வெங்காய மூட்டை... லேடி ஆபீஸர் ஆட்டை| Dinamalar

வெங்காய மூட்டை... லேடி ஆபீஸர் 'ஆட்டை'

Added : ஏப் 28, 2020
Share
அதிகாலையிலேயே எழுந்து, தயாராகி, காலை டிபன் முடித்து விட்டு, மதியத்துக்கான உணவை, 'பேக்' செய்து கொண்டு, 'ரவுண்ட்ஸ்' புறப்பட்டாள் சித்ரா.''என்னக்கா, முழு ஊரடங்கு நேரத்துல, வெளியே கெளம்பிட்டீங்க,'' என, குறுக்கிட்டாள் மித்ரா.''அதுக்குதாம்பா, போறேன். ஊரடங்குன்னு சொல்லிட்டு, மதியம் வரைக்கும் மளிகை கடைகளுக்கும், காய்கறி சந்தை நடத்துறதுக்கும் அனுமதி கொடுத்தாங்க.
 வெங்காய மூட்டை... லேடி ஆபீஸர் 'ஆட்டை'

அதிகாலையிலேயே எழுந்து, தயாராகி, காலை டிபன் முடித்து விட்டு, மதியத்துக்கான உணவை, 'பேக்' செய்து கொண்டு, 'ரவுண்ட்ஸ்' புறப்பட்டாள் சித்ரா.''என்னக்கா, முழு ஊரடங்கு நேரத்துல, வெளியே கெளம்பிட்டீங்க,'' என, குறுக்கிட்டாள் மித்ரா.''அதுக்குதாம்பா, போறேன். ஊரடங்குன்னு சொல்லிட்டு, மதியம் வரைக்கும் மளிகை கடைகளுக்கும், காய்கறி சந்தை நடத்துறதுக்கும் அனுமதி கொடுத்தாங்க. மக்கள் நடமாட்டம் அதிகமா இருந்துச்சு. முழு ஊரடங்குல என்ன செய்றாங்கன்னு ஒரு 'ரவுண்ட்' சுத்திப்பார்த்தா தானே தெரியும். அதான் கெளம்பிட்டேன்,''''கொஞ்சம் பொறுங்க, நானும் வர்றேன்,'' என்றபடி, ஸ்கூட்டரில் தொற்றிக் கொண்டாள் மித்ரா.அவர்கள் சென்ற வழித்தடத்தில், மளிகை கடைகளும், காய்கறி கடைகளும் மூடியிருந்தன. வங்கிகளும், ரேஷன் கடைகளும் திறந்திருந்தன.அதைப்பார்த்த சித்ரா, ''ஏம்ப்பா, யாருமே வீட்டை விட்டு வெளியே வரக்கூடாதுன்னு சொல்றாங்க. அப்புறம் எதுக்கு, ரேஷன் கடையையும், வங்கியையும் திறந்து வச்சிருக்காங்க. ரேஷன் கடையை திறந்து வச்சா, பொருள் வாங்க, கூட்டம் கூட்டமா மக்கள் வரத்தானே செய்வாங்க,'' என்றாள்.''ஆமாக்கா, நீங்க சொல்றதும் வாஸ்தவம்தான். அங்க பாருங்க, ஓட்டலும் திறந்து வச்சிருக்காங்க. மொபைல் செயலியில் ஆர்டர் கொடுத்தால், வீட்டுக்கு போயி, டெலிவரி செய்றதுக்காக 'வெயிட்' பண்றாங்க பாருங்க. இவுங்க மூலமா நோய் பரவாதா, போலீஸ்காரங்க கண்டுக்காம இருக்காங்களே,'' என, நொந்து கொண்டாள் மித்ரா.அப்போது, இரு சக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் சர்வ சாதாரணமாக, சோதனை சாவடியை கடந்து சென்றன.