புதுடில்லி: கொரோனா பரவுவதற்கு வவ்வால்கள் காரணம் இல்லை என வவ்வால் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

கொரோனா பரவ வவ்வால்கள் தான் காரணம் என்ற தவறான முடிவின் காரணமாக அவை பல இடங்களில் கொல்லப்படுவதாக வவ்வால்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் இரண்டு வவ்வால் இனங்களில் கொரோனா வைரஸ் காணப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியதை சுட்டிக்காட்டிய அவர்கள், 'வவ்வால்களில் காணப்படும் வைரஸ்கள் இப்போது பரவும் கொரோனா தாக்குதலை ஏற்படுத்துபவை அல்ல. ஆறு தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த 64 ஆய்வாளர்கள், சுற்றுச்சூழலை அழித்து காட்டு விலங்குகளை உணவுக்காக பயன்படுத்தும் மனிதர்களே கொரோனா பரவலுக்கு காரணமானவர்கள் என்று அறிவித்துள்ளனர்
கொரோனா வைரஸுக்கான மூல காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், வவ்வால்களை வேட்டடையாடுவது தவறு. அவற்றை காப்பாற்ற அரசு தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என கேட்டுக் கொண்டுள்ளனர்.