அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது தான் மக்களை காக்கும் அரசா?: ஸ்டாலின் கேள்வி

Updated : ஏப் 22, 2020 | Added : ஏப் 22, 2020 | கருத்துகள் (147)
Share
Advertisement
DMK, Stalin, politics, coronavirus, covid 19, corona, dmk chief, mk stalin, coronavirus news,
 திமுக, தலைவர், ஸ்டாலின், மருத்துவர்கள், வசதி, மக்களை, காக்கும், அரசா, கேள்வி

சென்னை: மக்களை காக்கும் மருத்துவர்களுக்கு கூட போதிய வசதி செய்துதர முடியாத இதுதான் மக்களை காக்கும் அரசா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் போதுமான அடிப்படை வசதிகள் கூட இல்லை என்றும் பாதுகாப்பு உபகரணங்கள் சரியான முறையில் வழங்கப்படவில்லை என்றும் இன்று காலையில் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். மக்களை காக்கும் மருத்துவர்களுக்கு கூட போதிய வசதி செய்துதர முடியாத இதுதான் மக்களை காக்கும் அரசா? அரசியல் செய்ய தினமும் பேட்டி கொடுத்தால் போதுமா? பொய்களை சொன்னால் போதுமா? எண்ணிக்கையை வாசித்தால் போதுமா?


latest tamil news



சில ஆயிரம் மருத்துவர்களையே முறையாக கவனிக்க முடியாத இவர்கள், பல லட்சம் மக்களை எப்படி காப்பாற்ற போகிறார்கள்? கொஞ்சமும் பொறுப்பு இல்லாத மனிதர்கள் கையில் ஆட்சி சிக்கி இருக்கிறது. சென்னை போன்ற பெருநகரில் உள்ள பொது மருத்துவமனையிலேயே இந்த நிலைமை என்றால், மற்ற மருத்துவமனைகள் பற்றிச் சொல்லத் தேவையில்லை. தமிழக சுகாதாரத்துறையின் சுவாசக்குழாய் அடைப்பை யார் அகற்றி சரி செய்வது? இவ்வாறு அந்த அறிக்கையில் கேள்வியெழுப்பியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (147)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Narayanaswamy - Madurai,இந்தியா
29-ஏப்-202006:53:52 IST Report Abuse
Subramanian Narayanaswamy தினா சொல்வது போல நல்லது நடக்க அரசுடன் எதிர் காட்சிகள் ஒத்துழைப்பு தருவதை விட்டு எப்போதும் குறை சொல்லி கொண்ட இருப்பது? சுடலை யோசிக்கவேண்டும். யோசிப்பார்?
Rate this:
Cancel
Covim-20 - Soriyaar land,இந்தியா
28-ஏப்-202019:01:58 IST Report Abuse
Covim-20 இந்த அரசு மக்களை காக்கும் அரசாக இருந்துவிடக்கூடாது என்றல்லவா நீ நினைக்கிறாய் சுடலை...
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
28-ஏப்-202017:13:12 IST Report Abuse
Tamilnesan திருட்டு ரயிலில் வந்த இவர் தந்தை இருபத்தெட்டு லட்சம் கோடிகள் சொத்து சேர்த்து வைத்துள்ளார். அவற்றை அரசு கஜானாவில் சேர்த்தால், பத்து வருடம் வரி இல்லா பட்ஜெட் போடலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X