மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.இந்தியாவில் கொரோனா பரவல் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்திய பெருநிறுவனங்களை வாங்கி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீனா முயற்சிக்கிறது. கடந்த மார்ச்சில் இந்தியாவின் எச்டிஎப்சி நிறுவனத்தின் 1.01
India,China,HDFC,Chinese,FDI,இந்தியா,சீனா,முதலீடு,கட்டுப்பாடு

புதுடில்லி: இந்திய பெரு நிறுவனங்களை வாங்க சீனா முயற்சிப்பதையடுத்து மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்திய பெருநிறுவனங்களை வாங்கி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீனா முயற்சிக்கிறது. கடந்த மார்ச்சில் இந்தியாவின் எச்டிஎப்சி நிறுவனத்தின் 1.01 சதவீத பங்குகளை, சீனாவின் மத்திய வங்கி வாங்கியது.


latest tamil news



சீனாவின் இந்நடவடிக்கைகளை அடுத்து மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, இந்திய நிறுவனங்களின் பங்குகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக முதலீடு செய்யவேண்டுமெனில், மத்திய அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாட்டால், சீனாவின் திட்டத்தை இந்தியா முறியடித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anbu - Kolkata,இந்தியா
19-ஏப்-202007:45:54 IST Report Abuse
Anbu இன்றளவும் இந்தியாவில் இருந்தபடியே சில விதிகளுக்குட்பட்டு நாமும் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் நிறுவனப் பங்குகளை வாங்க முடியும் ..... இந்தியாவில் செய்யப்படும் அந்நிய நேரடி முதலீடுகளில் நாம் ஏற்கனவே விதிகளை வகுத்து வைத்திருக்கிறோம் ...... இதையும் தவிர வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதை, சம்பந்தப்பட்ட இந்திய நிறுவனமே கூட தனது விதிகளால் தடுத்துவிட முடியும் ...... செபி போன்ற அமைப்புக்களும் உள்ளன ...... ஆகவே இந்திய அரசு முன்பு கோட்டை விட்டு தற்பொழுது விழித்துக் கொள்கிறது என்ற வாதம் ஏற்கத் தக்கதல்ல .....
Rate this:
Cancel
19-ஏப்-202007:12:45 IST Report Abuse
ஆப்பு அந்நிய முதலீடு பண்ணுங்கோ, வாங்கோ, வாங்கோன்னு இப்பத்தானே பட்ஜெட் சமயத்தில் கூவுனாங்கோ....
Rate this:
Cancel
19-ஏப்-202007:11:11 IST Report Abuse
ஆப்பு இந்திய நிறுவனங்களை வாங்கவே வேண்டாம். புதிய நிறுவனங்களாகிய ஃப்ளிப் கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்களில் அமெரிக்காவில் முதலீடு செய்வதன் மூலம் இந்தியாவில் காசு பாக்க முடியும். தவிர, பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத தனியார் நிறுவனங்களாகிய மேக் மை ட்ரிப், டென்செண்ட் போன்ற நிறுவனங்கள் சீன முதலீட்டிலேயே இந்தியாவில் இயங்குகின்றன. தவிர, ஹெ.டி.எஃப்.சி யில் ஒரு சதவீத பங்குகளை சீனா வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. அவிங்களுக்கு சிக்சர், பவுண்டரி தேவையில்லை. பல நிறுவனங்களில் ஒரு சதவீதம், அரை சதவீதம் வாங்குனாலே போதும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X