பூஜாரிகளிடம் வரம் கேட்ட அதிகாரி!| Dinamalar

'பூஜாரிகளிடம் 'வரம்' கேட்ட அதிகாரி!'

Updated : ஏப் 21, 2020 | Added : ஏப் 21, 2020 | |
கொரோனா ஊரடங்கை பொருட்படுத்தாமல், ரோட்டில் மக்கள் நடமாடி கொண்டிருந்தனர். வீட்டு மாடியில் இருந்து அதனை பார்த்தவாறு நின்று கொண்டிருந்தாள், சித்ரா.''சித்து, ஒனக்கு போன்,'' என அவள் அம்மா போனை கொடுத்து நகர்ந்தாள். டிஸ்பிளேயை பார்த்தவாறே, ''சொல்லுடி மித்து... எங்க ரெண்டு நாளா போனை காணோம்,'' என்றாள்.''நான் எங்கக்கா போறேன். செமஸ்டருக்கு பிரிபேர் பண்ணிட்டு
'பூஜாரிகளிடம் 'வரம்' கேட்ட அதிகாரி!'

கொரோனா ஊரடங்கை பொருட்படுத்தாமல், ரோட்டில் மக்கள் நடமாடி கொண்டிருந்தனர். வீட்டு மாடியில் இருந்து அதனை பார்த்தவாறு நின்று கொண்டிருந்தாள், சித்ரா.''சித்து, ஒனக்கு போன்,'' என அவள் அம்மா போனை கொடுத்து நகர்ந்தாள். டிஸ்பிளேயை பார்த்தவாறே, ''சொல்லுடி மித்து... எங்க ரெண்டு நாளா போனை காணோம்,'' என்றாள்.
''நான் எங்கக்கா போறேன். செமஸ்டருக்கு பிரிபேர் பண்ணிட்டு இருந்தேன்,''''ஓ... அதானே பார்த்தேன். ஏன்டி மித்து, 'மாஜி'க்கள் பண்ணின வேலையை கேட்டீயா?'''என்னக்கா....''''ஊரடங்கு அமலுக்கு வந்தன்னைக்கு, ஆதரவற்றவங்க சிலரை, ரெவின்யூ அதிகாரிகள் தேவாங்கபுரம் பள்ளிக்கூடத்துல தங்க வச்சு, சாப்பாடு கொடுத்துச்சு''''கொஞ்சம் துாரமா இருக்கறதால, குமார் நகர் பள்ளிக்கூடத்துக்கு மாத்திடலாம்னு, 30 பேரை 'ஷிப்ட்' செஞ்சாங்க. உடனே, அப்பகுதியில் வசிக்கிற ஆளுங்கட்சி மாஜியும், தோழர் ஒருத்தரும், எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்க,''''அவங்களை இங்க கொண்டு வந்து விட்டா, எங்களுக்கும் கொரோனா வந்திரும்; வேறு எங்காவது தங்க வையுங்க'னு அதிகாரிகள மிரட்டியதால், மறுபடியும் பழைய இடத்துக்கே கூட்டிட்டு போயிட்டாங்களாம்,''''இந்த அரசியல்வாதிகளே இப்படித்தான்க்கா. இப்டி 'செல்பிஷ்'ஆக இருக்காங்க. இவங்களை மாதிரிய, மாவட்ட வி.ஐ.பி., யோட ஆட்கள் ஆட்டம் ஜாஸ்தியா இருக்காம்,''''ஏன்... என்னாச்சு?''''அரசு கேபிள் ஆபீசுல, உடுமலையை சேர்ந்த தற்காலிக ஊழியர்கள் வைக்கறதுதான் சட்டமாம்.
