அரிசி இல்லாததால் ராஜநாகத்தை வெட்டி சாப்பிட்ட வேட்டையர்கள்

Updated : ஏப் 20, 2020 | Added : ஏப் 20, 2020 | கருத்துகள் (50)
Share
Advertisement
கவுகாத்தி: அருணாச்சல பிரதேசத்தில் சாப்பிட அரிசி இல்லாததால் காட்டுக்குள் சென்று ராஜநாகத்தை வேட்டையாடி வெட்டி சமைத்து சாப்பிட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது.அருணாச்சல பிரதேசத்தில் ஏராளமான விஷமுள்ள பாம்பு இனங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அம்மாநிலத்தில் மூன்று பேர் கொண்ட வேட்டைக்காரர்கள் குழு, 12 அடி ராஜநாகத்தை கொன்று தோள்களில் வைத்துள்ளது போலவும், சமைத்து சாப்பிடுவது
King Cobra, Arunachal pradesh, northeast, Lockdown, wildlife, coronavirus lockdown,
ராஜநாகம், அருணாச்சலபிரதேசம், வேட்டையர்கள்,

கவுகாத்தி: அருணாச்சல பிரதேசத்தில் சாப்பிட அரிசி இல்லாததால் காட்டுக்குள் சென்று ராஜநாகத்தை வேட்டையாடி வெட்டி சமைத்து சாப்பிட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் ஏராளமான விஷமுள்ள பாம்பு இனங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அம்மாநிலத்தில் மூன்று பேர் கொண்ட வேட்டைக்காரர்கள் குழு, 12 அடி ராஜநாகத்தை கொன்று தோள்களில் வைத்துள்ளது போலவும், சமைத்து சாப்பிடுவது போலவும் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவியது. அந்த வீடியோவில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், தங்களிடம் அரிசி இல்லை எனவும், அதனால் காட்டுக்குள் எதையாவது தேடி சென்றோம், ராஜநாகத்தை கண்டுபிடித்து கொண்டு வந்தோம் எனவும் பேசிக்கொள்கின்றனர்.


latest tamil news


மேலும், இறைச்சியை நறுக்கி சுத்தம் செய்ய வாழை இலைகளை வைப்பது போலவும் வீடியோவில் பதிவாகியிருந்தது. சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய இந்த வீடியோவை கொண்டு, ராஜநாகத்தை வேட்டையாடியவர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் வழக்கு பதிவு கீழ் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பாதுகாக்கப்பட்ட ஊர்வன சட்டத்தின் கீழ் உள்ள ராஜநாகத்தை கொல்வது ஜாமின் வழங்க முடியாத குற்றம் எனவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mango Mani - Bangalore,இந்தியா
21-ஏப்-202023:29:03 IST Report Abuse
Mango Mani பாத்தா சீனா காரன் மாதிரிதான் இருக்கானுங்க...
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
25-ஏப்-202011:48:19 IST Report Abuse
Amal Anandanபேருக்கேத்தமாதிரிதான் அறிவும் இருக்கு....
Rate this:
Cancel
K V RAO - PUDUVAI,இந்தியா
21-ஏப்-202018:39:30 IST Report Abuse
K V RAO சைனாக்காரன் இந்தியா வில் பிறந்துவிட்டானோ
Rate this:
Cancel
maruthu pandi - Oru peru vendaam nanbaa,இந்தியா
21-ஏப்-202013:43:56 IST Report Abuse
maruthu pandi இந்தா ஆரம்பிச்சிட்டானுங்கள்ல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X