அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு பணியில் இறந்தால் ரூ.50 லட்சம்

Updated : ஏப் 24, 2020 | Added : ஏப் 22, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
கொரோனா தடுப்பு பணியில் இறந்தால் ரூ.50 லட்சம்

சென்னை : 'கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு, நோய் தொற்றுக்கு உள்ளாகி இறக்க நேரிட்டால், அவர்கள் குடும்பத்திற்கு, 50 லட்சம் ரூபாய் நிதியுதவியும், குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு, அரசு பணியும் வழங்கப்படும்' என, முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்

.அவரது அறிக்கை:கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், காவல் துறை மற்றும் பிற அரசு துறை அலுவலர்கள், பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள், பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள் ஆகியோர், முன்னின்று பணிபுரிகின்றனர்.இவர்களில் எவருக்கேனும், இந்நோய் ஏற்பட்டால், சிகிச்சைக்கான முழு செலவையும், அரசே ஏற்கும். முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும். எதிர்பாராத விதமாக இறப்பு ஏற்பட்டால், அவர்கள் குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் வழங்குவதுடன், குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு, தகுதி அடிப்படையில், அரசு பணி வழங்கப்படும் என, ஏற்கனவே அறிவித்துள்ளேன்.

இதில், 10 லட்சம் ரூபாய் என்பது, 50 லட்சம் ரூபாயாக, உயர்த்தி வழங்கப்படும். அதேபோல், கொரோனா தடுப்பு பணியில், நோய் பாதிப்பு ஏற்பட்டு, யாரேனும் இறக்க நேரிட்டால், அவர்களின் குடும்பத்திற்கு, 50 லட்சம் ரூபாய், காப்பீட்டு திட்டம் வழியே வழங்கப்படும் என, மத்திய அரசும் அறிவித்து உள்ளது.தன்னலமற்ற பணியை, முன்னின்று செய்வோர், தனியார் மற்றும் அரசு துறைகளில் உள்ளோர், இறப்பை சந்திக்க நேர்ந்தால், அவர்கள் பணிக்கு நன்றிக் கடன் செலுத்துவது, அரசின் கடமை. இதை கருத்தில் வைத்து, இறந்தவர்களின் உடலை, பாதுகாப்புடனும், உரிய மரியாதையுடனும், அடக்கம் செய்ய, அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.அவர்கள் பணியை பாராட்டி, அவர்களுக்கு உரிய விருதுகளும், பாராட்டு சான்றுகளும் வழங்கப்படும்.

கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அரசு டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள், போலீசார் மற்றும் அரசு துறை அலுவலர்கள், உள்ளாட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், நோய் தொற்றால் இறந்தால் அவர்களது குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிவாரண நிதி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதை, 50 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் பணியாளர்களில், எவருக்கேனும் கொரோனா தொற்று ஏற்பட்டால், மருத்துவ துறையின் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு ஏற்ப, அந்த மருத்துவப் பிரிவில் பணிபுரியும், அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும்.
அந்த மருத்துவமனையின் பிரிவில், முழுமையாக நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அதன்பின், மீண்டும் அப்பிரிவில், மருத்துவப் பணிகள் தொடர அனுமதிக்கப்படும்.சென்னையில், நோய் தடுப்பு பகுதிகளில், மக்கள் நடமாட்டத்தை, முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும். நோய் தொற்று ஏற்பட்டவர்களின், தொடர்புகளை உடனுக்குடன் கண்டறிந்து, சோதனைக்கு உள்ளாக்க வேண்டும்.

மாநகர பகுதிகளில், மூச்சிறைப்பு, காய்ச்சல், தொண்டை வலி போன்ற அறிகுறி உள்ளவர்களுக்கு, உடனுக்குடன், கொரோனா தொற்று பரிசோதனை செய்ய வேண்டும். சென்னை மாநகரில், தற்போது செய்யப்பட்டு வரும் பரிசோதனைகளை, கணிசமாக உயர்த்தவும், அந்த பரிசோதனை முடிவுகள், உடனுக்குடன் பெற்று, நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதற்காக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், கார்த்திகேயன், பாஸ்கரன் ஆகியோர், சென்னை மாநகரத்திற்கு, கூடுதல் மண்டல அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு, முதல்வர் கூறியுள்ளார்.டாக்டர்கள், நர்ஸ்களுடன் இ.பி.எஸ்., பேச்சுசென்னை: கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோருக்கு, சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுடன், முதல்வர், இ.பி.எஸ்., நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக கலந்துரையாடினார்.தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று களத்தில் உள்ள டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுடன் கலந்துரையாடினார்.தலைமை செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுடன், முதல்வர் பேசினார்.அப்போது, அவர்கள் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், நோய் தொற்று ஏற்பட்டோருக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்த விபரங்களை கேட்டறிந்தார். மேலும், கொரோனா நோய் பாதிப்பிலிருந்து குணமாகி, நேற்று வீடு திரும்பியவர்களுடனும், முதல்வர் பேசினார்.அப்போது, சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர், தலைமைச் செயலர், சண்முகம், சுகாதாரத்துறை செயலர், பீலா ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Panchalingam - Toronto,கனடா
23-ஏப்-202023:57:52 IST Report Abuse
Siva Panchalingam தமிழ்நாட்டு அரசின் மனிதாபிமானம் நிறைந்த, நல்ல ஒரு அறிவிப்பு.
Rate this:
Cancel
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
23-ஏப்-202008:03:44 IST Report Abuse
Palanisamy Sekar போச்சுடா..இப்படி நீங்க செயல்பட்டுக் கொண்டிருந்தால் தீயசக்தியின் புதல்வருக்கு புகைச்சல் வராமல் என்ன செய்யும்? அடுத்து யாரை தூண்டிவிடலாம்..எப்படி விமர்சிக்கலாம்..எங்கே சென்று ரோடு ரோடாக அலைந்து அரிசி பையை கொடுப்பது என்று தலையை பிய்த்துக்கொண்டு தூங்காமல் தவிப்பார். ஆனால் ஒன்று இந்த அரசின் செயல்பாடுகள் பொதுவாகவே தமிழக மக்களிடையே நல்ல அபிப்ராயத்தை உங்கள் மீது உருவாக்கி விட்டது. எவரிடம் 350 கோடி கொடுத்து முதல்வர் பதவிக்கு தவிப்போருக்கு நிச்சயம் சங்குதான் இந்தமுறை..நீங்களே அடுத்த முதல்வர் எடப்பாடியார் அவர்களே..தீயசக்தியின் குடும்பமே தவிப்பது நிச்சயம்... மோடிஜியை வாழ்த்திய கையோடு..அடுத்து இதோ உங்களுக்கும் வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
23-ஏப்-202005:38:02 IST Report Abuse
blocked user வாழும் பொழுது மரியாதை இல்லையே. இறந்த பின்னர் காசை வைத்து என்ன செய்ய முடியும்? ஆபத்து நிறைந்த வேலை என்றாலும் தயங்காமல் செய்வதை வணங்க, மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X