இவங்களுக்கு, தனியார் ஆப்ரேட்டர்கள், 'சோப்' போட்டு, அரசு 'செட்டாப் பாக்ஸ்' கொடுக்க முடியாத அளவுக்கு பண்ணிடறாங்க,''''அப்பறம், 'அரசு 'செட்டாப் பாக்ஸ்' ஓட்டிட்டு இருக்கற ஆப்ரேட்டர்கள் லைன்ல கைய வச்சிடறாங்க. கேபிள் ஒயரை அறுக்காம, டெக்னிக்கா, 'ஜங்ஷன் பாக்ஸ்'-ல் கை வச்சிடறாங்க. ஒவ்வொரு மாசமும், மாசக்கடைசியிலதான், இப்படி பண்றாங்களாம். அப்பத்தானே, அரசு கேபிள் ஆப்ரேட்டர், கட்டண வசூலுக்கு மக்கள்கிட்ட போறதுக்கே பயப்படுவாங்கன்னு, திட்டம் போட்டு செய்றாங்களாம்,''''இவங்களை கேட்கறதுக்கு ஆளே இல்லாம போச்சு. பாக்கலாம், காலம் இப்படியே இருக்காது மித்து,'' என்ற சித்ரா, ''கோவில் பூஜாரிகள்கிட்டயும், லஞ்சம் கேட்டாங்களாம். உனக்கு தெரியுமா?'' கேள்வி கேட்டாள்.'ஆமாங்க்கா... இந்து அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர் ஆபீசில், நலவாரிய பதிவு புதுப்பிக்க, பூஜாரிகள் போயிருக்காங்க. அதுக்கு ஒவ்வொருத்தரும், 500 கொடுத்தாதான் காரியம் நடக்கும்னு 'கட் அண்ட் ரைட்'டா சொன்னாங்களாம்,''''அப்படி பணம் குடுத்துதான், பண்ண வேண்டிய அவசியமில்லை'னு சொல்லிட்டு பலரும் புதுப்பிக்கலையாம். இப்ப என்னடான்னா, பூஜாரிகளுக்கு, அரசு அறிவிச்ச, ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்குமானு தெரியலை'னு புலம்பறாங்களாம்,''''மித்து, இந்த அதிகாரிகளுக்கு எதிலையாவது பணம் வந்தா போதும்னு, நினைக்கறாங்க. இவங்க எப்ப திருந்துவாங்கன்னு தெரியலடி,''''அவங்க எங்கீங்க்கா திருந்த போறாங்க... இப்ப பாருங்க, ''கொண்டாத்தாள் குடியிருக்கிற ஊரில், சூரியக்கட்சி நிர்வாகிக்கு செம டோஸ் விழுந்துதாம்,'' என்றாள்.
''ஓ... அந்த, 130 ஓசி சாப்பாடு பார்ட்டியா...?''''யெஸ்... இந்த விஷயத்தை கேள்விப்பட்டு, சென்னையிலிருந்த ஒருத்தர், போன் போட்டு, 'ஆத்து ஆத்துன்னு ஆத்திட்டாராம். ஒருமையில பேசி, செம டோஸ் விட்டாராம். இதேமாதிரி பலரும் போன் போட்டு, கலாய்க்கிறாங்களாம்,''''அப்புறம் என்னாச்சுங்க்கா...''''வெறுங்கையில் மொழம் போட்ட ஆளுக்கு, வெல்லம் சாப்பிடறமாதிரி, தலைவர், துணை தலைவருன்னு ரெண்டு பதவி கிடைச்சா விடுவாரா? அதான், மனைவி தலை வருங்கிறதால, ரொம்ப ஆட்டமாம். அந்த கட்சியோட தலைமைக்கு சொல்லியும் கேட்கலையாம்,''''குரங்கு கையில, பூமாலை கெடைச்சா என்னாகும்'னு, கோபட்ட மெம்பர்ஸ், 'சரி ஏதாவது விவகாரத்தில சிக்கினால், போஸ்டிங் காலி செஞ்சிடாலாமுன்னு', காத்திட்டிருங்காங்களாம்,'' என சித்ரா பேசி கொண்டிருந்த போது, போனில், 'வேலுசாமி' காலிங் என இரண்டாவது அழைப்பு வந்தது.அதனை துண்டித்த சித்ரா, ''மித்து, தாரா...வில், என்ன விசேஷம்?'' கேள்வி கேட்டாள்.''ஆமாங்க்கா... சொல்ல மறந்திட்டேன்.
