'இந்தியாவில் 4 கோடி தொழிலாளர் நிலை மேலும் மோசமடையும்': உலக வங்கி

Updated : ஏப் 23, 2020 | Added : ஏப் 23, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
வாஷிங்டன்: 'உலகளவில் இதுவரை கொரோனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 26 லட்சத்தை கடந்துள்ளது; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,83,120 ஆக உள்ளது. இந்தியாவில், 21,403 பேர் பாதித்துள்ளனர்; 681 பேர் உயிரிழந்துள்ளனர்' என, ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், உலக வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த,

வாஷிங்டன்: 'உலகளவில் இதுவரை கொரோனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 26 லட்சத்தை கடந்துள்ளது; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,83,120 ஆக உள்ளது. இந்தியாவில், 21,403 பேர் பாதித்துள்ளனர்; 681 பேர் உயிரிழந்துள்ளனர்' என, ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.



latest tamil news



இந்நிலையில், உலக வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, பல்வேறு நாடுகளும் ஊரடங்கு பிறப்பித்துள்ளன. இதனால், சிறு குறு தொழில் நிறுவனங்களும் மிகப் பெரிய தொழிற்சாலைகளும் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. சாதாரண தொழில் அமைப்புகளும் முடக்கப்பட்டன. இதனால், கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.


latest tamil news


தெற்காசிய பிராந்தியங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், வெளிநாடு மற்றும் உள்நாட்டில் புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்கள் மோசமாகப் பாதித்துள்ளனர். குறிப்பாக, இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்துள்ள, 4 கோடிக்கும் மேற்பட்ட மக்களை, கடுமையாகப் பாதித்துள்ளது.


latest tamil news


ஊரடங்கு அமலான ஒருசில நாட்களிலேயே, 60 ஆயிரம் பேர் வரை நகரப்பகுதிகளில் இருந்து தங்கள் சொந்த கிராமப் பகுதிகளுக்கு திரும்பினர். ஆனால் இது எந்த வகையிலும் அவர்களுக்குத் தீர்வைத் தராது. இந்நிலையில் இந்தியாவில் மே 3ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இருப்பதால், இந்த தொழிலாளர்களின் நிலை மேலும் மோசமடையும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
24-ஏப்-202022:11:52 IST Report Abuse
Tamilnesan ஊரடங்கை நீட்டித்தால் மக்கள் பசியால் மடிந்து விடுவார்கள்...........நீட்டிக்கவிட்டால் மக்கள் கொரானாவால் மடிந்து விடுவார்கள்...........இருப்பதோ ஒரு உயிர், என்ன செய்வேன் ? நான் என்ன செய்வேன்? ........இரண்டு மனம் வேண்டும்........இறைவனிடம் கேட்பேன்.........பசித்து வாழ ஒன்று........கொரானாவால் மடிய ஒன்று......இரண்டு மனம் வேண்டும்
Rate this:
Cancel
Fardhikan - Rajakambeeram,இந்தியா
23-ஏப்-202014:48:32 IST Report Abuse
Fardhikan கஞ்சிக்கு வழி இல்லாமல்
Rate this:
Cancel
A.Gomathinayagam - chennai,இந்தியா
23-ஏப்-202014:29:16 IST Report Abuse
A.Gomathinayagam ஊழல் செய்து கோடிக்கணக்கில் பணம் சேர்த்த அரசியல் வாதிகள் யாரும் தங்கள் சொந்த காசில் ஒரு பைசா கூட பிரதமர் நிதிக்கு கொடுக்கவில்லை .அவர்கள் மீது கட்சி பேதம் இல்லாமல் கடுமையான நடவடிக்கை எடுத்து அவர்கள் சொத்துக்களை முடக்கி அரசு கைய படுத்தினால் இன்னும் பல ஆண்டுகளுக்கு மக்களிடம் வரி வசூலிக்கும் நிலை இருக்காது .இதை எந்த அரசியல்வாதியும் செய்யவே மாட்டார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X