கோவில்பட்டியில் குச்சி ஆலையில் தீ விபத்து

Updated : ஏப் 24, 2020 | Added : ஏப் 24, 2020 | |
Advertisement
கோவில்பட்டி: கோவில்பட்டியில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகேயுள்ள தீப்பெட்டிக் குச்சி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.கோவில்பட்டி ராஜீவ் நகர் 6ஆவது தெருவைச் சேர்ந்தவர் சங்கரய்யர் மகன் கிருஷ்ணன். இளையரசனேந்தல் சாலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே தீப்பெட்டித் தொழில் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள்களின் ஒன்றான குச்சி ஆலை நடத்தி வருகிறார்.
கோவில்பட்டி, குச்சிஆலை, தீவிபத்து, Fire, Kovilpatti, fire station, Government Transport University workshop

கோவில்பட்டி: கோவில்பட்டியில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகேயுள்ள தீப்பெட்டிக் குச்சி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.

கோவில்பட்டி ராஜீவ் நகர் 6ஆவது தெருவைச் சேர்ந்தவர் சங்கரய்யர் மகன் கிருஷ்ணன். இளையரசனேந்தல் சாலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே தீப்பெட்டித் தொழில் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள்களின் ஒன்றான குச்சி ஆலை நடத்தி வருகிறார். இவரது ஆலையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புப் படையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து மேற்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


latest tamil news




புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X