மதுவுக்கு போலீஸ் புது பாதுகாப்பு!| Dinamalar

மதுவுக்கு போலீஸ் 'புது பாதுகாப்பு!'

Added : ஏப் 21, 2020
Share
'கொரோனா' தொற்றுக்கு பயந்து, நகர் வலம் செல்லாமல், வராண்டாவில் அமர்ந்து, அன்றைய நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா.சமூக வலைதள பதிவுகளை பார்த்துக் கொண்டிருந்த மித்ரா, ''அக்கா, ஏற்கனவே பயந்தபடி, நோய் தொற்று மூன்றாம் கட்டத்துக்கு வந்திருச்சு போலிருக்கு. 'வாட்ஸ்அப்' பதிவுகளை பார்க்கும்போது, ரொம்பவே பயமா இருக்கு,''''ஆமா மித்து, அதனாலதான், தனித்திரு;
 மதுவுக்கு போலீஸ் 'புது பாதுகாப்பு!'

'கொரோனா' தொற்றுக்கு பயந்து, நகர் வலம் செல்லாமல், வராண்டாவில் அமர்ந்து, அன்றைய நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா.சமூக வலைதள பதிவுகளை பார்த்துக் கொண்டிருந்த மித்ரா, ''அக்கா, ஏற்கனவே பயந்தபடி, நோய் தொற்று மூன்றாம் கட்டத்துக்கு வந்திருச்சு போலிருக்கு. 'வாட்ஸ்அப்' பதிவுகளை பார்க்கும்போது, ரொம்பவே பயமா இருக்கு,''''ஆமா மித்து, அதனாலதான், தனித்திரு; விழித்திரு; வீட்டிலிரு; விலகியிருன்னு சொல்றாங்க.