அந்த ஸ்டேஷன் அதிகாரிக்கு சமீபத்தில் 'பர்த் டே' கொண்டாடினாராம். சமூக இடைவெளியை பின்பற்றாமல், ஸ்டேஷனில், 15 கிலோ கேக் வெட்டி தடபுடல் பண்ணிட்டாராம்,''''உலகமே கொரோனாவுக்கு பயந்து இருக்கும் போது, அதிகாரி கூட பயமில்லாமல், கூட்டத்தை கூட்டி 'பர்த்டே' கொண்டாட்டம் அவசியமான்னு, ஊர் பூரா ஒரே பேச்சா இருக்குதாம்,''''இதெல்லாம் டூ மச்'டி'' என்ற சித்ரா, வெளியே எட்டி பார்த்து விட்டு, ''அம்மா... கோபிநாத் அங்கிள் வந்திருக்காரு,'' போய்ப்பாருங்க,'' என்றாள்.
''யாருக்கா... வந்திருக்கிறாங்க?'' என மித்ரா கேட்டதும், ''அட... அடுத்த தெருவில இருக்காரு. புக்ஸ் வாங்க வந்திருக்காரு,'' சித்ரா பதிலளித்தாள்.''அக்கா... உடுமலையில், பெட்டி பெட்டியா சரக்கை போலீஸ்காரங்க லவட்டிட்டாங்களாம், தெரியுங்களா?''''இல்லையே''''யூனியன் ஆபீஸ் பக்கதிலுள்ள ஒரு கடையிலிருந்து 'சரக்கு' பெட்டிகளை வேற பக்கம் மாத்தினாங்களாம். இது தெரிஞ்சுகிட்ட போலீஸ்காரங்க பலர் கைக்கு கிடைச்சவரைக்கும் 'அபேஸ்' பண்ணிட்டு போனாங்களாம்,''''இதில், கொடுமையான விஷயம் என்னன்னு கேட்டின்னா, ஒற்றர்படையை சேர்ந்த ஒருத்தரு, 'சரக்கு'பாட்டில்களை துாக்கிட்டு போய், பக்கத்து ஊரிலுள்ள அட்டை கம்பெனில வச்சுட்டு வந்துருக்காராம். ஆனால, இந்த மேட்டர் ஐ.ஜி., காதுக்கும் போயிடுச்சாம்,''''இதை தெரிஞ்சுகிட்ட எல்லா போலீசும் ஒன்னா சேர்ந்து, கடைக்கு பக்கத்துல இருந்த சிசிடிவி கேமராவின் 'டிவிஆரை' துாக்கி அழிச்சிட்டாங்களாம்,''''ஏன்டி மித்து, தப்பு செஞ்சவங்கதான் ஆதாரங்களை அழிக்கணும். அதனால, அழிச்சிட்டாங்க போல,'' என சிரித்த சித்ரா, ''ஓ.கே., மித்து, மழை வர்ற மாதிரி இருக்குது. நாளைக்கு பேசலாம்,'' என்றவாறு இணைப்பை துண்டித்தாள்.ரோனா ஊரடங்கை பொருட்படுத்தாமல், ரோட்டில் மக்கள் நடமாடி கொண்டிருந்தனர். வீட்டு மாடியில் இருந்து அதனை பார்த்தவாறு நின்று கொண்டிருந்தாள், சித்ரா.''சித்து, உனக்கு போன்,'' என அவள் அம்மா போனை கொடுத்து நகர்ந்தாள். டிஸ்பிளேயை பார்த்தவாறே, ''சொல்லுடி மித்து... எங்க ரெண்டு நாளா போனை காணோம்,'' என்றாள்.''நான் எங்கக்கா போறேன். செமஸ்டருக்கு பிரிபேர் பண்ணிட்டு இருந்தேன்,''''ஓ... அதானே பார்த்தேன். ஏன்டி மித்து, 'மாஜி'க்கள் பண்ணின வேலையை கேட்டீயா?'''என்னக்கா....''''ஊரடங்கு அமலுக்கு வந்தன்னைக்கு, ஆதரவற்றவங்க சிலரை, ரெவின்யூ அதிகாரிகள் தேவாங்கபுரம் பள்ளிக்கூடத்துல தங்க வச்சு, சாப்பாடு கொடுத்தாங்க.
