மதுரையில் இன்று மேலும் இருவருக்கு கொரோனா

Updated : ஏப் 19, 2020 | Added : ஏப் 19, 2020 | கருத்துகள் (2) | |
Advertisement
மதுரை : மதுரையில் 44 பேரை கொரோனா தாக்கி இருந்த நிலையில், இன்று மேலும் இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு 46 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ஒருவர் இறந்துள்ளார். நேற்று வரை 16 பேர் குணமடைந்திருந்தனர். மற்றவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். எழுமலையை சேர்ந்த மூவர் குணமடைந்தனர். இவர்களுக்கு இருமுறை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் இல்லை

மதுரை : மதுரையில் 44 பேரை கொரோனா தாக்கி இருந்த நிலையில், இன்று மேலும் இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு 46 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ஒருவர் இறந்துள்ளார். நேற்று வரை 16 பேர் குணமடைந்திருந்தனர். மற்றவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.



latest tamil news




எழுமலையை சேர்ந்த மூவர் குணமடைந்தனர். இவர்களுக்கு இருமுறை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் இல்லை என்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 15 நாட்கள் தனிமையை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. 26 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


latest tamil news



இதற்கிடையே மதுரை மாவட்டத்திற்கு துரிதமாக பரிசோதனை மேற்கொள்ள உதவும் ரேபிட் கிட்கள் 1000 வந்தன. நகரில் 40 பேருக்கு இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. யாருக்கும் பாதிப்பில்லை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரகு -  ( Posted via: Dinamalar Android App )
19-ஏப்-202021:38:16 IST Report Abuse
ரகு மேலும் இருவர்னா, எந்த ஏரியான்னு சொல்லுங்க. அப்ப தானே அந்த பகுதி மக்கள் அலர்ட்டா இருந்துப்பாங்க?
Rate this:
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
19-ஏப்-202022:34:58 IST Report Abuse
மதுரை விருமாண்டிமகால் ஏரியா.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X