சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாயின் இறுதிசடங்கு முடித்த கையோடு பணிக்கு திரும்பிய தூய்மை பணியாளர்

Updated : ஏப் 23, 2020 | Added : ஏப் 23, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement

பெரம்பலூர்: தாயின் இறுதி சடங்கை முடித்த அரை மணிநேரத்தில் பணிக்கு திரும்பினார் தூய்மைபணியாளர் ஒருவர்.latest tamil newsபெரம்பலூர் மாவட்டம் வி களத்தூரை சேர்ந்தவர் அய்யாதுரை. அங்கு தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இதனிடையே இவரது தாயார் அங்கம்மாள் வயது முதிர்வு காரணமாக மரணமடைந்தார். தயார் மறைவு குறித்த செய்தியை உறவினர்களுக்கு தெரிவித்தார். அத்தோடு தற்போதைய சூழ்நிலையில் யாரும் நேரில் வரவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து தாயாரின் உடலை அடக்கம் செய்தார்.


latest tamil newsதாயார் திடீரென மரணமடைந்ததால் அய்யாதுரை பணிக்கு திரும்ப ஒரு வார காலம் ஆகலாம் என அதிகாரிகள் உடன் பணிபுரிவர்கள் நினைத்திருந்தனர். ஆனால் அவர்கள் யாரும் எதிர்பாராத வகையில் உடனடியாக பணிக்கு திரும்பி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் அய்யாதுரை.

இது குறித்து அவர் கூறியதாவது: தாயாரின் மறைவு தனக்கு வருத்தத்தை தந்த போதிலும் இந்த பேரிடர் காலத்தில் ஊர் தூய்மையாக இருப்பதில் தனது பங்களிப்பு இருக்க வேண்டும் என எண்ணினேன். அதனால் உடனடியாக பணிக்கு திரும்பியதாக கூறினார். அய்யாதுரையின் பணிமீதான அக்கறையை கண்ட ஊர்மக்களும் அதிகாரிகளும் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Panchalingam - Toronto,கனடா
23-ஏப்-202023:53:32 IST Report Abuse
Siva Panchalingam தற்போது உள்ள காலகட்டங்களில் தலை வணங்க வேண்டிய ஒரு பணியாளர்.அது தவிர "துப்பரவு பணியாளர்" , "மாற்று திறனாளி" என்னும் அழகிய, மனித நேயம் உள்ள, அவர்களையும் மதிக்கின்ற, கௌவுரவாமன வார்த்தைகள் தமிழ்நாட்டின் ஊடகங்களில் இருந்து வருவது, அதனை பார்த்து ஏனைய நாடுகளில் வசிக்கும் தமிழர்களும் பாவனைக்கு கொண்டு வருவது ஒரு நல்ல மாற்றம்.
Rate this:
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
23-ஏப்-202023:47:02 IST Report Abuse
THINAKAREN KARAMANI அவர் தாயின் மறைவு தனக்கு வருத்தத்தை தந்தபோதிலும் பேரிடர் காலத்தில் தனது கடமையைச் செய்தே தீரவேண்டும் என்ற உணர்வுடன் பணிக்குத் திரும்பிய தூய்மை பணியாளரான திரு அய்யாதுரை அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். THINAKAREN K KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
Saravanan -  ( Posted via: Dinamalar Android App )
23-ஏப்-202023:31:35 IST Report Abuse
Saravanan வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X