''''கொஞ்சம் துாரமா இருக்கறதால, குமார் நகர் பள்ளிக்கூடத்துக்கு மாத்திடலாம்னு, 30 பேரை 'ஷிப்ட்' செஞ்சாங்க. உடனே, அப்பகுதியில் வசிக்கிற ஆளுங்கட்சி மாஜியும், தோழர் ஒருத்தரும், எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்க,''''அவங்களை இங்க கொண்டு வந்து விட்டா, எங்களுக்கும் கொரோனா வந்திரும்; வேறு எங்காவது தங்க வையுங்க'னு அதிகாரிகள மிரட்டியதால், மறுபடியும் பழைய இடத்துக்கே கூட்டிட்டு போயிட்டாங்களாம்,''''இந்த அரசியல்வாதிகளே இப்படித்தான்க்கா. இப்டி 'செல்பிஷ்'ஆக இருக்காங்க.
இவங்களை மாதிரிய, மாவட்ட வி.ஐ.பி., யோட ஆட்கள் ஆட்டம் ஜாஸ்தியா இருக்காம்,''''ஏன்... என்னாச்சு?''''அரசு கேபிள் ஆபீசுல, உடுமலையை சேர்ந்த தற்காலிக ஊழியர்கள் வைக்கறதுதான் சட்டமாம். இவங்களுக்கு, தனியார் ஆப்ரேட்டர்கள், 'சோப்' போட்டு, அரசு 'செட்டாப் பாக்ஸ்' கொடுக்க முடியாத அளவுக்கு பண்ணிடறாங்க,''''அப்பறம், 'அரசு 'செட்டாப் பாக்ஸ்' ஓட்டிட்டு இருக்கற ஆப்ரேட்டர்கள் லைன்ல, கேபிள் ஒயரை அறுக்காம, டெக்னிக்கா, 'ஜங்ஷன் பாக்ஸ்'-ல் கை வச்சிடறாங்க. ஒவ்வொரு மாசமும், மாசக்கடைசியிலதான், இப்படி பண்றாங்களாம். அப்பத்தானே, அரசு கேபிள் ஆப்ரேட்டர், கட்டண வசூலுக்கு மக்கள்கிட்ட போறதுக்கே பயப்படுவாங்கன்னு, திட்டம் போட்டு செய்றாங்களாம்,''''இவங்களை கேட்கறதுக்கு ஆளே இல்லாம போச்சு. பாக்கலாம், காலம் இப்படியே இருக்காது மித்து,'' என்ற சித்ரா, ''கோவில் பூஜாரிகள்கிட்டயும், லஞ்சம் கேட்டாங்களாம். உனக்கு தெரியுமா?'' கேள்வி கேட்டாள்.'ஆமாங்க்கா... இந்து அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர் ஆபீசில், நலவாரிய பதிவு புதுப்பிக்க, பூஜாரிகள் போயிருக்காங்க.
