மத்திய குழு ஆய்வுக்கு திரிணமுல் காங்., கண்டனம்

Updated : ஏப் 22, 2020 | Added : ஏப் 22, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement
corona, coronavirus, corona update, corona deaths, corona toll, corona cases, health ministry, fight against corona, corona outbreak, covid-19 outbreak, coronavirus outbreak, lockdown, curfew, TMC, Centre, Trinamool, Trinamool congress, மத்திய குழு, ஆய்வு, திரிணமுல் காங்., கண்டனம்

புதுடில்லி, ஊரடங்கு உத்தரவு மீறப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய, மேற்கு வங்கத்திற்கு, மத்திய அரசு, குழு அனுப்பியுள்ளதற்கு, திரிணமுல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில், ஊரடங்கு உத்தரவு மீறப்படுவதாக, மத்திய அரசுக்கு புகார்கள் வந்தன.


latest tamil news
இதையடுத்து, இந்த மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு, ஊரடங்கு மீறப்படு கிறதா என்பதை ஆய்வு செய்ய, குழுக்களை அனுப்பியுள்ளது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் ஆய்வு செய்ய, மத்திய குழு வந்துள்ளதற்கு, திரிணமுல் காங்., கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. திரிணமுல் கட்சியின் மூத்த தலைவர்கள், டெரக் ஓ பிரையன், சுதீப் பண்டோபாத்யாய் ஆகியோர், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக கூறியதாவது:ஊரடங்கு மீறப்படுகிறதா என்பதை கண்காணிக்க, மத்திய அரசு ஒரு குழுவை அனுப்பியுள்ளது சர்வாதிகாரத்தனமானது.

குழு வந்து, மூன்று மணி நேரம் கழித்து தான், அது பற்றிய தகவல், முதல்வர் மம்தாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தமிழகம், குஜராத், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு, மத்திய அரசு, குழுக்களை அனுப்பாதது ஏன்... ஊரடங்கில், அரசியல் செய்வது மத்திய அரசு தான். கொரோனா பரவலை தடுக்க, மேற்கு வங்க அரசு, பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
22-ஏப்-202014:52:36 IST Report Abuse
sundarsvpr மம்தாவுக்கு முன் ஆண்ட பொதுடைமை கட்சி நேரிடையாக போதும். ஆனால் மம்தா ஆணவத்தை கையிலெடுத்துக்கொண்டு மத்திய அரசை மன்னிக்கவும் காழ்புணர்ச்சியில் மோடி அரசுக்கு ஒத்துழையாமை என்ற கூர் மலிந்த நடவடிககை கையில் எடுத்துள்ளார் . கசாப்பு கடைக்காரனிடம் அகப்பட்ட ஆடுபோல் வங்காள மக்கள் உள்ளனர்
Rate this:
Cancel
M.P.Madasamy - Trivandrum,இந்தியா
22-ஏப்-202014:52:12 IST Report Abuse
M.P.Madasamy ஊரடங்கு உத்தரவு மீறப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து கண்காணிக்க உரிமை உள்ளது போல ,கொரோனா பாதிப்புக்கு தகுந்தவாறு அந்தந்த மாநிலங்களுக்கு நிவாரண நிதி ஒதுக்கும் கடமையும் உள்ளது.
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
22-ஏப்-202013:16:02 IST Report Abuse
GMM மத்திய குழுவை மே. வங்க மாநிலத்திற்கு கட்டுப்பாடு தொடர்பாக ஆய்விற்கு அனுப்பியது எப்படி சர்வாதிகாரம் ஆகும்? முடிவு மாநிலத்திற்கு சாதகமாக கூட இருக்கலாம். உங்கள் கண்டனம் தலைமை ஆசிரியரை வகுப்பு ஆசிரியர் எதிர்பதற்கு சமம். சீனா போன்ற சர்வாதிகாரம் செய்ய மம்தா முற்படுகிறார். நாட்டின் பாதுகாப்பு மத்திய அரசின் பொறுப்பு. அதற்கு கூடுதல் அதிகாரம் தேவை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X