சுயநலனுக்காக விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்: பாக்., வீரர் சர்ச்சை

Updated : ஏப் 23, 2020 | Added : ஏப் 23, 2020 | கருத்துகள் (29)
Share
Advertisement
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவார்கள், இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது சொந்த சாதனைகளுக்காகவே விளையாடுவார்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தேர்வு குழு தலைவருமான இன்சமாம் கூறியுள்ளார்.முன்னாள் பாகிஸ்தான் அணி வீரர் ரமிஸ் ராஜாவும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தேர்வு குழு தலைவரான இன்சமாம் உல் ஹக்கும்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவார்கள், இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது சொந்த சாதனைகளுக்காகவே விளையாடுவார்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தேர்வு குழு தலைவருமான இன்சமாம் கூறியுள்ளார்.latest tamil newsமுன்னாள் பாகிஸ்தான் அணி வீரர் ரமிஸ் ராஜாவும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தேர்வு குழு தலைவரான இன்சமாம் உல் ஹக்கும் யுடியூப் சேனல் ஒன்றிற்காக கிரிக்கெட் குறித்த டாக்ஷோவில் பங்கேற்றனர். அதில், தற்போதைய பாகிஸ்தான் அணி வீரர்கள் இயல்பாகவே திறன் பெற்றிருந்தாலும் சில சமயம் தோல்விக்கு மிகவும் அஞ்சுகிறார்களே என இன்சமாமிடம் ரமிஸ் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த இன்சமாம், “ஒரு போட்டியில் வெற்றி பெற்றால், அவர்களுக்கு இடம் கிடைக்கும், தோற்றால் அவர்களை கைவிட்டுவிடுவார்கள் என தொடருக்கு தொடர் வீரர்கள் சிந்தித்தால், அவர்களால் முழு திறனுடன் விளையாட முடியாது. இம்ரான் கான் அப்படி தான் ஒரு தொடரில் வீரர்கள் சொதப்பினாலும் அவர்களை நீக்காமல், வாய்ப்பளித்து அடுத்த போட்டியில் சிறப்பாக ஆட வைத்தார்.

'எங்கள் காலத்தில், இந்தியா பேட்டிங்கில் வலுவாக இருந்தது. பேட்ஸ்மேனாக எங்களது சாதனைகள் அவர்களை விட சிறப்பாக இல்லை. ஆனால் நாங்கள் 30 அல்லது 40 ரன்கள் எடுத்தாலும் அணிக்காக எடுத்தோம். அவர்கள் சதமடித்தாலும், அதனை அணிக்காக செய்யவில்லை, அவர்களுக்காக ஆடினார்கள். அது தான் வித்தியாசம்.


latest tamil newsதற்போது நமது அணி வீரர்களும் அவர்கள் இடத்தை இழப்பதற்கு அஞ்சுகிறார்கள். தம்மை நிலைநிறுத்த ஒன்று அல்லது இரண்டு இன்னிங்ஸ் தான் இருப்பதாக நினைக்கிறார்கள். அதனால் அவர்களால் அணியை தேவையை உணர முடியவில்லை. அணிக்காக விளையாடுவதற்கு பாதுகாப்பையும் நம்பிக்கையையும் கேப்டனும், பயிற்சியாளரும் அளிக்க வேண்டும்” என்றார். இன்சமாமின் இந்த கருத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களை எரிச்சலடையச் செய்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
27-ஏப்-202023:42:45 IST Report Abuse
Rajagopal இனஸ்மாம் காலத்தில் பாகிஸ்தான் அணியில் உலகில் மிகவும் சிறந்த வேக பந்து வீச்ச்சாளர்கள் இருந்தார்கள். இந்திய அணியில் பாகிஸ்தான் அளவுக்கு திறமை வாய்ந்த வேக பந்து வீச்சாளர்கள் அப்போது இல்லை. பேட்டிங் வைத்து தான் சமாளிக்க வேண்டியிருந்தது. அதனால் பார்ப்பவர்களுக்கு ஏதோ இந்திய அணியினர் சுயநலத்தோடு ஆடுவது போலத் தெரிந்திருக்கலாம். வெற்றி பெறும் எந்த அணியிலும் பௌலிங் மிகவும் அபாரமாக இருக்க வேண்டும். பேட்டிங்கில் அதிக திறமை இல்லாவிட்டாலும், முப்பது, நாற்பது ரன்கள் ஒவ்வொருவரும் எடுத்தாலே போதுமானது. அதுதான் பாகிஸ்தான் அணியில் நடந்தது. தவிர அவர்களது அணியில் பட சண்டை எப்போதும். அகம்பாவமும், கர்வமும் நிறைந்தவர்கள். ஒருவரை ஒருவர் மதிக்காதவர்கள். சில சமயங்களில் ஒரு கேப்டனை வீழ்த்த, வேண்டுமென்றே தோற்கும் படியாக நடந்து கொள்வார்கள் அடிக்கடி. பெட்டிங் செய்யும் குற்றச் செயலில் அடிக்கடி ஈடு பட்டுப் பெயரை இழந்தார்கள். கிரிக்கெட்டையே ஒரு மத அடிப்படையில் பார்க்கத் தொடங்கி விட்டார்கள். கிரிக்கெட் மைதானத்தில் குனிந்து தலையை வைத்து முத்தம் இடுவது, வானத்தைப் பார்த்து நன்றி சொல்வது, கூட்டமாக நமாஸ் செய்வது என்று இன்ஜமாம் தலைமையில் தொடங்கியது. பிரயான் லாராவை முஸ்லிமாக மாற்ற முயற்சித்தார் இந்த ஆள். தப்லீகி ஜமாத்தில் முக்கிய அங்கம் வகிப்பவர். அவர் இந்தியர்களை பற்றி வேறென்ன சொல்வார்?
Rate this:
Cancel
David DS - kayathar,இந்தியா
25-ஏப்-202013:44:37 IST Report Abuse
David DS மிக சரியாக sonnaar. டெண்டுல்கர் உட்பட அனைவரும் அப்படித்தான், தன் கேரியர், விளம்பர வருமானம், விளம்பரம், தன் புகழ், தன் பெருமை, தன் சாதனை இப்படித்தான் இருந்தார்கள்
Rate this:
Cancel
Amal Anandan - chennai,இந்தியா
25-ஏப்-202012:18:31 IST Report Abuse
Amal Anandan சுயநலமாய் விளையாடுறவங்க 100 ரன் அடிச்சாங்களாம் நாட்டிற்காக விளையாடினவங்க 30 அல்லது 40 ரன் அடிச்சாங்களாம். நாடு முழுக்க இப்படி அறிவாளிங்களாய் இருந்தா அந்த நாடு எப்படி உருப்படும். நம்ம வடிவேலை மிஞ்சுடுவான் போலயே இவன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X