பொது செய்தி

தமிழ்நாடு

முழு ஊரடங்கிற்கு நல்ல பலன் கிடைத்தது; சென்னை, கோவை, திருப்பூர் 'டோட்டல்' சீல்

Updated : ஏப் 26, 2020 | Added : ஏப் 26, 2020 | கருத்துகள் (44)
Share
Advertisement
கோவை/ திருப்பூர்: முழு ஊரடங்கு காரணமாக, சென்னை, கோவை, மதுரை , திருப்பூர், சேலம் , காஞ்சி, மாநகராட்சி முழுவதும் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.கொரோனா தொற்று கட்டுப்படுத்த, சென்னை, மதுரை, கோவை, சேலம், திருப்பூரில், முழு ஊரடங்கிற்கு மாநில அரசு உத்தரவி்ட்டது.கோவை நிலவரம் கோவை மாநகராட்சியில் இன்று(ஏப்.,26) காலை 6: 00 மணி முதல் 29ம் தேதி

கோவை/ திருப்பூர்: முழு ஊரடங்கு காரணமாக, சென்னை, கோவை, மதுரை , திருப்பூர், சேலம் , காஞ்சி, மாநகராட்சி முழுவதும் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.latest tamil newsகொரோனா தொற்று கட்டுப்படுத்த, சென்னை, மதுரை, கோவை, சேலம், திருப்பூரில், முழு ஊரடங்கிற்கு மாநில அரசு உத்தரவி்ட்டது.


கோவை நிலவரம்


கோவை மாநகராட்சியில் இன்று(ஏப்.,26) காலை 6: 00 மணி முதல் 29ம் தேதி இரவு 9: 00 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி இன்று காலை முதல் ஊரடங்கு துவங்கியது. இதனையடுத்து நகரில் பெரும்பாலான இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பல இடங்களில் தடுப்புகளை அமைக்கப்பட்டன. ஊரடங்கை மதித்து மக்களும் வெளியே வரவில்லை. இதனால், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
சென்னை, மதுரை, கோவை, சேலம், திருப்பூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மாநகர் முழுவதும் முழு கட்டுக்குள் வந்தது . மக்கள் யாரும் வெளியே வரவில்லை. ஆங்காங்கே போலீசார் மட்டுமே காண முடிகிறது.


latest tamil news

கிராம மக்களும் பேராதரவு

முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக, கிராமங்களும் ஆள் ஆரவாரமின்றி விரிச்சோடி இருந்தன. காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் திறக்கப்பட்டும் விற்பனையின்றி காத்தாடின.

கோவை நகராட்சி பகுதிகளுக்கு, நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வெளியான மறுநாள், கிராமப்புறங்களிலும் பீதி ஏற்பட்டது. இதனால், சிறுவாணி ரோட்டில் பேரூர், காளம்பாளையம், ஆலாந்துறை உள்ளிட்ட பகுதிகளில், மக்கள் கூட்டம் அதிகரித்தது. காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் மற்றும் பெட்ரோல் பங்க்களில் மக்கள் முண்டியத்து நின்றிருந்தனர். இதனால், சமூக இடைவெளி எனும் கட்டுப்பாடு காணாமல் போயிருந்தது. இன்று காலை முதல், நகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில், கிராமப்புறங்களை கொண்ட தொண்டாமுத்துார் ஒன்றியத்திலும், முழு ஊரடங்கே காணப்பட்டது.

நேற்று காலையில், மக்களால் நிறைந்திருந்த சிறுவாணி ரோடு விரிச்சோடியிருந்தது. மதியம் வரை செயல்பட்ட காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், பெட்ரோல் பங்க்களும் ஆள் ஆரவாரமின்றி காட்சியளித்தன. வரும் நாட்களிலும் பொதுமக்கள், இதே கட்டுப்பாட்டுடன் இருந்தால், 'கொரோனா' எனும் கொடிய நோயின் பிடியில் இருந்து, விரைவில் மீளும் வாய்ப்பு ஏற்படும்.திருப்பூர் நிலவரம்


