ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களுக்கு உதவ இபிஎஸ் வேண்டுகோள்| TN CM seeks help to bring back fishermen stranded in Iran | Dinamalar

ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களுக்கு உதவ இபிஎஸ் வேண்டுகோள்

Updated : ஏப் 20, 2020 | Added : ஏப் 20, 2020 | கருத்துகள் (3) | |
சென்னை: ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களுக்கு உதவ வேண்டுமென, மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் இபிஎஸ் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் இபிஎஸ் எழுதிய கடிதம்: ஈரானின் சிரூயே, கிஷ், லாவன், பந்தர்-இமோகம், அசலுயே போன்ற இடங்களில் சிக்கியுள்ள இந்திய மீனவர்களுக்கு (அதில் 650 மீனவர்கள் தமிழகத்தை
Iran, Fishermen, Tamil nadu, CM, EPS, Palanisamy, tamil news, ஈரான், தமிழக மீனவர்கள், தமிழகம், முதல்வர், இபிஎஸ், கடிதம், அமைச்சர், ஜெய்சங்கர்

சென்னை: ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களுக்கு உதவ வேண்டுமென, மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் இபிஎஸ் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் இபிஎஸ் எழுதிய கடிதம்: ஈரானின் சிரூயே, கிஷ், லாவன், பந்தர்-இமோகம், அசலுயே போன்ற இடங்களில் சிக்கியுள்ள இந்திய மீனவர்களுக்கு (அதில் 650 மீனவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள்) உணவு, நீர் மற்றும் பிற அடிப்படைத் தேவைகளுக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக்கொள்வதற்காகவே இந்த கடிதத்தை எழுதிகிறேன். ஈரானில் உள்ள இந்திய தூதரகத்திற்கு மீனவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்கவும், அவர்கள் பாதுகாப்பாகவும் உடனடியாகவும் இந்தியாவுக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்யவும் பிப்.,28ம் தேதியில் எனது முந்தைய கடிதத்தில் நான் உங்களிடம் ஏற்கனவே கோரியிருந்தேன்.


latest tamil news


சிக்கித் தவிக்கும் மீனவர்களுக்கு உணவு, நீர் மற்றும் பிற அடிப்படைத் தேவைகளை வழங்குமாறு அவர்களது குடும்பத்தினரிடமிருந்து தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கைகள் வருகிறது. மேலும் அவர்கள் போதிய உணவு மற்றும் பிற அடிப்படைத் தேவைகள் இல்லாமல் வெளிநாட்டு மண்ணில் அவதிப்படுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளனர். எனவே, சிக்கித் தவிக்கும் மீனவர்களுக்கு உடனடியாக அடிப்படைத் தேவைகளை ஏற்பாடு செய்யுமாறு ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தை மீண்டும் வழிநடத்தவும், அவர்கள் விரைவில் இந்தியாவுக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்யவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X