அதைப்பார்த்த சித்ரா, ''மித்து, வாளையார் செக்போஸ்ட்டுல நடந்த ஒரு சம்பவத்தை சொல்றேன், கேளு! போலீஸ்காரங்க ரொம்பவே அவமானப்பட்டுட்டாங்க. கோயமுத்துார் சிட்டியில இருந்து, கேரளாவுக்கு வெங்காயம் ஏத்திட்டு போன லாரி, செக்போஸ்ட்டுல இருந்த டிவைடர் மேல மோதிடுச்சாம். இதை விசாரிச்ச, லேடி போலீஸ் அதிகாரி, ஒரு மூட்டை வெங்காயத்தை தன்னுடைய வாகனத்துல எடுத்துட்டு, கிளம்பிட்டார். நடந்த விஷயத்தை வெங்காய வியாபாரிக்கு, டிரைவர் தெரிவிச்சிருக்காரு.''அடுத்த நொடி, உயரதிகாரிக்கு தகவல் பறந்திருக்கு. அங்கிருந்து, செக்போஸ்ட்டுல டியூட்டி பார்க்குற போலீஸ்காரங்களுக்கு, வெங்காயத்தை மீட்டு கொடுக்க, உத்தரவு போட்டிருக்காங்க. வெங்காய வண்டி டிரைவரிடம், போலீஸ்காரரது பைக்கை கொடுத்தனுப்பி, லேடி அதிகாரியை விரட்டி பிடித்து, வெங்காய மூட்டையை திருப்பி வாங்கிட்டு வந்திருக்காரு. இந்த சம்பவம் போலீஸ் வட்டாரம் முழுக்க பரவிக்கிட்டு இருக்கு,'' என்றாள்.''இதெல்லாம், போலீஸ் வட்டாரத்துல அடிக்கடி நடக்குற விஷயம்தானே. ஆனா, போலீஸ்காரங்க பீதியில இருக்கறதா கேள்விப்பட்டேனே,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.''ஆமாப்பா, காட்டூர் ஸ்டேஷன்ல போக்குவரத்து புலனாய்வு பிரிவுல இருக்குற ஒருத்தருக்கு, 'கொரோனா' தொற்று இருக்கறது தெரியவந்திருக்கு. அவரு, ஸ்டேஷனுக்கு வந்துட்டு போயிருக்காரு. போத்தனுார், குனியமுத்துார் ஸ்டேஷன்ல இருக்கற அத்தனை போலீஸ்காரங்களுக்கும் 'டெஸ்ட்' எடுத்துட்டாங்க. ஆனா, காட்டூர் ஸ்டேஷன்ல எடுக்குறதுக்கு எந்த ஏற்பாடும் செய்யலையாம். போலீஸ்காரங்க பீதியில புலம்பிட்டு இருக்காங்க,''''அதெல்லாம் சரி, 'கொரோனா' பிரச்னை முடிஞ்சதுக்கப்புறம் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப் போறாங்களாமே, உண்மையா,''''அப்படித்தான் பேச்சு அடிபடுது. ஆனா, அரசுக்கு அதிக வருவாய் ஈட்டிக் கொடுக்குற 'டிபார்ட்மென்ட்'; கட்சிக்காரங்க, 'பார்' நடத்தி, கல்லா கட்டிக்கிட்டு இருக்காங்க; போலீஸ்காரங்களுக்கு மாமூல் கொட்டுற வியாபாரம். இதையெல்லாம் மீறி, பூரண மது விலக்கு அமல்படுத்த முடியுமான்னு யோசிக்கிறாங்க,''''ஜெ., முதல்வரா இருந்த காலத்துல, லாட்டரி விற்பனையை ஒழிச்சாங்க. இது, லேடீஸ் மத்தியில அ.தி.மு.