அதுக்கு ஒவ்வொருத்தரும், 500 கொடுத்தாதான் காரியம் நடக்கும்னு 'கட் அண்ட் ரைட்'டா சொன்னாங்களாம்,''''அப்படி பணம் குடுத்துதான், பண்ண வேண்டிய அவசியமில்லை'னு சொல்லிட்டு பலரும் புதுப்பிக்கலையாம். இப்ப என்னடான்னா, பூஜாரிகளுக்கு, அரசு அறிவிச்ச, ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்குமானு தெரியலை'னு புலம்பறாங்களாம்,''''மித்து, இந்த அதிகாரிகளுக்கு எதிலையாவது பணம் வந்தா போதும்னு, நினைக்கறாங்க.
இவங்க எப்ப திருந்துவாங்கன்னு தெரியலடி,''''அவங்க எங்கீங்க்கா திருந்த போறாங்க... மித்து, தாரா...வில், என்ன விசேஷம்?'' கேள்வி கேட்டாள்.''ஆமாங்க்கா... சொல்ல மறந்திட்டேன். அந்த ஸ்டேஷன் அதிகாரிக்கு சமீபத்தில் 'பர்த் டே' கொண்டாடினாராம். சமூக இடைவெளியை பின்பற்றாமல், ஸ்டேஷனில், 15 கிலோ கேக் வெட்டி தடபுடல் பண்ணிட்டாராம்,''''உலகமே கொரோனாவுக்கு பயந்து இருக்கும் போது, அதிகாரி கூட பயமில்லாமல், கூட்டத்தை கூட்டி 'பர்த்டே' கொண்டாட்டம் அவசியமான்னு, ஊர் பூரா ஒரே பேச்சா இருக்குதாம்,''''இதெல்லாம் டூ மச்'டி'' என்ற சித்ரா, வெளியே எட்டி பார்த்து விட்டு, ''அம்மா... கோபிநாத் அங்கிள் வந்திருக்காரு,'' போய்ப்பாருங்க,'' என்றாள்.''யாருக்கா... வந்திருக்கிறாங்க?'' என மித்ரா கேட்டதும், ''அட... அடுத்த தெருவில இருக்காரு. புக்ஸ் வாங்க வந்திருக்காரு,'' சித்ரா பதிலளித்தாள்.''அக்கா... உடுமலையில், பெட்டி பெட்டியா சரக்கை போலீஸ்காரங்க லவட்டிட்டாங்களாம், தெரியுங்களா?''''இல்லையே''''யூனியன் ஆபீஸ் பக்கதிலுள்ள ஒரு கடையிலிருந்து 'சரக்கு' பெட்டிகளை வேற பக்கம் மாத்தினாங்களாம்.
இது தெரிஞ்சுகிட்ட போலீஸ்காரங்க பலர் கைக்கு கிடைச்சவரைக்கும் 'அபேஸ்' பண்ணிட்டு போனாங்களாம்,''''இதில், கொடுமையான விஷயம் என்னன்னு கேட்டின்னா, ஒற்றர்படையை சேர்ந்த ஒருத்தரு, 'சரக்கு' பாட்டில்களை துாக்கிட்டு போய், பக்கத்து ஊரிலுள்ள அட்டை கம்பெனில வச்சுட்டு வந்துருக்காராம். ஆனால, இந்த மேட்டர் ஐ.ஜி., காதுக்கும் போயிடுச்சாம்,''''இதை தெரிஞ்சுகிட்ட எல்லா போலீசும் ஒன்னா சேர்ந்து, கடைக்கு பக்கத்துல இருந்த 'சிசிடிவி கேமரா'வின் 'டிவிஆரை' துாக்கி அழிச்சிட்டாங்களாம்,''''ஏன்டி மித்து, தப்பு செஞ்சவங்கதான் ஆதாரங்களை அழிக்கணும். அதனால, அழிச்சிட்டாங்க போல,'' என சிரித்த சித்ரா, ''ஓ.கே., மித்து, மழை வர்ற மாதிரி இருக்குது. நாளைக்கு பேசலாம்,'' என்றவாறு vgtஇணைப்பை துண்டித்தாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X