திருப்பூர் மாநகராட்சிக்கு இன்று முதல், செவ்வாய்க்கிழமை வரை மூன்று நாட்கள் மட்டுமே, முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.இதனால், இன்று காலை முதல், எந்த ஒரு வாகனமும் ரோட்டில் வரவில்லை. வழக்கமாக காணப்படும் இரு சக்கர வாகனங்களும் கூட வெளியே வரவில்லை. இருப்பினும், விதிமுறைகளை மீறி, ரோட்டுக்கு வந்த, ஏறத்தாழ, 50 இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து, வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.கொரோனா தடுப்பு தன்னார்வலர்கள், மருத்துவ குழுவினர்கள், துாய்மை பணியாளர்கள் ஆகியோரது வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.


latest tamil newsமாநகரில், மட்டும் ஏறத்தாழ, 40 இடங்களில், போலீசார் சோதனை சாவடி அமைத்து, வாகன நடமாட்டம் இருக்கிறதா என கண்காணித்தனர்.முக்கிய பகுதிகளி்ல், போலீசார் 'ட்ரோன்' கேமரா, மக்கள் நடமாட்டம் உள்ளதா என்பதை கண்காணித்தனர். போலீஸ் உயரதிகாரிகள், அவிநாசி சாலை, பல்லடம் சாலை, தாராபுரம் சாலை, காங்கயம் சாலை, பி.என்., சாலை ஆகிய முக்கிய சாலைகளில் தொடர்ந்து ரோந்து சென்று கண்காணித்த வண்ணம் இருந்தனர்.


latest tamil news


கடந்த, மார்ச் 25ல் இருந்து துவங்கிய ஊரடங்கில், நேற்று வரை, காலை முதல் மதியம், 2:00 மணி வரை. இரு சக்கர வாகனங்கள் சகஜமாக சென்று வந்த நிலையில், இன்று ரோட்டில் ஒரு வாகனத்தையும் காணவில்லை. இதனால், சாலையோரமுள்ள மரங்களில் வசிக்கும் பறவைகளின் 'கீச்... கீச்...' சத்தம் மதிய நேரத்திலும் கேட்டது.