க.,வுக்கு மிகப்பெரிய செல்வாக்கை ஏற்படுத்திக் கொடுத்துச்சு. அதே மாதிரி, பூரண மதுவிலக்கை அமல்படுத்தி, லேடீஸ் ஓட்டுக்களை அள்ளுறதுக்கு, பிளான் போடுறாங்களாம்,''''அரசாங்க கஜானாவை நிரப்புறதுக்கு, கள் விற்பனையை அதிகாரப்பூர்வமா அறிவிக்கலாம்னு நெனைக்கிறாங்களாம். விவசாயிகள் ஓட்டும் சிந்தாம, சிதறாம கிடைக்கும்னு கூட்டல் கழித்தல் கணக்கு போட்டு பார்க்குறாங்க,''''ஓட்டுக்கணக்குன்னு சொல்றீங்க, எலக்சன் வரப்போகுதுங்களா,'' என, அப்பாவியாய் கேட்டாள் மித்ரா.''அப்படியும் சொல்லிக்கிறாங்க, மித்து! டிச., மாசத்துல தேர்தல் நடத்துறதுக்கு வாய்ப்பிருக்குன்னு உயர்மட்ட அதிகாரிங்க பேசிக்கிறாங்க. அதனால, ஆளுங்கட்சி தரப்புல இருந்து, தொகுதிக்கு, 50 லட்சம் ரூபாய்க்கு நிவாரண பொருட்கள் கொடுக்குறதுக்கு, 'பிளான்' போட்டிருக்காங்க. வேலை ஜரூரா நடந்துக்கிட்டு இருக்காம்; சீக்கிரமே, வீடு தேடி பொருள் கொடுக்கப் போறாங்களாம்.''இதை எதிர்க்கட்சிக்காரங்க மோப்பம் பிடிச்சுட்டு, அதுக்கு முன்னாடி, வார்டு வார்டா போயி, பொருள் கொடுத்துட்டு இருக்காங்க. இப்ப, 'கொரோனா' பிரச்னையிலும் அரசியல் புகுந்து விளையாடுது. வறுமையில இருக்காங்களான்னு பார்த்து நிவாரணம் கொடுக்குறதில்லை. நம்ம கட்சிக்கு ஓட்டு போடுவாங்களான்னு பார்த்துதான், ஒவ்வொரு கட்சிக்காரங்களும் பொருள் கொடுக்குறாங்க,''''மாஜி கவுன்சிலர் ஒருத்தரு, ஊரடங்கு நேரத்துல ரகசியமா மது விற்பனை செய்றாராமே. அதுவும், டோர் டெலிவரி செய்றதா கேள்விப்பட்டேன்,'' என, 'ரூட்' மாறினாள் மித்ரா.''ஆமாப்பா, நானும் கேள்விப்பட்டேன். கோல்டுவின்ஸ் ஏரியாவுல இப்படி நடக்குதாம். 'பார்' நடத்துறவங்களோடு கைகோர்த்து, கடையில இருந்து மதுவகைகளை மொத்தமா வாங்கி, பதுக்கி வச்சு, டோர் டெலிவரி செய்றாங்களாம். ரூ.800 மதிப்புள்ள ஒரு புல் பாட்டில், ரூ.5,000க்கு விக்கிறாங்களாம்,''''அடப்பாவமே, இதெல்லாம் செக்போஸ்ட்டுல இருக்கற போலீஸ்காரங்களுக்கு தெரியாதா, என்ன,'' என, அங்கலாய்த்தாள் மித்ரா.''அவுங்களும் எவ்ளோ வேலைதான் பார்ப்பாங்க. கார்ப்பரேசன் விவகாரம் ஏதும் சொல்லாம நழுவுறீயே,'' என, நோண்டினாள் சித்ரா.''அக்கா, கார்ப்பரேஷன்ல எக்கச்சக்க விஷயம் கொட்டிக் கிடக்கு. வடக்கு எதிரான திசையில உதவி கமிஷனரா இருக்கறவரு, ஆளுங்கட்சிக்கு நெருக்கம். அதனால, 2018ல, 'ரிடையர்மென்ட்' ஆகியும் கூட, பணி நீட்டிப்பு வழங்குனாங்க. வர்ற, ஜூன் 30ல், பணி நீட்டிப்பு காலம் முடியுது. மறுபடியும் பணி நீட்டிப்பு கொடுப்பாங்களா அல்லது, காத்திருப்போருக்கு பதவி உயர்வு கிடைக்குமான்னு, அதிகாரிகள் வட்டாரத்துல பேசிட்டு இருக்காங்க,''''கார்ப்பரேஷன்ல ஜீப் பஞ்சாயத்தும் ஓடிட்டு இருக்காமே,''''அதுவா, புதுசா வாங்குன ஜீப்புகளை பெரிய அதிகாரிங்க எடுத்துக்கிட்டாங்க. ஆபீஸ் பக்கமே எட்டிப் பார்க்காத 'லேடி' அதிகாரிகளுக்கும் ஜீப் கொடுத்திருக்காங்க. நகரமைப்பு பிரிவுல அஞ்சு உதவி அதிகாரிகள் இருக்காங்க.