பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,500 ஐ நெருங்கியது.

Updated : ஏப் 21, 2020 | Added : ஏப் 20, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பு, 1,500ஐ நெருங்கியது. நேற்று, ஒரே நாளில் புதிதாக, 105 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழகத்தில், தனிமைப்படுத்தப்பட்டு, வீட்டு கண்காணிப்பில், 21 ஆயிரத்து, 381 பேர் உள்ளனர். அரசு கண்காணிப்பு மையத்தில், 20 பேர் உள்ளனர். 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்து, 85 ஆயிரத்து, 253 பேர், இயல்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,500 ஐ நெருங்கியது.

சென்னை: தமிழகத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பு, 1,500ஐ நெருங்கியது. நேற்று, ஒரே நாளில் புதிதாக, 105 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழகத்தில், தனிமைப்படுத்தப்பட்டு, வீட்டு கண்காணிப்பில், 21 ஆயிரத்து, 381 பேர் உள்ளனர். அரசு கண்காணிப்பு மையத்தில், 20 பேர் உள்ளனர். 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்து, 85 ஆயிரத்து, 253 பேர், இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று, 5,840 பேருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், 105 பேருக்கு, புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக, சென்னையில், 50 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை, 40 ஆயிரத்து, 876 பேருக்கு, பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், கொரோனாவால், 1,477 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், 1,987 பேர், புதிதாக கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; சிகிச்சை முடிந்து, நேற்று 46 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மட்டும், 411 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் சிகிச்சை பெற்று வந்த, அண்டை மாநிலத்தை சேர்ந்த ஒருவர், நேற்று உயிரிழந்துள்ளார். கொரோனாவால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மாவட்டங்கள் எண்ணிக்கை

சென்னை 285கோவை 133திருப்பூர் 108திண்டுக்கல் 74ஈரோடு 70திருநெல்வேலி 62செங்கல்பட்டு 53நாமக்கல் 50திருச்சி 46திருவள்ளூர் 46மதுரை 46தஞ்சாவூர் 46தேனி 43நாகை 43கரூர் 42ராணிப்பேட்டை 39விழுப்புரம் 33துாத்துக்குடி 26திருவாரூர் 26கடலுார் 26சேலம் 24வேலுார் 22தென்காசி 22விருதுநகர் 19திருப்பத்துார் 17கன்னியாகுமரி 16திருவண்ணாமலை 12சிவகங்கை 11ராமநாதபுரம் 10நீலகிரி 9காஞ்சிபுரம் 9பெரம்பலுார் 4கள்ளக்குறிச்சி 3அரியலுார் 2மொத்தம் 1,477குணமடைந்தோர் பட்டியல்மருத்துவமனைகள் எண்ணிக்கைசென்னை ராஜிவ்காந்தி 19சென்னை ஸ்டான்லி 5சென்னை கீழ்ப்பாக்கம் 22சென்னை ஓமந்துாரார் 51வேலுார் 3திருவண்ணாமலை 10சேலம் 10ஐ.ஆர்.டி., பெருந்துறை 19கோவை இ.எஸ்.ஐ., 53திருச்சி 33தஞ்சாவூர் 1திருவாரூர் 16விழுப்புரம் 18கரூர் 53மதுரை 25தேனி 18சிவகங்கை 6திருநெல்வேலி 23துாத்துக்குடி 7ராஜா முத்தையா 5சென்னை டி.எம்.எஸ்., மருத்துவமனை 2தனியார் மருத்துவமனைகள் 12மொத்தம் 411

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.S.KRISHNAMURTHI - chennai,இந்தியா
21-ஏப்-202011:25:45 IST Report Abuse
G.S.KRISHNAMURTHI காலையில் காய்கறிகள் மளிகை வாங்க வெளியில் வருகிறார்களே மத்தபடி வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள் அடங்காத கும்பல்தான் கொரோனவை பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள் .திருந்தாத ஜென்மங்கள்
Rate this:
Cancel
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
20-ஏப்-202007:34:00 IST Report Abuse
Palanisamy Sekar எது சொன்னாலும் விதண்டாவாதம் செய்கின்ற கூட்ட்டங்கள் உள்ளவரை இப்படித்தான் பரவும். எவ்வளவு எடுத்து சொன்னாலும் பல நாடுகளில் பாதிப்பினை ஆதாரத்தோடு சொன்னாலும் கேட்கவே மாட்டாத ஜென்மங்கள் இருக்கும் வரை இது தொடரும். சட்டத்துக்கும் கட்டுப்பட மாட்டார்கள்..அரசாங்கம் என்னதான் செய்வது..அடித்தும் பார்த்தார்கள்..வீதியில் வைத்து தண்டனையும் கொடுத்துப்பார்த்தார்கள்..ஹ்ம்ம் திருந்தவே மாட்டேன் என்று சொன்னால் இதுபோன்ற ஆட்களுக்கு கொரோனா வருவதை எப்படி தடுக்க முடியும். இவர்களால் நல்ல மக்களுக்கும் பாதிப்பு என்கிறபோது இவர்களை கொண்டு சென்று தீவுகளில் எங்கேனும் விட்டுவிடலாமே. பன்றிக்கூட்டங்களை போல ஒருத்தரை ஒருத்தர் இடித்துக்கொண்டு வெளியே செல்வது அருவருப்பானது என்று கூட தெரியாத பீத்த ஜென்மங்கள் இருக்கும் வரை நம்மால் புலம்பத்தான் முடியும். ஊரடங்கு உத்தரவு போட்டவுடன் அதனை கண்காணிக்க ராணுவத்திடம் ஒப்படைத்திருந்தால் நிச்சயம் சொல்கின்றேன் இப்படி பரவவே பரவி இருக்காது. நம்ம ஜனங்களை பற்றி தெரிந்தும் கூட ஓட்டுக்காக வேஷம் போடுவது வீண். இந்த அறிவற்ற ஜென்மங்களுக்கு செலவிடும் மருத்துவ செலவை கூட அவர்களிடமிருந்தே வசூலிக்கவேண்டும்..இல்லையேல் இதுபோன்ற ஜென்மங்கள் திருந்தவே திருந்தாது..
Rate this:
Cancel
20-ஏப்-202007:20:03 IST Report Abuse
ஆப்பு அடேங்கப்பா... ஊரடங்கின் போதே இத்தனை கும்பல்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X