பொது செய்தி

இந்தியா

ஊரடங்கு நீக்கப்படாவிட்டால்..: எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர்

Updated : ஏப் 27, 2020 | Added : ஏப் 27, 2020 | கருத்துகள் (79)
Share
Advertisement
புதுடில்லி: ஊரடங்கு விரைவில் நீக்கப்படாவிட்டால், லட்சக்கணக்கான மக்கள் வறுமையின் விளிம்பிற்கு தள்ளப்படும் நிலை ஏற்படும் என ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கை பின்பற்றி வருகின்றன. இந்தியாவிலும், ஏப்.,14 வரை இருந்த ஊரடங்கு, மே 3 வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், மந்தன் அறக்கட்டளை
RBI, Former RBI Governor, Duvvuri Subbarao, Prolonged Lockdown, poverty,
ஆர்பிஐ, ரிசர்வ்வங்கி, கவர்னர், ஊரடங்கு, வறுமை, எச்சரிக்கை

புதுடில்லி: ஊரடங்கு விரைவில் நீக்கப்படாவிட்டால், லட்சக்கணக்கான மக்கள் வறுமையின் விளிம்பிற்கு தள்ளப்படும் நிலை ஏற்படும் என ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கை பின்பற்றி வருகின்றன. இந்தியாவிலும், ஏப்.,14 வரை இருந்த ஊரடங்கு, மே 3 வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், மந்தன் அறக்கட்டளை சார்பில் நடந்த ‛கொரோனாவுக்கு பிந்தைய உலகத்திற்கான பாடங்கள்' என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது. இணையவழியில் நடந்த இக்கூட்டத்தில் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சுப்பாராவ், முன்னாள் துணை கவர்னர் உஷா தோரத் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது சுப்பாராவ் பேசியதாவது: கொரோனா நெருக்கடி முடிந்ததும் இந்தியாவில் சில பொருளாதார மாற்றங்கள் வேகமாக இருக்கும்.


latest tamil news


பெரும்பாலான ஆய்வாளர்கள் இந்த ஆண்டு இந்தியாவின் வளர்ச்சியானது எதிர்மறையாகச் செல்லும் அல்லது வளர்ச்சி சுருங்கிவிடும் என கருதுகிறார்கள். ஆனால், இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே நம்முடைய வளர்ச்சி சரிந்துவிட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தற்போது அது முற்றிலுமாக நின்றுவிட்டது. மற்ற நாடுகளை விட இந்த நெருக்கடியில் இந்தியா சிறப்பாக செயல்படப் போகிறது என்பது உண்மைதான். ஆனால் நாம் ஏழ்மையான நாடு என்பதால், அது ஆறுதல் அளிக்காது. ஊரடங்கு நடவடிக்கை விரைவில் நீக்கப்படாவிட்டால், தேசத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்கள், வறுமையின் விளிம்பு நிலைக்கு தள்ளப்படுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
29-ஏப்-202006:02:39 IST Report Abuse
Dr.C.S.Rangarajan ஊரடங்கு நீக்காவிட்டால், வறுமையினால் மக்கள் தாக்கப்படக்கூடும் என்ற வாதத்தை ஒப்புக்கொண்டால், ஊரடங்கு நீக்கப்பட்டால் காரோண வியாதியினால் மக்கள் தாக்கப்படமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றவர்களும், பொறுப்பிலிருந்து அகற்றப்பட்டவர்களும் வியாதியின் தாக்கம் குறைய மருத்துவர்களின் ஆலோசனையை அரசு கேட்கவேண்டுமா, அல்லது பொருளாதார வல்லுனர்களின் ஆலோசனைப்படி ஊரடங்கிற்கு விடை கொடுத்து நோய்க்கு வரவேற்பு கொடுப்பதா?
Rate this:
Cancel
Rajesh - Chennai,இந்தியா
28-ஏப்-202000:44:33 IST Report Abuse
Rajesh அரசு சாராயம் விற்கும், தனியார் துறை வசம் சுகாதாரம், கல்வி.... இந்த நாடு விளங்கிடும்........ அமெரிக்கா பற்றி பேசும் மேதாவிகளே, அங்கு 12 ம் வகுப்பு வரை தரமான இலவசம், அதுவரை நாம் பணம் சேர்த்து வைத்தால், கல்லூரி படிப்பை முடித்துவிடலாம்....
Rate this:
Cancel
kumarkv - chennai,இந்தியா
27-ஏப்-202019:37:12 IST Report Abuse
kumarkv சிதம்பரம் போன்ற ...களிடம் பணத்தை எடுத்து மக்களுக்கு தரவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X