வெளியூர்ல இருந்து, 'டிரான்ஸ்பர்' ஆகி வந்த லேடி அதிகாரிக்கு ஜீப் கொடுத்திருக்காங்க. தெற்கு பக்கம் வேலை பார்க்குறவருக்கு, வாடகை கார் 'யூஸ்' பண்றதுக்கு அனுமதி கேட்டு, 'பைல்' அனுப்பியிருக்காங்க. ஆனா, 'ரிசர்வ் சைட்' மீட்கறது, ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எப்பவும் பம்பரமா வேலைபார்க்குற அதிகாரிங்க, டூவீலர்ல சுத்திட்டு இருக்காங்க,''''வாயுள்ள பிள்ளை பிழைக்கும்னு சொல்லுவாங்க. அது மாதிரிதான் போலிருக்கு,'' என்ற சித்ரா, ''கார்ப்பரேஷன் வண்டியில இருந்து டீசல் திருடுறதா சொல்றாங்களே,'' என, கிளறினாள்.''அதெல்லாம், காலம் காலமா நடந்துக்கிட்டு இருக்கு. குப்பை அள்ளுற லாரியில டீசல் திருடி விப்பாங்க. இதே மாதிரி நெறைய்ய விஷயம் இருக்கு,'' என்றாள் மித்ரா.அப்போது, கலெக்டர் ஆபீசுக்குள் ஸ்கூட்டரை செலுத்திய சித்ரா, ''ஊரடங்கு சமயத்துல, இறப்பு, பிரசவம், திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு, வெளியூர் போறதுக்கு, வாகன பாஸ் கொடுத்தாங்க. விண்ணப்பத்துல கலெக்டர் கையெழுத்திட்டுக் கொடுத்தாலும், பாஸ் கொடுக்குற அதிகாரி, விண்ணப்பதாரர்களை ரொம்பவும் நோகடிச்சுதான் அனுப்புனாராம். 'ரெகமன்டேசன்'ல வர்றவங்களுக்கு, வேணும்னே, பாஸ்ல தேதியை தப்பா குறிப்பிட்டு, அலைக்கழிச்சு, அவமானப்படுத்தி அனுப்பியிருக்காங்க,'' என்றாள்.''அக்கா, கவர்மென்ட் ஆபீசுல எப்பவும் மரியாதையை எதிர்பார்க்கக் கூடாது. லஞ்சம் வாங்குறபோது, 'நச்'சுன்னு போட்டோ எடுத்து, ஊருக்கே தெரியப்படுத்தணும்,''''மித்து, இன்னொரு விசயம் கேள்விப்பட்டேன். தென்னக தாலுகாவுல இருக்குற ரேஷன் தாசில்தார் ஆபீசுல, கடைக்கு, 1,300 ரூபாய் லஞ்சம் கொடுக்கணும்னு சொல்லியிருக்காங்களாம். 'கொரோனா' நிவாரணம் கொடுத்திட்டு இருக்கோம்; வருமானம் இல்லைன்னு, கடைக்காரங்க சொன்னாலும், கேட்க மாட்டேங்கிறாங்களாம். கண்டிப்பா கொடுக்கணும்னு ஆர்டர் போட்டிருக்காங்களாம்,'' என்றபடி, கார்ப்பரேஷன் ஆபீசுக்கு செல்ல, ஸ்கூட்டரை 'ஸ்டார்ட்' செய்தாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X