'கொரோனாவுக்கு சீனாவே பொறுப்பு': இழப்பீடு கேட்டு அமெரிக்கா வழக்கு

Updated : ஏப் 22, 2020 | Added : ஏப் 22, 2020 | கருத்துகள் (21) | |
Advertisement
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்றை வேண்டுமென்றே பரப்பி உலகை ஏமாற்றியதாக, சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன அரசு மீது, அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிசவுரி மாகாண தலைமை வழக்கறிஞர் எரிக் ஷ்மிட் கூறுகையில், 'கொரோனா வைரஸ் தொற்று குறித்து, முன்னரே எச்சரிக்கை விடுத்த மருத்துவர்களையும், செய்தியாளர்களையும் சீனா காணாமல் ஆக்கியது.

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்றை வேண்டுமென்றே பரப்பி உலகை ஏமாற்றியதாக, சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன அரசு மீது, அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.


latest tamil news

அமெரிக்காவின் மிசவுரி மாகாண தலைமை வழக்கறிஞர் எரிக் ஷ்மிட் கூறுகையில், 'கொரோனா வைரஸ் தொற்று குறித்து, முன்னரே எச்சரிக்கை விடுத்த மருத்துவர்களையும், செய்தியாளர்களையும் சீனா காணாமல் ஆக்கியது. கொரோனா பரவலைத் தடுக்கவும் அவர்கள் எதுவும் செய்யவில்லை. மேலும் கொரோனா தொற்று குறித்து உலகுக்கு பொய் சொல்லியது சீனா. இதனால் தான், இந்த வைரசால் மிகப் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு சீனா பொறுப்பேற்க வேண்டும். மிசவுரி மாகாணத்தில் நிகழ்ந்த மரணங்கள், பாதிப்புகள், பொருளாதார இழப்புகளுக்கு சீன அரசு இழப்பீடு வழங்க வேண்டும்' என்றார்.




latest tamil news


'வெளிநாட்டு அரசுகளுக்கு, அமெரிக்க அரசு சட்டப் பாதுகாப்பு வழங்குவதால், இந்த வழக்கு மிசவுரி மாகாணத்துக்கு ஆதரவாக அமைவது கடினம்' என, சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



latest tamil news




20 டிரில்லியன் இழப்பீடு!


கொரோனாவால் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு இழப்பீடாக, 20 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை, சீனா நஷ்ட ஈடாக தர வேண்டும்' எனக் கோரி, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண நீதிமன்றத்தில், வாஷிங்டனைச் சேர்ந்த ப்ரீடம் வாட்ச் வழக்கறிஞர்கள் குழுவும், அமெரிக்க செனட்டர் லேரி கிளேமேனும் இணைந்து ஏற்கனவே வழக்குத் தொடுத்துள்ளனர். ஆனால், அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டுகளை சீன அரசு மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (21)

ocean kadappa india - kadappa,இந்தியா
23-ஏப்-202008:56:22 IST Report Abuse
ocean kadappa india வட கொரிய குண்டு தலைவருக்கு இப்போது உடம்பு சரியில்லையே அவர் எங்கே அமெரிக்கா மீது குண்டு வீச போகிறார்.
Rate this:
Cancel
Somiah M - chennai,இந்தியா
22-ஏப்-202016:36:05 IST Report Abuse
Somiah M உலகில் உள்ள அனைத்து நாடுகளுமே சீனாவையே குறை சொல்லுகின்றன .அதில் உண்மையும் இருக்கலாம் .அதே நேரத்தில் மார்ச் மாதமே கொரோனாவை பற்றி அமரிக்காவிற்குள்ளேயே எடுத்துரைக்கப் பட்டிருந்தும் அமெரிக்க என்ன தடுப்பு நடவடிக்கை எடுத்தது என்ற கேள்வியும் எழுகிறதே ?
Rate this:
வழிப்போக்கன் - Somerville, MA,யூ.எஸ்.ஏ
22-ஏப்-202017:25:56 IST Report Abuse
வழிப்போக்கன் ஒருவிதத்தில் ட்ரம்ப் பாவமே .. இதன் பரவல் ஜனவரியில் தொடங்கி விட்டது .. கலிபோரினியாவில் ஆரம்பித்தது ஆனால் வெளிப்படையாக அமெரிக்காவில் என்று அறிந்து தடை வந்தது மார்ச் மாதம் முதலே.. மார்ச் இரண்டாம் மாதம் எல்லாம் அடைக்கப்பட்டது .. அதற்கு முன்னர் சீன பயணிகள் மட்டுமே பரிசோதனைக்கு உள்ளனர் .. இதன் முக்கிய காரணம் சீன அரசு இதனை மறைக்க முயன்றது .. நன்றாக பரவட்டும் என்று நடந்து கொண்டது .. அதனால்தான் இது உருவாக்கப்பட்ட வைரஸ் என்ற சந்தேகம் வருகிறது .. சீன மக்கள் அதிகம் பாதிக்கப்பட மாட்டார்கள் அவர்கள் நோய் தடுப்பு சக்தி (முறையான சிறுவயது தடுப்பூசியோ என்னவோ ) என்பதை அறிந்தே பரப்பி இருக்க வேண்டும் ஏனெனில் பாதிக்கப்பட்டது சீனர்கள் அன்றி அதீத அமெரிக்கர்களும் மேற்கு ஐரோப்பிய நாட்டவரும் - எல்லாம் ஜனநாயக நாடுகள். அவர்கள் சில தடுப்பு ஊசிகளை எடுத்து கொள்வதில்லை .. இது ஒரு இன்ஜினீரெட் வைரஸ் - உயிரி யுத்தம்...
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
22-ஏப்-202015:50:45 IST Report Abuse
r.sundaram இது சீனாவின் திட்டமிட்ட சதியாக இருப்பதற்கு அதிக காரணங்கள் உள்ளன. உலக நாடுகள் தற்போது கருணாவை பற்றியே பேசிக்கொண்டிருப்பதால், ஆலோசனையில் இருப்பதால், தங்கள் மக்களை காப்பாற்ற முயல்வதால், வியாபாரம் முதலிய வெளி விவகாரங்களில் அவர்களால் செயல்பட முடிய வில்லை. ஆனால் சீன தற்போது தனது தரமற்ற முக கவசம், உடல் கவசம் ஆகியவைகளை விற்க முன் வந்துள்ளது. காரோண சோதனை கருவிகளையும் விற்கிறது. மேலும் அயல் நாட்டின் பங்கு சந்தையில் தற்போது விலை குறைந்திருக்கும் நல்ல பங்குகளை கோடிக்கணக்கில் வாங்கி குவிக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது இது ஒரு திட்டமிட்ட சாதி என்றே தோன்றுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X