அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஒன்றிணைவோம் வா' திட்டம்: திணறும் தி.மு.க., மா.செ.க்கள்

Updated : ஏப் 25, 2020 | Added : ஏப் 23, 2020 | கருத்துகள் (67)
Share
Advertisement
சென்னை: ஸ்டாலின் அறிவித்துள்ள, 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தில், உதவி கேட்டு, ஆயிரக்கணக்கில் அழைப்புகள் வருவதால், நிவாரண உதவிகள் வழங்க முடியாமல், தி.மு.க., மாவட்ட செயலர்கள் திணறுகின்றனர்.மொபைல் போன் மக்களுக்கு தேவையான, அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கும், அவர்களின் பசியை போக்கவும், 'ஒன்றிணைவோம் வா' என்ற, புது திட்டத்தை, தி.மு.க., தலைவர், ஸ்டாலின்
'ஒன்றிணைவோம் வா' திட்டம்: திணறும் தி.மு.க., மா.செ.க்கள்

சென்னை: ஸ்டாலின் அறிவித்துள்ள, 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தில், உதவி கேட்டு, ஆயிரக்கணக்கில் அழைப்புகள் வருவதால், நிவாரண உதவிகள் வழங்க முடியாமல், தி.மு.க., மாவட்ட செயலர்கள் திணறுகின்றனர்.


மொபைல் போன்மக்களுக்கு தேவையான, அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கும், அவர்களின் பசியை போக்கவும், 'ஒன்றிணைவோம் வா' என்ற, புது திட்டத்தை, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழகம் முழுதும், பொதுமக்கள் உதவி கேட்க வசதியாக, 90730 90730 என்ற, மொபைல் போன் எண்ணையும் அறிவித்துள்ளார். இந்த எண்ணுக்கு, மாவட்ட வாரியாக, உதவி கேட்டு, தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன.அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்க முடியாமல், அக்கட்சியின் மாவட்ட செயலர்கள் திணறுகின்றனர்.
அதனால், மாவட்ட செயலர்கள், நிவாரண உதவி வழங்கும் பொறுப்பை, அந்தந்த பகுதி நிர்வாகிகளிடம் ஒப்படைக்கின்றனர். அவர்களால், முடிந்த அளவுக்கு, ஒரு சிலருக்கு உதவி செய்கின்றனர்; அனைவருக்கும் உதவி செய்ய முடியவில்லை.இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:இதுபோன்ற தவறான செயல் திட்டங்களை தான், அரசியல் ஆலோசகரான பிரசாந் கிஷோர், ஸ்டாலினுக்கு வகுத்து கொடுக்கிறார்.


அரசுக்கு இணையாக, மாவட்ட செயலர்களால் எப்படி செலவு செய்ய முடியும்?எந்தெந்த மாவட்டங்களில், அரசின் உதவிகள் சரிவர வழங்கப்படவில்லையோ, அவற்றை கண்டறிந்து, தி.மு.க.,வினரை களமிறக்கி இருக்க வேண்டும்.அப்படி செய்தால், மக்களிடம் நல்ல பெயர் வாங்கலாம். அதை விடுத்து, அரசு இயந்திரம் செய்ய வேண்டிய பணிகளை, கட்சி நிர்வாகிகளிடம் ஒப்படைத்ததால், அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. இத்திட்டம், தி.மு.க.,வுக்கு தோல்வியை தான் கொடுக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kundalakesi - Coimbatore,இந்தியா
25-ஏப்-202000:05:16 IST Report Abuse
Kundalakesi Tamilians will not forget those who helped in danger time. Stalin thinks those extra thousand people will convert to vote but our thala Rajini is yet to speak out and see how he splits dmk vote bank.
Rate this:
Cancel
Raja - Thoothukudi,இந்தியா
24-ஏப்-202022:31:42 IST Report Abuse
Raja கொரானா நிதிய மாதிரியே மகனும் பைசா ஈயாமல் தொண்டர்கள செலவு பண்ண வச்சி பிச்சைகாரர்களாக்க பாக்கறாரு. இவரு கட்சி நிதில இருந்து குடுத்தா கட்சிகாரன் ஆட்டைய போட்டுடுவான். மக்களுக்கு போய் சேராது. கட்சிகாரன செலவு பண்ண சொன்னா எப்படி செலவு பண்ணுவான்?
Rate this:
Cancel
24-ஏப்-202022:08:06 IST Report Abuse
S B. RAVICHANDRAN ஐயோ திமுக எல்லோரும் இணைத்து திருட வருகிறார்களாம். சாக்கடை மேலே உள்ள சிலாப் கற்கள்கடைகளில் உள்ள போர்டு வீட்டிற்கு முன்னால் உள்ள கார் டயர்கள் வீட்டிற்கு முன்னால் கடப்பா கற்கள் வீதியில் அமைந்துள்ள விளக்குகள் மொத்தமாக தமிழகத்தில் திருட்டுகளை ஆரம்பம். மக்கள் இரவில் தூங்காமல் இருக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X