பொருளாதாரத்தை மீட்க ஊரடங்கை தளர்த்தும் இஸ்ரேல்

Updated : ஏப் 19, 2020 | Added : ஏப் 19, 2020 | கருத்துகள் (1) | |
Advertisement
ஜெருசேலம்: இஸ்ரேலில் கொரோனா பரவல் குறைய துவங்கியுள்ளதையடுத்து அந்நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக தற்போது வரை நடைமுறையில் உள்ள ஊரடங்கை தளர்த்துவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.கொரோனா சமூக பரவல் ஆகிவிடாமல் இருக்க, பாதிப்புக்கு உள்ளான நாடுகள் சமூக விலகலை கடைப்பிடிக்கும் பொருட்டு தொழில் செயல்பாடுகளை முடக்கின. இதனால் பெரும்பாலான

ஜெருசேலம்: இஸ்ரேலில் கொரோனா பரவல் குறைய துவங்கியுள்ளதையடுத்து அந்நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக தற்போது வரை நடைமுறையில் உள்ள ஊரடங்கை தளர்த்துவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா சமூக பரவல் ஆகிவிடாமல் இருக்க, பாதிப்புக்கு உள்ளான நாடுகள் சமூக விலகலை கடைப்பிடிக்கும் பொருட்டு தொழில் செயல்பாடுகளை முடக்கின. இதனால் பெரும்பாலான நாடுகளில் பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு ஆளானது. இந்நிலையில் இஸ்ரேலில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் அந்நாட்டு அரசு தொழில் செயல்பாடுகள் மீதான கட்டுப்பாட்டை தளர்த்தி உள்ளது.

இஸ்ரேலில் கடந்த மார்ச் 14 முதல் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. தற்போது ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு ஒரு மாதம் ஆன சூழலில் தற்போது படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.


latest tamil news



இஸ்ரேலில் இதுவரை 13,362 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், நேற்று ஒரே நாளில் 100 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்தம் 171 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் என்று சொல்லி  தலை நிமிர்வோம் எல்லா நாடுகளும் பொருளாதாரம் பொருளாதாரம் என்கிறார்களே அது என்ன அது நம் நாட்டில் இருக்கிறதா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X