ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களுக்கு உதவ இபிஎஸ் வேண்டுகோள்

Updated : ஏப் 20, 2020 | Added : ஏப் 20, 2020 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை: ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களுக்கு உதவ வேண்டுமென, மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் இபிஎஸ் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் இபிஎஸ் எழுதிய கடிதம்: ஈரானின் சிரூயே, கிஷ், லாவன், பந்தர்-இமோகம், அசலுயே போன்ற இடங்களில் சிக்கியுள்ள இந்திய மீனவர்களுக்கு (அதில் 650 மீனவர்கள் தமிழகத்தை
Iran, Fishermen, Tamil nadu, CM, EPS, Palanisamy, tamil news, ஈரான், தமிழக மீனவர்கள், தமிழகம், முதல்வர், இபிஎஸ், கடிதம், அமைச்சர், ஜெய்சங்கர்

சென்னை: ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களுக்கு உதவ வேண்டுமென, மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் இபிஎஸ் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் இபிஎஸ் எழுதிய கடிதம்: ஈரானின் சிரூயே, கிஷ், லாவன், பந்தர்-இமோகம், அசலுயே போன்ற இடங்களில் சிக்கியுள்ள இந்திய மீனவர்களுக்கு (அதில் 650 மீனவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள்) உணவு, நீர் மற்றும் பிற அடிப்படைத் தேவைகளுக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக்கொள்வதற்காகவே இந்த கடிதத்தை எழுதிகிறேன். ஈரானில் உள்ள இந்திய தூதரகத்திற்கு மீனவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்கவும், அவர்கள் பாதுகாப்பாகவும் உடனடியாகவும் இந்தியாவுக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்யவும் பிப்.,28ம் தேதியில் எனது முந்தைய கடிதத்தில் நான் உங்களிடம் ஏற்கனவே கோரியிருந்தேன்.


latest tamil news


சிக்கித் தவிக்கும் மீனவர்களுக்கு உணவு, நீர் மற்றும் பிற அடிப்படைத் தேவைகளை வழங்குமாறு அவர்களது குடும்பத்தினரிடமிருந்து தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கைகள் வருகிறது. மேலும் அவர்கள் போதிய உணவு மற்றும் பிற அடிப்படைத் தேவைகள் இல்லாமல் வெளிநாட்டு மண்ணில் அவதிப்படுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளனர். எனவே, சிக்கித் தவிக்கும் மீனவர்களுக்கு உடனடியாக அடிப்படைத் தேவைகளை ஏற்பாடு செய்யுமாறு ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தை மீண்டும் வழிநடத்தவும், அவர்கள் விரைவில் இந்தியாவுக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்யவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiru - Madurai,இந்தியா
20-ஏப்-202016:27:40 IST Report Abuse
Thiru சொல்லி ரெண்டு மாசம் ஆக பொது. தூங்குறான ஜெயசங்கர்?
Rate this:
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
20-ஏப்-202015:56:44 IST Report Abuse
Nepolian S இவரு கடிதம் கிடைத்தவுடனேயே நடவடிக்கை எடுத்துருவார்கள்.... அடிமை.. ரெய்டுக்கு பயந்து தமிழ்நாட்டை அடகு வைத்து ஆட்சி செய்யும் உங்களின் கடிதம் அந்த அமைச்சர் கைகளுக்கே சேராது...
Rate this:
Cancel
தமிழன் என்று சொல்லி  தலை நிமிர்வோம் முதல்வரே அங்கு உள்ளவருக்கு துடிப்பது பார்ட்டுக்குரியது , அனால் இங்கு Dr ஐ கூட காப்பற்ற முடியவில்லையே அவர் இறநத உடலை கூட அடக்கம் செய்ய விடலை ,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X