பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவால் இறந்தவர் அடக்கத்தை எதிர்த்தால் 3 ஆண்டு சிறை

Updated : ஏப் 28, 2020 | Added : ஏப் 27, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
கொரோனாவால் இறந்தவர் அடக்கத்தை எதிர்த்தால் 3 ஆண்டு சிறை

சென்னை: கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை, அடக்கம் செய்வதை தடுப்போருக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்க, தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியுள்ளது.

தமிழகத்தில், கொரோனா நோய் தொற்றால் இறந்த, இரு மருத்துவர்களின் உடல்களை அடக்கம் செய்ய, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தது, நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு, அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது போன்ற சம்பவங்கள், இனிமேல் நடக்காமல் இருக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற, கோரிக்கையும் எழுந்தது.அதைத் தொடர்ந்து, தமிழக அரசு, அவசர சட்டம் இயற்றி உள்ளது.

அதன்படி, அரசால் அறிவிக்கப்பட்ட, தொற்று நோயால் இறந்தவர்களின் உடல்களை, கண்ணியமான முறையில் அடக்கம் அல்லது தகனம் செய்வதை தடுப்பது; தடுக்க முயற்சிப்பது, தமிழ்நாடு பொது சுகாதார சட்டப்படி குற்றமாகும்.அவ்வாறு செயல்படுவோருக்கு, தமிழ்நாடு பொது சுகாதார சட்டம், 1939, பிரிவு - -74ன் படி, அபராதம் உட்பட, குறைந்தபட்சம் ஓராண்டு, அதிகபட்சமாக மூன்றாண்டுகள் வரை, சிறை தண்டனை விதிக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Santhosh Kumar - Chennai,இந்தியா
27-ஏப்-202013:20:42 IST Report Abuse
Santhosh Kumar Why Kilpauk Christian cemetery had refused first to bury a Christian Doctor, Late Mr. Stephen? When Christian cemetery itself not prepared to bury, then how so called politicians can complain about Hindus for not accepting to bury in Hindus burial ground? Why the hell these people din't asked Christians first? Why this biased attitude from everyone ? If it is just for vote politics, Hindus should not vote to any of these political parties at all? will Hindu do this? If they are any self respect, Hindus should do it without fail.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
27-ஏப்-202006:24:42 IST Report Abuse
blocked user இந்தச்சட்டம் எல்லா மதத்தினருக்கும் பொருந்துமா என்று கேள்விக்கு பதில் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X