மருத்துவரின் கைநடுக்கத்தால் கிம் ஜாங் உன்-னின் அறுவை சிகிச்சை தோல்வி?

Updated : ஏப் 26, 2020 | Added : ஏப் 26, 2020 | கருத்துகள் (51)
Share
Advertisement
சியோல்: மர்ம தேசமான வட கொரியாவின் சர்வாதிகாரி கிம் ஜாங் உன், இதய பாதிப்பால் மரணப் படுக்கையில் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்த போது மருத்துவரின் கை நடுங்கியதால் தான், அவரது உடல்நிலை மோசமடைந்ததாக ஜப்பான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.ஏப்ரல் 15-ம் தேதி வட கொரியாவின் முக்கிய நிகழ்வான அந்நாட்டின் நிறுவனர் கிம் இரண்டாம் சங் பிறந்த
Kim Jong Un, Doctor, North Korea, Botched, Japanese media, vegetative state, heart attack surgery, death, கிம், வடகொரியா, அதிபர், உடல்நிலை, டாக்டர், நடுக்கம், அறுவை சிகிச்சை

சியோல்: மர்ம தேசமான வட கொரியாவின் சர்வாதிகாரி கிம் ஜாங் உன், இதய பாதிப்பால் மரணப் படுக்கையில் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்த போது மருத்துவரின் கை நடுங்கியதால் தான், அவரது உடல்நிலை மோசமடைந்ததாக ஜப்பான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 15-ம் தேதி வட கொரியாவின் முக்கிய நிகழ்வான அந்நாட்டின் நிறுவனர் கிம் இரண்டாம் சங் பிறந்த நாள் கொண்டாட்டத்தில், கிம் ஜாங் உன் பங்கேற்கவில்லை. அப்போது இருந்து அவரது உடல்நிலை குறித்து சர்ச்சை எழுந்தது. 36 வயதாகும் அதிபர் கிம், கடைசியாக ஏப்., 11ம் தேதி நடந்த கட்சி கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அதன் பிறகு எந்த பொது நிகழ்ச்சிகளிலும் அவரை காணவில்லை.


latest tamil news


இந்நிலையில் ஜப்பானைச் சேர்ந்த வார இதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், 'கிராமப்புறம் ஒன்றிற்கு சென்ற போது கிம் நெஞ்சு வலி வந்து மார்பை பிடித்துக்கொண்டு கீழே விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இதய அறுவை சிகிச்சையின் போது சாதாரண ஸ்டன்ட் பொருத்தும் செயல்முறையில், மருத்துவரின் கை நடுங்கியதால் உடல்நிலை மோசமடைந்தது. தற்போது அவர் கோமா நிலையில் இருக்கலாம்' என கூறப்பட்டுள்ளது. கிம்மின் அறுவை சிகிச்சை தோல்வியடைந்த பின் வியாழனன்று சீனாவிலிருந்து ஒரு மருத்துவ குழு வடகொரியா புறப்பட்டுள்ளது. ஆனால், அவரை காப்பாற்ற தாமதமாகவிட்டதாக பீஜிங்கில் உள்ள மூத்த கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்த 2011-ம் ஆண்டு அவரது தந்தை இரண்டாம் கிம் ஜாங் உன் மாரடைப்பால் இறந்த பின், ஆட்சிக்கு வந்தவர் கிம். கூடுதல் எடை, புகைப் பழக்கம், இதய பிரச்னைகள் போன்றவற்றால் கிம்மின் உடல் நலம் பற்றிய சர்ச்சை சில ஆண்டுகளுக்கு முன்பே கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
30-ஏப்-202020:37:27 IST Report Abuse
Nakkal Nadhamuni அந்த டாக்டரை இந்தியாவுக்கு நாடு கடத்தி, இங்கு இருக்கும் எதிர் கட்சி தலைவர்கள் அனைவருக்கும் ஒரு இதய அறுவை சிகிச்சை செய்ய சொல்லணும்... எவ்வளவுக்கு எவ்வளவு நடுங்குதோ அவ்வளவு பணம் அவருக்கு...
Rate this:
mani - Chennai,இந்தியா
01-மே-202020:03:39 IST Report Abuse
maniமிக சரியான கமெண்ட்...
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
30-ஏப்-202013:51:20 IST Report Abuse
Nathan கை நடுக்கம் , கால் வீக்கம்னு சொல்லி, இப்ப பாருங்க
Rate this:
Cancel
SATHIK BASHA - INDIA,இந்தியா
29-ஏப்-202014:43:30 IST Report Abuse
SATHIK BASHA வடகொரியாவுக்கும் நமக்கும் சம்பந்தம் உண்டோ இல்லையோ , ஜப்பான் ஊடகம் சொன்னதாக செய்தி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X