புதுடில்லி: டில்லியில் மக்களை பாதுகாப்பாக வைத்திருக்க விரும்புவதால், ஊரடங்கில் தளர்வு அளிக்க முடியாது என டில்லி முதல்ரவர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நிருபர்களிடம் முதல்வர் கெஜ்ரிவால் கூறியதாவது: தற்போதைய நிலையில் ஊரடங்கு அவசியமாகிறது. நகரில், கொரோனாவுக்கு மையப்புள்ளியாக இருக்கும் பகுதிகளில், ஊரடங்கில் தளர்வு அளிக்க முடியாது. ஏப்.,27 ல் மீண்டும் மறு ஆய்வு கூட்டம் நடக்கும். நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 186 பேருக்கும், அறிகுறி ஏதும் தென்படவில்லை. அவர்களுக்கு கொரோனா இருந்ததே தெரியவில்லை. இது கவலை அளிக்கிறது. டில்லியில் தொடர்ந்து கொரோனா பரவினாலும், கட்டுக்குள் உள்ளது. இதனால், யாரும் பீதி அடைய தேவையில்லை.

கொரோனா உறுதி செய்யப்பட்ட ஒருவர் என்னிடம், தான் அரசு உணவு விநியோகம் இடத்தில் பணிபுரிந்ததாகவும், உணவு விநியோகத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். இதனால், அந்த உணவு மையத்திற்கு வந்தவர்களுக்கு சோதனை செய்யும்படி உத்தரவிட்டுள்ளேன். டில்லி மக்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என விரும்புகிறோம். இதனால், ஊரடங்கில் தளர்வு அளிக்க முடியாது. ஒரு வாரத்திற்கு மீண்டும் ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE