பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 கோடி கோயில் பணம்

Updated : ஏப் 24, 2020 | Added : ஏப் 24, 2020 | கருத்துகள் (92)
Share
Advertisement
சென்னை: கோயில்களின் உபரி நிதியில் இருந்து முதல்வர் நிவாரண நிதிக்கு 10 கோடி ரூபாய் வழங்க ஹிந்து சமய அறநிலைய துறை முதன்மை செயலர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.முதுநிலை கோயில்களின் செயல் அலுவலர்கள் இணை உதவி கமிஷனர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஊரடங்கால் தொழில் வருமானம் இன்றி தவிக்கும் மக்களின் அத்தியாவசிய தேவை முதல்வர் நிவாரண நிதியால் பூர்த்தி
CM, relief fund, coronavirus, tamil nadu temple, tamil news, tn news, dinamalar news, tn cm, Edappadi  Palanisamy, covid 19, முதல்வர்,நிவாரணநி,கோயில்,பணம்

சென்னை: கோயில்களின் உபரி நிதியில் இருந்து முதல்வர் நிவாரண நிதிக்கு 10 கோடி ரூபாய் வழங்க ஹிந்து சமய அறநிலைய துறை முதன்மை செயலர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

முதுநிலை கோயில்களின் செயல் அலுவலர்கள் இணை உதவி கமிஷனர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஊரடங்கால் தொழில் வருமானம் இன்றி தவிக்கும் மக்களின் அத்தியாவசிய தேவை முதல்வர் நிவாரண நிதியால் பூர்த்தி செய்யப்படுகிறது. எனவே முதல்வர் நிவாரண நிதிக்கு இன்று மாலைக்குள் தக்கார், அறங்காவலரின் தீர்மானத்துடன் அறநிலைய துறைக்கு உரிய நிதியை அனுப்ப வேண்டும்.


latest tamil news


பழநி, திருச்செந்துார், மதுரை, திருத்தணி, திருவேற்காடு, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், சமயபுரம், ராமேஸ்வரம், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்கள் தலா 35 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.

பண்ணாரி, அழகர்கோயில், மருதமலை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, வடபழநி ஆண்டவர், மாங்காடு, திருப்பரங்குன்றம், சங்கரன்கோவில், சுவாமிமலை, மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில்கள் தலா 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.

காஞ்சிபுரம் தேவராஜர், திருவொற்றியூர் தியாகராஜர், சோளிங்கர் லட்சுமி நரசிம்மர், மேல்மலையனுார் அங்காளம்மன் உள்ளிட்ட கோயில்கள் தலா 15 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.இந்த 47 கோவில்களின் உபரி நிதியான 10 கோடி ரூபாய் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (92)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CSCSCS - CHENNAI,இந்தியா
28-ஏப்-202009:25:30 IST Report Abuse
CSCSCS இது மிக மட்டமான செயல் . கோயிலுக்கு காணிக்கையை அரசு இஷ்டப்படி எடுத்துக்கொள்ள எந்த உரிமையும் இல்லை .இந்த தொகையை ஏன் வருமானம் குறைந்த கோயில்களுக்கும் அங்கு வேலை பார்ப்பவர்களுக்கும் செலவு செய்யவில்லை ?
Rate this:
Cancel
Jayvee - chennai,இந்தியா
27-ஏப்-202022:24:35 IST Report Abuse
Jayvee அன்னே ஏஏஏஏ பீஈ ஸ்ஸ்ஸ்ஸ் ,, சர்ச்சும் மசூதியும் குடுத்தாங்களா ஆப்பு? வெட்கம்கெட்டவனுங்க வயித்த வளர்க்கிறது ஹிந்துக்களின் காசில்.. பேசுவது அரபிக்கும் லடினும்..
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
25-ஏப்-202016:48:22 IST Report Abuse
r.sundaram தமிழ் நாட்டை இனிமேல் ஹிந்து நாடு என்று சொல்லலாமா? சமய சார்பற்ற அரசு என்றால் இந்து சமய கோவில்களில் இருந்து மட்டும் வருமானத்தை இந்த மாதிரி மாற்றி விடுவது ஏன்? ஒருகால பூஜைக்கு கூட வழியில்லாத கோவில்கள் தமிழ் நாட்டில் எத்தனையோ இருக்கிறது. அதற்க்கு இவர்கள் என்ன வழி செய்கிறார்கள்? இந்து மக்களே விழிப்படையுங்கள். இனிமேல் இந்த கழகங்களுக்கு ஓட்டுப்போடாதீர்கள். இன்று கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது டெல்லியில் மாநாடு நடத்தின மதமே தவிர இந்துமக்கள் அல்ல. அவர்களுக்காக கோவில் சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்படுவது ஏன்? அரசின் இந்த முடிவு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X