பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சியில் சோதனைச்சாவடி அகற்றம்

Added : ஏப் 27, 2020
Share
Advertisement
திருத்தணி : வீரகநல்லுார் ஊராட்சியில், 28 நாட்களாக போடப்பட்டிருந்த சோதனைச்சாவடி அகற்றப்பட்டது.திருத்தணி ஒன்றியம், வீரகநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட இஸ்லாம் நகரில் வசிக்கும், 59 இஸ்லாமியர்கள் சாணை பிடிக்கும் தொழிலுக்காக, மார்ச் மாதம், கேரளாவுக்கு சென்று வீட்டிற்கு திரும்பி வந்தனர்.இதையடுத்து, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக, இஸ்லாம் நகர் பகுதியில் வசித்த, 59

திருத்தணி : வீரகநல்லுார் ஊராட்சியில், 28 நாட்களாக போடப்பட்டிருந்த சோதனைச்சாவடி அகற்றப்பட்டது.

திருத்தணி ஒன்றியம், வீரகநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட இஸ்லாம் நகரில் வசிக்கும், 59 இஸ்லாமியர்கள் சாணை பிடிக்கும் தொழிலுக்காக, மார்ச் மாதம், கேரளாவுக்கு சென்று வீட்டிற்கு திரும்பி வந்தனர்.இதையடுத்து, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக, இஸ்லாம் நகர் பகுதியில் வசித்த, 59 குடும்பத்தினரை தனிமைப்படுத்தினர்.மேலும், வெளியாட்கள் யாரும் செல்லாதவாறு வருவாய் துறை மற்றும் சுகாதார துறையின் சார்பில், நுழைவு வாயிலில் சோதனைச்சாவடி அமைத்து கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், தனிமைப்பட்டவர்களுக்கு, 28 நாட்கள் முடிந்ததைத் தொடர்ந்து, மருத்துவக் குழுவினர், இஸ்லாம் நகர் முழுதும் வீடு வீடாகச் சென்று, வைரஸ் பரிசோதனை மேற்கொண்டனர். அதில், யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என, உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, திருத்தணி கோட்டாட்சியர் சொர்ணம் அமுதா உத்தரவின்படி, இஸ்லாம் நகர் சுற்றிலும் மூடப்பட்ட எல்லைகள் மற்றும் சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X