பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு தளர்வால் அதிகரிக்கும் மின் தேவை

Updated : ஏப் 21, 2020 | Added : ஏப் 19, 2020
Share
Advertisement
சென்னை: தொழிற்சாலைகள் மீண்டும் செயல்படும்பட்சத்தில், மின் தேவை, வழக்கத்தை விட, கூடுதலாக, 2,000 மெகா வாட் வரை அதிகரிக்கும் என, மின் வாரியம் மதிப்பீடு செய்துள்ளது.தமிழக மின் தேவை, தினமும் சராசரியாக, 14 ஆயிரம் மெகா வாட் என்றளவில் உள்ளது. இது, கோடை காலத்தில், வழக்கத்தை விட அதிகரிக்கும்.அதன்படி, 2019 ஏப்., 3ல், மின் தேவை, 16 ஆயிரத்து, 151 மெகா வாட்டாக அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச அளவாக
ஊரடங்கு, மின் தேவை

சென்னை: தொழிற்சாலைகள் மீண்டும் செயல்படும்பட்சத்தில், மின் தேவை, வழக்கத்தை விட, கூடுதலாக, 2,000 மெகா வாட் வரை அதிகரிக்கும் என, மின் வாரியம் மதிப்பீடு செய்துள்ளது.

தமிழக மின் தேவை, தினமும் சராசரியாக, 14 ஆயிரம் மெகா வாட் என்றளவில் உள்ளது. இது, கோடை காலத்தில், வழக்கத்தை விட அதிகரிக்கும்.அதன்படி, 2019 ஏப்., 3ல், மின் தேவை, 16 ஆயிரத்து, 151 மெகா வாட்டாக அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச அளவாக உள்ளது. நடப்பாண்டில், பிப்ரவரி இறுதியில் இருந்து, வெயில் சுட்டெரிக்கிறது. இதனால், அம்மாத இறுதியில், மின் தேவை, 15 ஆயிரம் மெகா வாட்டை தாண்டியதால், இந்த கோடையில், 16 ஆயிரத்து, 500 மெகா வாட்டை தாண்டி, புதிய சாதனை படைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.

கொரோனா பரவுவதை தடுக்க, மார்ச், 25 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பள்ளிகள், கல்லுாரிகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் போன்றவை செயல்பட வில்லை. பலரும், வீடுகளில் முடங்கியுள்ளதால், தினசரி மின் தேவை, 11 ஆயிரம் மெகா வாட் என்றளவில் உள்ளது. இதனால், அதற்கு தேவையான மின்சாரத்தை பெறும் வகையில், மின் வாரியம், அனல், நீர் மின் உற்பத்தி மற்றும் மின் கொள்முதலை குறைத்து உள்ளது.


கூடுதலாக 2,000 மெகா வாட்


இந்நிலையில், ஊரடங்கின் ஒரு பகுதியை தளர்த்த, மாநில அரசுகளை, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. எந்தெந்த தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் இயங்குவது தொடர்பாக, தமிழக அரசு, இன்று அறிவிக்க உள்ளது.அவை, மீண்டும் செயல்படும் பட்சத்தில், மின் தேவை, கூடுதலாக, 1,500 - - 2,000 மெகா வாட் அதிகரிக்கும் என, மின் வாரியம் மதிப்பீடு செய்துள்ளது.

அதற்கு ஏற்ப, மின் உற்பத்தியை அதிகரிக்குமாறு, அனல் மின் நிலையங்களில் உள்ள பொறியாளர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும், மத்திய தொகுப்பு மற்றும் தனியார் மின் நிலையங்களில், மின் கொள்முதலை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X