latest tamil newsதிருப்பூரை பொறுத்தவரை முழு ஊரடங்கு நல்ல பலனை கொடுத்துள்ளது. என்றே கூற வேண்டும். கொரோனா நோயின் தன்மையை, இப்போதாவது மக்கள் புரிந்து கொண்டனரே என்று ஒரு வகையில், சந்தோஷப்படத்தான் வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean kadappa india - kadappa,இந்தியா
27-ஏப்-202018:21:52 IST Report Abuse
ocean kadappa india ஊரடங்கு வரும் மே மூன்றாம் தேதியுடன் முடிடைகிறது. அதற்கு அடுத்த நாள் சாலைகளிலும் கடைகளிலும் கூட்ட நெரிசல் அதிகமிருக்கும். மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். ஊரடங்கின் போது கடையினர் பொருள் வாங்குபவர்களுக்கு என்ன வழிமுறைகளை பின்பற்றினார்களோ அதையே பின்பற்ற வேண்டும். பிளீச்சிங் பவுடர் பாக்கெட்டுகளை வாங்கும் பொருடகளுடன் சேர்த்து இலவசமாக கொடுக்கலம். பொருட்களை வாங்கி செல்வோர் பிளீச்சிங் பவுடர் கரைசலில் கைகளை 5 நிமிடம் ஊறவைத்த பின் சோப்பு போட்டு கழுவாமல் சாதாரணமாக கைகளை தேய்த்து கழுவலாம். .
Rate this:
Cancel
Santhosh Gopal - Vellore,இந்தியா
27-ஏப்-202015:20:52 IST Report Abuse
Santhosh Gopal உலகம் முழுவதும் பூமி நாளை டிசம்பர் இல் நடத்தலாம். ஒரு மாதம் ஊரடங்கு செய்யலாம். இந்த கொரோன ஊரடங்கால் ஓசோன் படலம் கொஞ்சம் சரியாகி உள்ளதாம். அதே போல காற்றில் உள்ள மாசுபாடும் குறைந்துள்ளதாம். இப்போ கூட இந்த ஊரடங்கால் மாசுபாடும் குறைந்து, கோடை மழை சரியாக பெய்து பழைய நிலைக்கு திரும்பியுள்ளதாம். குயில் சத்தம் கேட்க தொடங்கியுள்ளது. சிட்டு குருவிகளும் இனப்பெருக்கம் செய்து பறவை இனங்கள் எண்ணிக்கை இரட்டிப்பு ஆகியுள்ளதாம். அதனால் வருடத்திற்கு ஒரு முறை உலகம் முழுவதும் ஒரு மாதம் கடைபிடிக்கலாம்.
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
27-ஏப்-202008:09:34 IST Report Abuse
ocean kadappa india எவனோ ஒருவன் பாம்பை தின்ன போய் குரோனாவில் முதல் ஆளாக சாக அது அடுத்தவர்களிடம் பரவ அவர்கள் உலகம் பூராவும் அதை பரப்பி விட்டனரா. ட்ரம்ப் லபோ திபோ. தீவிர வாதிகளையும் சமுதாய குற்றங்களில் ஈடுபடுவோரையும் மனித சமுதாய கலாச்சாரங்களுக்கு ஒவ்வாத எதிர்மறையான சிந்தனை உள்ளவர்களையும் எந்த சட்டத்திற்கும் அடங்காதவர்களையும் ஊரோடு ஒத்து போகாத இடக்கான பேர்வழிகளையும் அடக்கி வைத்தது குரோனா ஒன்றே. மனித போராட்டங்களையும் தனிமனித பேராசைகள் விருப்பு வெறுப்புகளையும் விலக்கியது. மாசு படலத்தை ஒழித்து சுத்தமான காற்றை தருகிறது. உலக கூச்சல் அடங்கியது. தெரு வீதிகளில் அகால இருட்டு வேளைகளில் உலாவும் திருடர்களையும் கொலைகாரர்களையும் காம வெறியர்களையும் குடிகாரர்களையும் குலைக்கும் தெரு நாய்களையும் மட்டம் தட்டியது. வன விலங்குகள் ஒன்றுடன் ஒன்று மோதி அடித்து தின்பதில்லை. பறவை கூட்டங்கள் வான வீதியில் கும்பலாக காலை வேளைகளில் இங்கும் அங்கும் பறப்பதில்லை. காகங்கள் கத்தும் சத்தமில்லை. எதிர் கட்சிகள் மேடை போட்டு இரவு 12 வரை ஆளும் கட்சியினரை திட்டி தீர்க்கும் வேலை இல்லை. எவரையும் கூட்டம் சேர்த்து போராட்டங்களுக்கு தூண்ட முடியவில்லை. கடல் அலைகள் கூட கடல் அடங்கை கடை பிடிக்க துவங்கியுள்ளன. கனத்த மாசடைந்த காற்று இப்போதெல்லாம் கனிவு தரும் இதமான தென்றலாக வீசுகிறது. ஊரடங்கு அமைதி மயான அமைதியையும் மீறி விட்டது. எங்கும் எதிலும் அமைதி. அமைதியான வாழ்க்கை இப்போதைய மனிதருக்கு கிடைத்த அற்புதமான தாரக மந்திரம். இப்படிப்பட்ட உலக மாற்றத்தை எவரும் இதுவரை பார்த்திருக்கவோ அதை அனுபவித்தோ இருக்க முடியாது. வீடுகளே பலருக்கு பணியிடங்களாகி விட்டன. கணவன் மனைவி கருத்து வேறுபாடு அகன்றது. விவாக முறிவுகள் காணாமல் போய்விட்டன. பங்காளி சண்டைகள் சொத்து தகராறுகள் பலவீனமாகியுள்ளன. குடும்ப ஒற்றுமை தழைத்தோங்கியது. எல்லோரும் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்ற நினைவுக்கு வந்து விட்டனர். தமிழகத்தில் ஒருவருடன் ஊசலாடும் திராவிட கட்சி வாயை திறந்து இந்துக்களை கிண்டலடிப்பது இல்லை. கடவுள் மறுப்பு இல்லை. எந்த சட்டங்களாலும் செயல் படுத்த முடியாத இத்தகைய அசாதாரண ஒட்டு மொத்த உலக போக்கை கொரோனா ஒரே இலக்கு நோக்கிய வீச்சில் திருத்தி விட்டது. குரோனாவுக்கு நமது நன்றி கலந்த வணக்கங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X