அரசியல் செய்தி

தமிழ்நாடு

கட்டுப்பாடுகள் தொடரும்: தமிழக அரசு அறிவிப்பு

Updated : ஏப் 21, 2020 | Added : ஏப் 19, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை :'ஊரடங்கு தளர்வு தொடர்பாக, அரசாணை வெளியிடப்படும் வரை, தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.மத்திய அரசின் உத்தரவுப்படி, தமிழகத்தில், மே, 3 வரை, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடு நீட்டிப்புநாளை முதல், எந்தெந்த தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பது குறித்து, மாநில அரசுகள்
கட்டுப்பாடுகள் தொடரும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை :'ஊரடங்கு தளர்வு தொடர்பாக, அரசாணை வெளியிடப்படும் வரை, தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.மத்திய அரசின் உத்தரவுப்படி, தமிழகத்தில், மே, 3 வரை, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


கட்டுப்பாடு நீட்டிப்புநாளை முதல், எந்தெந்த தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பது குறித்து, மாநில அரசுகள் முடிவெடுத்து அறிவிக்கலாம் என, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, தமிழகத்தில், எந்தெந்த தொழில்களை துவங்க அனுமதிக்கலாம்; மே, 3க்கு பின், எப்படி படிப்படியாக ஊரடங்கை தளர்த்தலாம் என, ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக, நிதித்துறை செயலர், கிருஷ்ணன் தலைமையில், குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இக்குழுவின் ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம், சென்னை, தலைமை செயலகத்தில் நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிக்கை, இன்று முதல்வரிடம் அளிக்கப்பட உள்ளது. அதை பரிசீலித்து, அரசு முடிவுகளை அறிவிக்கும். அதுவரை, தற்போதுள்ள கட்டுப்பாடுகள், தொடர்ந்து நீடிக்கும் என, அரசு தெரிவித்து உள்ளது.


மக்கள் குழப்பம்அதேநேரத்தில், தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்றே தெரிகிறது. அதை உறுதிப்படுத்துவது போல, ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு உள்ளது. தமிழகத்தில், ரயில்வே பணிமனைகள், நிர்வாக அலுவலகங்கள், இன்று முதல் இயங்கவிருந்தன. தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து, பணிமனைகள், நிர்வாக அலுவலகங்களின் திறப்பு ஒத்தி வைக்கப்படுவதாக, தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல, இன்று முதல் செயல்பட முடிவு செய்திருந்த தொழிற்சாலைகளும், தங்கள் முடிவை தள்ளி வைத்துள்ளன. இதனால், ஊரடங்கு தளர்வு உண்டா; இல்லையா என்பதை, தமிழக அரசு விரைவாக அறிவிக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


முதல்வருடன் தொலை பேசியில் பேச்சு'தமிழகத்திற்கு, கொரோனா பரிசோதனை செய்வதற்காக, ரேபிட் டெஸ்ட் கிட்களை அதிக அளவில் வழங்க வேண்டும்' என, பிரதமரிடம், முதல்வர், இ.பி.எஸ்., கோரிக்கை விடுத்தார். பிரதமர் நரேந்திரமோடி, நேற்று இரவு, 7:30 மணிக்கு, முதல்வரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கேட்டார். முதல்வரும், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து விளக்கினார். மேலும், தமிழகத்தில், அதிக அளவில் பரிசோதனைகள் நடத்த வேண்டியுள்ளது. எனவே, தமிழகத்திற்கு, 'ரேபிட் டெஸ்ட் கிட்' அதிக அளவில் வழங்க வேண்டும் என, முதல்வர் கோரிக்கை விடுத்தார்.அதை கேட்ட பிரதமரும், அதிக அளவில், ரேபிட் டெஸ்ட் கிட்களை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pavithra - Coimbatore,இந்தியா
20-ஏப்-202023:07:32 IST Report Abuse
Pavithra Samooga idaiveli illamal, taramatra unavugal , sila idangalil ...ahuvum hospital arugil thotru paruvum padi corporation anumadiyum illamal niraya kadaiigal irukindradu. Sheynoy nagar billroth arugil kootathai paarthu pulambadavargal illai. Idupondru irukindra idangalai aaivu seidu Arasu seal vaipadhu thotru paravamal Iruka oru vaipu.
Rate this:
Cancel
Perumal - Chennai,இந்தியா
20-ஏப்-202022:33:36 IST Report Abuse
Perumal Hello Balasubramanian, in a country like India with huge population,you can't have total control over people even if you deploy military.Because of some idiots you will continue to have regularly Corona cases daily even if you impose lockdown for 3 months. Where's continued lock will have many other detoriating effects and also lockdown is not the only method to control.Self discipline is a must to control.
Rate this:
Cancel
20-ஏப்-202015:10:47 IST Report Abuse
ஆப்பு படத்தைப் பாருங்கோ... எவ்ளோ அழகா பளிச்னு இருக்கு. இப்பிடியே மெயிண்டெயின் பண்ணிருங்க... சாப்பாடு , மற்றும் சாமான்களை வீட்டிற்கு அனுப்பிச்சுருங்க. நாங்களும் இதுக்கு அட்ஜஸ்ட் ஆயிட்டோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X