தடை செய்யப்பட்ட பகுதிக்கு சென்றால் 6 மாதம் சிறை| Covid-19 lockdown: TN police warns of imprisonment if entered restricted areas | Dinamalar

தடை செய்யப்பட்ட பகுதிக்கு சென்றால் 6 மாதம் சிறை

Updated : ஏப் 23, 2020 | Added : ஏப் 23, 2020 | கருத்துகள் (5) | |
சென்னை: 'கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் செல்ல முயற்சி செய்வோர், உடனடியாக கைது செய்யப்படுவர்' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.தமிழகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் வசிக்கும் வீடுகள் மற்றும் அவர்கள் பணிபுரிந்த அலுவலகங்கள் என, 385 பகுதிகள், தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் வசிப்போர், வீட்டை விட்டு
TN police, Tamil Nadu, warning, corona update, covid 19 India, India fights corona, coronavirus crisis,coronavirus update, lockdown, quarantine, curfew, tn news, போலீஸ், எச்சரிக்கை

சென்னை: 'கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் செல்ல முயற்சி செய்வோர், உடனடியாக கைது செய்யப்படுவர்' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் வசிக்கும் வீடுகள் மற்றும் அவர்கள் பணிபுரிந்த அலுவலகங்கள் என, 385 பகுதிகள், தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் வசிப்போர், வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது; அவர்களுக்கு தேவையான பொருட்களை, மாநகராட்சி உள்ளிட்ட, உள்ளாட்சி துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் வாங்கிக் கொடுப்பர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும், அரசு செய்து வருகிறது.

தடை செய்யப்பட்ட பகுதிகளின் நான்கு புறமும், தற்காலிக தடுப்பு கம்பிகள் வாயிலாக, போலீசார் வேலி அமைத்துள்ளனர். அந்த பகுதிகளில், வெளி நபர்களின் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து குறித்து, 'ட்ரோன்' என்ற, பறக்கும் கருவி வாயிலாக, போலீசார் கண்காணித்து வருகின்றனர். எனினும், தடை செய்யப்பட்ட பகுதிகளில், வெளி நபர்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இனி, இதுபோன்ற செயலில் ஒருவரும் ஈடுபடக்கூடாது என, போலீசார் எச்சரித்துள்ளனர்.


latest tamil news
இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது: தடை செய்யப்பட்ட பகுதி என்று தெரிந்தே, அங்கு செல்ல முற்படுவது, தண்டனைக்கு உரிய குற்றம். அதுபோன்ற செயலில் ஈடுபடுவோர் மீது, இந்திய தண்டனை சட்டம், 269 சட்டப்பிரின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். அவர்கள், ஆறு மாதம் சிறை தண்டனை கிடைக்கும் வகையில், உடனடியாக கைது செய்யப்படுவர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X