ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம்

Updated : ஏப் 20, 2020 | Added : ஏப் 20, 2020 | கருத்துகள் (128) | |
Advertisement
சென்னை: சென்னையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்த டாக்டரின் உடலை அடக்கம் செய்ய , எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தியதோடு, ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு, எதிர்ப்பு தெரிவித்துள்ள டாக்டர் ஒருவர், இது போன்று செய்ய வேண்டாம், அப்படி செய்வீர்கள் என கனவில் கூட நினைத்தது இல்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள
doctor, chennai, corona,coronavirus, covid 19, doctors attack, டாக்டர், கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்-19, தாக்குதல், கண்ணீர்கடிதம்

சென்னை: சென்னையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்த டாக்டரின் உடலை அடக்கம் செய்ய , எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தியதோடு, ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு, எதிர்ப்பு தெரிவித்துள்ள டாக்டர் ஒருவர், இது போன்று செய்ய வேண்டாம், அப்படி செய்வீர்கள் என கனவில் கூட நினைத்தது இல்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக பணிபுரிந்த 55 வயது நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கொரோனா உறுதி செய்யப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று(ஏப்.,19)உடல்நிலை மோசமடைந்ததால், டாக்டர் உயிரிழந்தார். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்த முதல் டாக்டர் இவர் ஆவார். மேலும் தமிழக பலி 16 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news
இதனிடையே, டாக்டரின் உடலை அடக்கம் செய்ய அண்ணா நகர் வேலங்காடு பகுதிக்கு கொண்டு சென்றனர். அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். சிலர் கற்கள் மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில், ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைந்தது. ஊழியர் காயமடைந்தார். இதனையடுத்து அப்பகுதிக்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, டாக்டர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. போராட்டம் தொடர்பாக சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


20 பேர் கைதுடாக்டரின் அடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்ட 2வ பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


latest tamil news

கண்ணீர் கடிதம்இது தொடர்பாக பரதீப் குமார் என்ற டாக்டர் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவு: இந்த கடிதத்தை கண்ணீருடனும், ரத்தத்திலும் எழுதுகிறேன். கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனாவை எதிர்த்து போராடும் ஒவ்வொரு டாக்டருக்காகவும் இந்த கடிதத்தை எழுதுகிறேன். இந்த எதிரியை எந்த குண்டுகளினாலும், புல்லட்களினாலும், ஏவுகணைகளினாலும் கொல்ல முடியாது. நண்பர்களே நாங்கள் வீரர்கள் இல்லை. நாங்களும்,உங்களை போன்றவர்கள் தான். இதனை தற்போது நீங்களும் அறிந்திருப்பீர்கள். ஏனென்றால், நீங்கள் அனைவரும் எங்களை தாக்கியுள்ளீர்கள். மிகவும் காயப்படுத்தியுள்ளீர்கள். அப்போது, டாக்டர்களுக்கு ரத்தம் வருவதை பார்த்திருப்பீர்கள். நாங்களும் உங்களை போன்றவர்கள் தான்.

எங்கள நரம்பியல் டாக்டர், கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போரில் உயிர்தியாகம் செய்துள்ளார். அவரது உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு கொண்டு சென்ற போது, 50க்கும் மேற்பட்ட மக்கள் எங்களை குச்சியாலும் கற்களாலும் தாக்கினீர்கள். ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கும், மாநகராட்சி சுகாதார ஊழியர்களுக்கும் காயம் ஏற்பட்டது. உண்மையில், இதனை பெற நாங்கள் தகுதியானவர்களா? நம்மில் எவருக்கும் இது நடக்கலாம் என நீங்கள் நினைக்கவில்லையா? அனைத்து டாக்டர்களும் மருத்துவமனையை மூடிவிட்டால் என்ன நடக்கும்? நீங்கள் எங்கு சிகிச்சைக்கு செல்வீர்கள்?

உங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், உங்கள் மகன் அல்லது மகள், கணவன், மனைவி, பெற்றோர்கள் கூட அருகில் வரமாட்டார்கள். உங்களை தொட மாட்டார்கள். இது உண்மை. ஆனால், நாங்கள் உங்களை கவனித்து கொள்வோம். சிகிச்சை அளிப்போம். இது போன்று, சமூகமாக இதனை நீங்கள் எங்களுக்க திருப்பி அளிக்க வேண்டும். மனிதநேயம் இறந்துவிட்டது. அது புத்துயிர் பெற வேண்டும். உங்களுக்கு நாங்கள் வேண்டும். தயவு செய்து, எங்களை தாக்க வேண்டாம். உங்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (128)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravi -  ( Posted via: Dinamalar Android App )
20-ஏப்-202021:41:48 IST Report Abuse
Ravi அடக்கம் செய்யக்கூடாது சொல்ல அந்த ..........(வாயில கெட்ட வார்த்தை வருது..) யாரு பவர் கொடுத்தது.. புடிச்சு உள்ள போட்டு மிதி..மிதி.னு மிதிக்கனும்... அந்த கும்பலுக்கு எந்த டாக்டரும் எந்த வைத்தியமும் பார்க்க கூடாது...
Rate this:
Cancel
நிலா - மதுரை,இந்தியா
20-ஏப்-202021:02:37 IST Report Abuse
நிலா மனிதநேயம் செத்துவிட்டது இந்த மாதிரி ஜனங்கள் கொரோனா வைரஸ்சை விட கொடியவர்கள்
Rate this:
Cancel
NATARAJAN - Coimbatore,இந்தியா
20-ஏப்-202019:41:12 IST Report Abuse
NATARAJAN எதுக்கெடுதலும் போராட்டம் போராட்டம் என மக்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் த்ராவிஷர்களை மக்கள் ஒதுக்கினால் தான் தமிழ் நாடு உருப்படும். ஒரு குடும்பம் ஆட்சிக்கு வர துடிக்கிறது. மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இன்று தமிழக அரசு மிக சிறந்த முறையில் செயல்பட்டுக் கொண்டிருப்பதை காண பொறுக்க முடியவில்லை இவர்களால். குறை சொல்லியே மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி குளிர் காய்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X