பொது செய்தி

இந்தியா

அன்னிய முதலீடு கொள்கையில் திருத்தம்:இந்தியாவுக்கு சீனா கண்டனம்

Updated : ஏப் 22, 2020 | Added : ஏப் 20, 2020 | கருத்துகள் (39)
Share
Advertisement
புதுடில்லி :சில குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும், அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையில், இந்திய அரசு திருத்தம் செய்திருப்பது, உலக வர்த்தக நிறுவனத்தின் பாரபட்சமற்ற வர்த்தக கொள்கைக்கு எதிரானது என்றும், சுதந்திரமாக வர்த்தகம் செய்ய முடியாத சூழலை உருவாக்கி உள்ளதாகவும், சீனா குற்றஞ்சாட்டி உள்ளது.இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுதும்
அன்னிய முதலீடு கொள்கை,இந்தியாசீனா கண்டனம்

புதுடில்லி :சில குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும், அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையில், இந்திய அரசு திருத்தம் செய்திருப்பது, உலக வர்த்தக நிறுவனத்தின் பாரபட்சமற்ற வர்த்தக கொள்கைக்கு எதிரானது என்றும், சுதந்திரமாக வர்த்தகம் செய்ய முடியாத சூழலை உருவாக்கி உள்ளதாகவும், சீனா குற்றஞ்சாட்டி உள்ளது.

இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுதும் முழு அடைப்பு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், அன்னிய நேரடி முதலீடு கள் வாயிலாக, சில இந்திய நிறுவனங்களை கையகப்படுத்த, சீனா திட்டமிடுவதாக தகவல் வெளியானது. இதையடுத்து, இந்தியாவுடன் நில எல்லைகளை பகிரும் நாடுகள், இந்திய நிறுவனங்களில், முதலீடுகள் செய்வதற்கு முன்னதாக, அரசிடம் முறையான முன் அனுமதி பெற வேண்டும் என, அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையில், மத்திய அரசு மாற்றங்கள் செய்தது.

இது குறித்து, இந்தியாவுக்கான சீன துாதரகத்தின் செய்தி தொடர்பாளர், ஜி ரோங், நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:அன்னிய நேரடி முதலீட்டில், சில குறிப்பிட்ட நாடுகளுக்கு இந்தியா விதித்துள்ள கெடுபிடிகள், உலக வர்த்தக நிறுவனத்தின் பாரபட்சமற்ற வர்த்தக கொள்கைக்கு எதிரானதுஆகும். பாகுபாடு கொண்ட இந்த புதிய நடைமுறையை திருத்தி, அனைத்து நாடுகளின் முதலீடுகளையும் சமமாக கருதுவதோடு, திறந்த, நியாயமான மற்றும் சமமான வணிகச் சூழலை இந்தியா வளர்க்கும் என, நம்புகிறோம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
27-ஏப்-202021:48:00 IST Report Abuse
Tamilnesan உலக நாடுகள் அனைத்தும் சீன மீது கடுமையான பொருளாதார தடை விதிக்க வேண்டும், நிரந்தரமாக. அமெரிக்கா இவ்வளவு அவமானபட்டும் இந்த செயலை செய்யாது. அவர்கள் பாலிசி, "நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன், நீ (சீனா) அழுவுற மாதிரி நடி" என்பது தான்.
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
21-ஏப்-202022:02:20 IST Report Abuse
J.Isaac சீனாவை அனைத்து நாடுகளும் புறக்கணிக்க வேண்டும்.
Rate this:
Cancel
மு.க.ஸ்டாலின், ‘பாதை புதிது பயணம் புதிது - வாழ்க தமிழ்",இஸ்ல் ஆப் மேன்
21-ஏப்-202019:58:48 IST Report Abuse
மு.க.ஸ்டாலின், ‘பாதை புதிது பயணம் புதிது இவ்வளவு பேசும் நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள நட்ராஜ் பென்சில் எடுத்து பாருங்கள் made in china என்று இருக்கும் அவ்வளவு சீப் அவர்கள் LABOUR என்ன சொல்ல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X