அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ரேபிட் டெஸ்ட் கிட்'விலை: ஸ்டாலின் கேள்வி

Updated : ஏப் 29, 2020 | Added : ஏப் 27, 2020 | கருத்துகள் (69)
Share
Advertisement
ரேபிட் டெஸ்ட் கிட், விலை, ஸ்டாலின், கேள்வி

சென்னை: 'இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான, ஐ.சி.எம்.ஆர்., அங்கீகாரம் பெறாத, ஒரு இடைத்தரகு நிறுவனத்திடம், அதிக விலைக்கு, 'ரேபிட் டெஸ்ட் கிட்' கொள்முதல் செய்ய, முதல்வர் எப்படி அனுமதித்தார்?' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:கொரோனா பரிசோதனைக்கான, ரேபிட் டெஸ்ட் கிட்டை, அ.தி.மு.க., அரசு, 600 ரூபாய் என, அதிக விலைக்கு வாங்கியுள்ளது. 'ஒரு கிட்டிற்கு, ஜி.எஸ்.டி., உட்பட, 400 ரூபாய்க்கு மிகாமல் வழங்க வேண்டும்' என, டில்லி உயர் நீதிமன்றம், மனித நேயம் மிக்க தீர்ப்பை வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பை, இதயப்பூர்வமாக வரவேற்கிறேன்.


அம்பலம்



ரேபிட் டெஸ்ட் கிட்டை தயாரிக்கும் சீன நிறுவனம், ஒரு கிட்டை, 225 ரூபாய்க்கு விற்கிறது. இறக்குமதி கட்டணம், 20 ரூபாய். ஆக மொத்தம், கிட் விலை, 245 ரூபாய். ஆனால், அ.தி.மு.க.,அரசு, 600 ரூபாய் கொடுத்திருக்கிறது என்ற, துாசு படிந்த உண்மை அம்பலமாகி உள்ளது.ஐ.சி.எம்.ஆர்., அங்கீகாரம் பெறாத, ஒரு இடைத்தரகு நிறுவனத்திடம், அதிக விலைக்கு ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதல் செய்ய, முதல்வர், இ.பி.எஸ்., எப்படி அனுமதித்தார்? குறிப்பாக, 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் கொள்முதலில் நடந்த முறைகேடுகள் என்ன என்பது குறித்து, முதல்வர்பதில் சொல்லியாக வேண்டும். இது, மக்களின் பொதுச் சொத்தான கருவூலத்தை, கரையான் அரிக்கும் காரியம் போன்றது. இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.


நிவாரண உதவி


'ஒன்றிணைவோம் வா' செயல் திட்டம் வாயிலாக நடக்கும், நிவாரண உதவி நடவடிக்கைகள் குறித்து, சேலம், கரூர் மாவட்ட, தி.மு.க., செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுடன், ஸ்டாலின் நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ஆலோசனை நடத்தினார். அப்போது, கட்சி நிர்வாகிகளிடம், 'எந்தெந்த பகுதி மக்களுக்கு, நிவாரண உதவி செய்தீர்கள்? எத்தனை பேருக்கு உதவிகள் செய்யப்பட்டன?' என, கேட்டறிந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
29-ஏப்-202013:10:06 IST Report Abuse
sankar ஆந்திர அரசு எழுநூற்று முப்பதுக்கும், உங்கள் கேரளா உண்டியல் அரசு எழுநூறு ரூபாய்க்கும் அதே சரக்கை வாங்கி இருக்கு - அவங்களையும் கேப்பமா
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
28-ஏப்-202023:29:53 IST Report Abuse
konanki இருக்கு உங்களுக்கு 2021ல ஆப்பு
Rate this:
Cancel
28-ஏப்-202021:52:53 IST Report Abuse
ஜப்பான்நாட்டு துணைமுதல்வர்   சொடலை மூல பத்ரம் கஹான் ஹை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X