அரசியல் செய்தி

தமிழ்நாடு

வெற்று விளம்பர அரசியல்: அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

Updated : ஏப் 28, 2020 | Added : ஏப் 26, 2020 | கருத்துகள் (59)
Share
Advertisement
வெற்று விளம்பர அரசியல்: அரசுக்கு கண்டனம்

சென்னை : 'ஊரடங்கு விவகாரத்தில், மக்களின் உயிரோடு விளையாடும் விபரீத போக்கை நிறுத்தி, முன்யோசனையுடன் செயல்பட வேண்டும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில், நான்கு நாட்கள், முழுமையான ஊரடங்கு என, யாரும் எதிர்பாராத நிலையில், அரசு அறிவித்தது. அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக, நேற்று முன்தினம், மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியே வந்தனர்.அதனால், எங்கும் நெரிசல் ஏற்பட்டு, இத்தனை நாளும் மக்கள் காத்து வந்த, சமூக ஒழுங்கு பாதிக்கப்பட்டது.


முழு ஊரடங்கு என அறிவிப்பதற்கு முன், முறையாக ஆலோசித்து, அரசு முடிவெடுத்திருக்க வேண்டும். மக்களும் பதற்றமின்றி, வழக்கம்போல, சமூக ஒழுங்கை கடைப்பிடித்து, பொருட்களை பொறுமையாக வாங்கி சென்றிருக்க முடியும்.பேரிடர் காலத்தில், பொது மக்களின் நலன் காப்பது தான் முக்கியம். அதை, ஒரு வாய்ப்பாக கருதி, வெற்று விளம்பர அரசியல் செய்வது, எந்த பயனும் தராது. விளம்பர வெளிச்சத்திற்காக ஏங்கி, மக்களின் உயிரோடு விளையாடும் விபரீதப் போக்கை, இனியாவது நிறுத்தி, முன்யோசனை நிறைந்த விவேகத்துடன், விரைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


துயர் துடைப்பு பணி



'டுவிட்டர்' பக்கத்தில், ஸ்டாலின் கூறியிருப்பதாவது:'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் கீழ், உதவிகள் வழங்கி வரும், மாவட்ட நிர்வாகிகளுடன், மூன்று நாட்களாக, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக கலந்து உரையாடினேன். மக்களின் தேவைகள், கட்சியினர் செய்து வரும் உதவிகள் போன்றவற்றை அறிந்து வருகிறேன். துயர் துடைப்புப் பணியை, துாய உள்ளத்துடன் தொடர்வோம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

அ.தி.மு.க., கண்டனம்

தி.மு.க., தலைவர், ஸ்டாலினுக்கு, அ.தி.மு.க.,செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான, வைகைச்செல்வன் கண்டனம் தெரிவித்துள்ளார்.'டுவிட்டர்' பக்கத்தில், அவர் கூறியிருப்பதாவது:துணை முதல்வர், பன்னீர்செல்வம் குறித்து, ஸ்டாலின் தரம் தாழ்ந்த விமர்சனத்தை முன்வைக்கிறார். துணை முதல்வர், சென்னைக்கும், தேனிக்கும், பல நுாறு கிலோ மீட்டர் பயணம் செய்து, தொகுதியிலும், சென்னையிலும், பல்வேறு பணிகளில், தன்னை கரைத்துக் கொண்டிருக்கிறார்.அதற்கு மாறாக, சென்னையில், கொளத்துார் தொகுதியிலும், தி.நகர் மற்றும் துறைமுகம் தொகுதியிலும், அடுத்தவர் வாங்கிக் கொடுத்த பொருளை, கையுறையோடு வழங்கி விட்டு, போட்டோவிற்கு போஸ் கொடுத்து விட்டு, ஸ்டாலின் காணாமல் போய் விடுகிறார்.இவ்வாறு, வைகைச்செல்வன் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SRITHAR MADHAVAN - Bangalore,இந்தியா
28-ஏப்-202009:48:15 IST Report Abuse
SRITHAR MADHAVAN அரசியல் வடிவேலு மாண்புமிகு பெரும்பான்மைமிகு எதிர்கட்சி தலைவர் மட்டும்தான்.
Rate this:
Cancel
27-ஏப்-202021:22:38 IST Report Abuse
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா இந்த முழு அடைப்பு சமயத்தில் கூட ஒரு ஊர் கோமளியின் கிச்சு கிச்சு.
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
27-ஏப்-202020:31:43 IST Report Abuse
தமிழ் மைந்தன் இந்த கொரானா நேரத்திலும் காமெடி தேவையா ஸ்டாலின் அவர்களே....... .நாங்கள் இப்போ சிரிக்கும் மன நிலையில் இல்லை......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X