காய்கறி வாங்கணும்; இறைச்சி வாங்கணும்; பன் வாங்கணும்; பிரட் வாங்கணும்னு அடிக்கடி கடைகளுக்கு வர்றாங்க. வாகனங்களை பறிமுதல் செஞ்சாலும், பல வண்ணத்தில் பெயின்ட் பூசினாலும், அடங்க மாட்டேங்கிறாங்களே, ஊரடங்கை கடுமையா அமல்படுத்தினாங்கன்னா, நோய் பரவாம இருக்கும். இதே நிலைமை நீடிச்சா, சிக்கல் நீண்டுக்கிட்டே போகும்னு சொல்றாங்க. போலீஸ்காரங்க ஸ்டேஷன்லயே சண்டை போட்டாங்களாமே,''''அதுவா? ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷன்ல, ரெண்டு லேடி போலீஸ்களுக்கு இடையே, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை ஏற்பட்டிருக்கு.
ஸ்டேஷன்லேயே ஒருத்தரை ஒருத்தர் திட்டிக்கிட்டாங்களாம். எஸ்.பி., சுஜித்குமார் கவனத்துக்கு விஷயம் போனதும், ரெண்டு பேரையும் ஆயுதப்படைக்கு மாத்திட்டாராம்,''''ஆனா, சிட்டி லிமிட்டுக்குள்ள நடக்குறதே வேற. மதுக்கடையில சரக்குகளுக்கு பாதுகாப்பு இல்லாம இருந்தா, பக்கத்துல இருக்கற மண்டபத்துல அல்லது குடோன்ல இருப்பு வைக்க, உயரதிகாரிகள் 'அட்வைஸ்' பண்ணியிருக்காங்க.
''ஆர்.எஸ்.புரம், டி.பி., ரோட்டுல ஜன்தன் மலிவு விலை மருந்துக்கடைக்கு எதிரே இருக்குற, 'டாஸ்மாக்' மதுக்கடையில இருந்து, மதுபாட்டில்களை வேறிடத்துக்கு கொண்டு போக, வண்டியில ஏத்திக்கிட்டு இருந்தாங்க,''''ஆர்.எஸ்.புரம் ஸ்டேஷன்ல இருந்து, ஒரு எஸ்.ஐ.,யும், டிரைவரும் வந்திருக்காங்க. கடைக்குள்ள போயி, டிராவல் பேக் நிறைய சரக்கு பாட்டில்களை எடுத்துக்கிட்டு, கெளம்பியிருக்காங்க. அதை, மருந்துக்கடைக்கு வந்திருந்த ஒரு வாடிக்கையாளர் பார்த்திருக்காரு. அவரை, 'இங்கே என்ன பார்வை'ன்னு அதட்டிட்டு போயிருக்காங்க,''''மித்து, இதே மாதிரி பல லட்ச ரூபாய்க்கான சரக்குகளை, கள்ளச்சந்தையில வித்துருக்காங்க.
அரசியல்வாதிகளுக்கு, போலீஸ்காரங்களும், அதிகாரிகளும் உடந்தையா இருக்காங்கன்னு சொல்றாங்க. இதே மாதிரி, அன்னுார், சூலுார் ஏரியாவிலும் கள்ளச்சந்தையில மதுபான விற்பனை அமோகமாக நடக்குதாம். போலீஸ்காரங்க கண்டுக்கறதில்லையாம்'' என்றபடி, 'டிவி'யை, 'ஆன்' செய்தாள் சித்ரா. அப்போது, 'மே 3 வரை ஊரடங்கில் எவ்வித தளர்வும் இருக்காது; தற்போதைய கட்டுப்பாடு தொடரும்' என்கிற தமிழக அரசின் அறிவிப்பு, முக்கிய செய்தியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
''அக்கா, தளர்வு கிடையாது; கட்டுப்பாடு தொடரும்னு சொல்லியிருக்காங்க. என்ன கட்டுப்பாடு இருக்குன்னு தெரியலை. தொழில் நிறுவனங்கள் மூடியிருக்கு; தொழிலாளர்கள் வேலையில்லாம இருக்காங்க. அவ்ளோதான் நடந்திருக்கு. மத்தபடி, ஜனங்க நடமாட்டம் குறையலை. வீட்டை விட்டு வெளியே வராதபடி தடுத்தால் மட்டுமே, நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும்,''''ஆமாப்பா, நீ சொல்றதும் சரிதான். பொள்ளாச்சியில, ஒரே ஆம்புலன்சுல, 26 பேரை அழைச்சிட்டு போன சம்பவத்தை கேள்விப்பட்டதும், கலெக்டர் ரொம்பவும் டென்ஷனாகிட்டாராம்.
சுகாதாரத்துறை அதிகாரிகளை கடிந்து கொண்டாராம்,''''அதிருக்கட்டும், அரசு மருத்துவமனை டீனுக்கு, சுகாதாரத்துறையில நெருக்கமானவங்க இருந்தும், எப்படி, 'டிரான்ஸ்பர்' செஞ்சாங்க. இந்த விஷயத்துல, வேற ஏதாச்சும் தகவல் இருக்கா,'' என, நோண்டினாள் மித்ரா.''பயிற்சி மருத்துவ மாணவர்கள், ஒவ்வொரு சம்பவத்தையும், சுகாதாரத்துறை செயலருக்கு, 'டுவிட்டரில்' பதிவு போட்டாங்க. அவரும் பதில் கொடுத்திட்டு இருந்தாரு. இந்த பிரச்னை, 'சென்ட்ரல் கவர்மென்ட்' கவனத்துக்கு போயிருக்கு; டில்லியில பேச ஆரம்பிச்சதும், 'ஸ்டேட் கவர்மென்ட்'டுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கு.
அதனால, டிரான்ஸ்பர் ஆர்டர் வந்திருக்கு,''''போத்தனுார்ல ஒரு லேடி டாக்டர், 'மாஸ்க்' கொடுக்கலைன்னு, 'வாட்ஸ்அப்' குழுக்கள்ல, தகவல் பரப்பிட்டு இருந்தாங்களே,''''அந்த பதிவை பத்தி, நானும் விசாரிச்சேன். அவுங்க மாமியாருக்கு, 'செக்கப்' செஞ்சிருக்காங்க; 'நெகட்டிவ்'ன்னு ரிசல்ட் வந்திருக்கு. ஆனா, 'பாசிட்டிவ்'ன்னு தகவல் பரப்பிட்டாங்க. 'பாசிட்டிவ்'னா, ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயி, தனிமைப்படுத்திடுவாங்க.
ஆனா, அப்படி நடக்கலை. நடக்காத விஷயத்தை, 'வாட்ஸ்அப்'புல பரப்பக்கூடாதுன்னு, அந்த டாக்டரை, உயரதிகாரிகள், எச்சரிக்கை பண்ணியிருக்காங்க,''''ஓ... அப்படியா... விஷயம்,''''கார்ப்பரேஷன் சங்கதி ஏதாச்சும் இருக்கா,''''கொரோனா வைரஸ் பிரச்னைக்கு அப்புறம், அதிகாரிகள் பலரும் ஆபீஸ் பக்கமே வர்றதில்லை.
'ஹெல்த்' டிபார்ட்மென்ட் மட்டும் ராத்திரி, பகலா செயல்படுது. 'ஸ்மார்ட் சிட்டி' ஆபீசுக்கு சில அதிகாரிங்க வந்துட்டு போறாங்க. நிர்வாக பொறியாளர், உதவி நிர்வாக பொறியாளர் அந்தஸ்துல இருக்கற லேடி அதிகாரிங்க, ஆபீஸ் பக்கமே எட்டிப் பார்க்குறதில்லை,''''அக்கா, உள்ளாட்சி துறையில இருந்து, 'கொரோனா வாரியர்ஸ்'னு, 'வாட்ஸ்அப்'புல வீடியோவும், பதிவும் பரப்பிட்டு இருக்காங்க. துாய்மை பணியாளர்களே கேடயமா இருந்து, நம்மை பாதுகாக்குறாங்கன்னு பெருமிதமா பதிவு போட்டிருக்காங்க,'' என்றபடி, சமையலறைக்குள் நுழைந்தாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X