காபூல் : ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பாகிஸ்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து ஆப்கன் தேசிய பாதுகாப்பு இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:தேசிய பாதுகாப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பாகிஸ்தானைச் சேர்ந்த அபு ஹிலால் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் ஆப்கனில் ஐ.எஸ்.கே.பி. எனப்படும். இஸ்லாமிய கொரோசான் பிராந்திய அமைப்பின் மத்திய குழுவில் முக்கிய உறுப்பினராகவும் நிழல் நீதிமன்ற நீதிபதியாகவும் உள்ளார். இவர் லஷ்கர்-இ-தொய்பா ஹக்கானி நெட்ஒர்க் உள்ளிட்ட பல பயங்கரவாத அமைப்புகளுக்கு இடையே பாலமாக செயல்பட்டு பயங்கரவாத செயல்களுக்கு துணை புரிந்துள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பாக். உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஆப்கனில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி வருகிறது.சமீபத்தில் ஆப்கனில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதியிடம் நடத்திய விசாரணையில் பாகிஸ்தான் ஆப்கன் தலிபான்கள் மூலம் காஷ்மீரில் மிகப் பெரிய பயங்கரவாதத்தை நிகழ்த்த உள்ளது தெரியவந்துள்ளது.இதற்காக ஆப்கனில் போர் பயிற்சியில் ஈடுபட்ட அனுபவம் உள்ள தலிபான்களை காஷ்மீரில் ஊடுருவ பாக். உதவி வருகிறது.
இதற்கிடையே ஆப்கனில் அமெரிக்க படைகள் வெளியேறும் பட்சத்தில் அங்குள்ள இந்திய ராணுவ முகாம்கள் மீது தலிபான்கள் உதவியுடன் பாக். தாக்குதல் நடத்தக் கூடும் என இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE