ஊர் சுற்றிய இளைஞர்களுக்கு போலீசார் எடுத்த பாடம்| When Tiruppur youths met 'COVID-19 patient' | Dinamalar

ஊர் சுற்றிய இளைஞர்களுக்கு போலீசார் எடுத்த பாடம்

Updated : ஏப் 24, 2020 | Added : ஏப் 24, 2020 | கருத்துகள் (30) | |
திருப்பூர்: கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், சில இளைஞர்கள் தேவையற்ற காரணங்களை கூறி ஊர் சுற்றி வருகின்றனர். இதையடுத்து அவர்களை கைது செய்யும் போலீசார், அவர்களை கைது செய்து விடுவிக்கின்றனர். வாகனங்கள் பறிமுதல் செய்கிறது.இந்நிலையில், பல்லடம் நால்ரோடு சந்திப்பில் போலீசார் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.
tamil news, tamil nadu news, dinamalar news, police tiruppur, tiruppur news, tn covid 19,
போலீஸ், திருப்பூர், இளைஞர்கள், பாடம்

திருப்பூர்: கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், சில இளைஞர்கள் தேவையற்ற காரணங்களை கூறி ஊர் சுற்றி வருகின்றனர். இதையடுத்து அவர்களை கைது செய்யும் போலீசார், அவர்களை கைது செய்து விடுவிக்கின்றனர். வாகனங்கள் பறிமுதல் செய்கிறது.இந்நிலையில், பல்லடம் நால்ரோடு சந்திப்பில் போலீசார் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றையும் நிறுத்தி வைத்திருந்தனர். அதில், கொரோனா பாதித்தவர் போன்று உடையணிந்த ஒருவரையும் அமர வைத்தனர். தொடர்ந்து, பல்லடம் நான்கு வழி சாலையில் டூவிலரில் வந்தவர்களை தடுத்தி நிறுத்தி விசாரித்தனர். அதில், அவர்கள் தேவையில்லாமல் சுற்றியது தெரியவந்தது. இதையடுத்து வாலிபர்களை ஆம்புலன்சில் ஏற்றினர். உள்ளே அமர்ந்திருந்த நபரை காண்பித்து அவருடன் கோவை சென்று, ரத்த பரிசோதனை செய்து அதில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டால் மட்டுமே மீண்டும் ஊருக்கு திரும்ப முடியும் என தெரிவித்தனர்.


latest tamil news
உள்ளே அமர்ந்திருந்த நபரும் '' கொரோனா வேணுமா ஜீ '' என கேட்டார். இதனை கேட்ட வாலிபர்கள் அலறியடித்து விட்டுவிடும்படி போலீசாரிடம் கதறினர். ஆனால், இதனை போலீசார் கண்டுகொள்ளவில்லை. ஆம்புலன்சில் இருந்து குதித்து ஓடவும் முயற்சி செய்தனர். இருப்பினும் போலீசார் கெடுபிடி காட்டியதை தொடர்ந்து, இனிமேல் சாலையில் தேவையின்றி சுத்த மாட்டோம் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து, அவர்களுக்கு அறிவுரை கூறிய போலீசார் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இதனை வீடியோவாக எடுத்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வெளியிட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X