மூவர் கொலைவழக்கில் குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது: உத்தவ்

Updated : ஏப் 21, 2020 | Added : ஏப் 20, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
மூவர்  கொலைவழக்கில் குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது: உத்தவ்

மும்பை: மஹாராஷ்டிராவில் கடந்த வெள்ளியன்ற இரண்டு சாதுக்கள் உள்பட மூவரை திருடர்கள் என நினைத்து பொதுமக்கள் அடித்துக்கொன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையால் மஹாராஷ்டிராவில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதையடுத்து பல கிராம மக்கள் வெளியே செல்லவோ, வெளி ஆட்கள் உள்ளேவரமுடியாது.


latest tamil newsஇந்நிலையில் மும்பை அடுத்த கான்டிவாலி என்ற பகுதியில் கடந்த 17-ம் தேதி இரவில் ஒருகார் வந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த கிராமவாசிகள் பல்ஹார் மாவட்டம் கட்ஜின் என்ற பகுதியில் மறித்து காருக்குள் இருந்தவர்களை பயங்கர ஆதயங்களால் தாக்கினர்.இதில் காரில் வந்த மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.


latest tamil news
போலீசார் நடத்திய விசாரணையில், மூவரில் இருவர் சாதுக்கள் எனவும், ஒருவர் டிரைவர் எனவும், இவர்கள் குஜராத்தில் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு ஊர் திரும்பிய போது இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரியவருகிறது.

மகாராஷ்டிராவின் பால்ஹர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு காலத்தில் பலர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக வதந்தி பரவி வந்ததையடுத்து காரில் வந்தவர்கள் திருடர்கள் என நினைத்து கிராமவாசிகள் தாக்கியுள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய 100-க்கும் அதிகமானோரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்

இது குறித்து முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியது, மூவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் யாரும் தப்பிக்கமுடியாது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
24-ஏப்-202013:21:55 IST Report Abuse
Jayvee போடா போய் சோனியாகிட்ட வணங்கிக்கு.. அதுதுக்குத்தான் லாயக்கு நீ..
Rate this:
Cancel
SENTHIL - tirumalai,இந்தியா
23-ஏப்-202022:11:28 IST Report Abuse
SENTHIL POLISAR MUNNILIAYIL NANDANTAH KOLAI. ORU VARAM MUDINTHA NILAIYIL MUTHALVAR ARIKKAI. ENGE SELLUM INTHA PATHAI.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
21-ஏப்-202021:11:17 IST Report Abuse
Rajagopal இதை பற்றி பல தேசிய அளவில் வரும் நாளிதழ்களில் ஒரு செய்தியும் இல்லை. இது மட்டும் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தால் ஆர்ப்பாட்டங்கள் வெடித்திருக்கும். உலகம் முழுதும் கண்டனங்கள் தெரிவிக்கப் பட்டிருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X