பிரதமரை தே... என்று திட்டிய யு டியூப் சேனல் நடத்துபவர் மீது வழக்கு| Dinamalar

பிரதமரை தே... என்று திட்டிய யு டியூப் சேனல் நடத்துபவர் மீது வழக்கு

Updated : ஏப் 21, 2020 | Added : ஏப் 20, 2020 | கருத்துகள் (289) | |
சென்னை: நாகர்கோவிலை ஆண்டனி என்பவர், தானேயில் வசித்து வருகிறார். இவர், பென் டாக்ஸ் என்ற பெயரில் யு டியூப் சேனல் நடத்தி வருகிறார். எப்போதும், பிரதமரையும், இந்து மத தலைவர்களையும் கேவலமாக பேசி பதிவிடுவது இவரது வழக்கம். அதன் உச்சகட்டமாக இப்போது, தே... ம... என்று பிரதமர், ஈஷா சத்குரு ஜக்கிவாசுதேவ், மாதா. அமிர்தானந்தமயி ஆகியோரை மிக கீழ்த்தரமாக மரியாதைக்குறைவாக சொல்லக்கூடாத
அவதூறு, வாலிபர், பிரதமர், வழக்குப்பதிவு

சென்னை: நாகர்கோவிலை ஆண்டனி என்பவர், தானேயில் வசித்து வருகிறார். இவர், பென் டாக்ஸ் என்ற பெயரில் யு டியூப் சேனல் நடத்தி வருகிறார். எப்போதும், பிரதமரையும், இந்து மத தலைவர்களையும் கேவலமாக பேசி பதிவிடுவது இவரது வழக்கம். அதன் உச்சகட்டமாக இப்போது, தே... ம... என்று பிரதமர், ஈஷா சத்குரு ஜக்கிவாசுதேவ், மாதா. அமிர்தானந்தமயி ஆகியோரை மிக கீழ்த்தரமாக மரியாதைக்குறைவாக சொல்லக்கூடாத வார்த்தைகளால் பேசி , தனது யுடியூப் வீடியோ வெளியிட்டுள்ளார்.


latest tamil newsஇது தொடர்பாக போலீசின் சைபர்கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், ஐபிசி சட்டம், சிசிபி சிஆர். எண். .113/2020 u/s 153A, 294(b), 505(2), ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்த பின்னர் அவர் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பெனட் ஆண்டனி, அந்த வீடியோவை நீக்கிவிட்டார்.

தனக்கு எதிராக எப்ஐஆர் பதியப்பட்டதால், பிரதமருக்கு எதிராக ஆபாசமாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டு இன்னொரு வீடியோ வெளியிட்டுள்ளார்.


போலீஸ் வேடிக்கை பார்ப்பது ஏன்


இவரை போல பலர் யுடியூப் சேனல்களில் பிரதமரையும், மற்ற தலைவர்களையும் வாய்க்கு வந்தபடி பேசுவது வாடிக்கையாகி விட்டது. யாருமே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், இவர்களுக்கு குளிர்விட்டு போய்விட்டது. இதனால் தான் ஆண்டனி போன்ற தற்குறிகள், நாட்டின் பிரதமர் பற்றி இப்படியெல்லாம் பேசியிருக்கிறார்.

இவர் எங்கு இருக்கிறார் என்று தெரிந்தபிறகும், இவரை கைது செய்யாமல் போலீஸ் வேடிக்கை பார்ப்பது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேட்கிறார்கள். இவர்களை போன்றவர்களை கைது செய்வதற்கு, போலீசாருக்கு நல்ல நாள், நல்ல நேரம் எதுவும் தேவைப்படுகிறதா?

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X