சங்கமிடமின்றி சரக்கு விற்பனை... டாஸ்மாக் ஊழியர்கள் தர்பார்!| Dinamalar

சங்கமிடமின்றி 'சரக்கு' விற்பனை... 'டாஸ்மாக்' ஊழியர்கள் தர்பார்!

Updated : ஏப் 28, 2020 | Added : ஏப் 28, 2020
Share
புல்லாங்குழல் இசையுடன், மொபைல் போன் ஒலித்தது. செய்தித்தாள் வாசித்து கொண்டிருந்த மித்ரா, ''ஹாய்... சித்து அக்கா, எப்படி இருக்கீங்க?''கேள்வி கேட்டாள்.''பைன்,''என பதிலளித்த சித்ரா, ''என்ன ஒரே இரைச்சலா கேட்குது,'' என்றாள்.''ஆமாக்கா... பக்கத்தில, ஏதோ ஒரு கட்சிக்காரங்க நிவாரண பொருள் கொடுக்கிறாங்க. அதனை வாங்க வந்தவங்க சத்தம்தான். யாரு மொதல்ல வாங்குறதுன்னு
 சங்கமிடமின்றி 'சரக்கு' விற்பனை...  'டாஸ்மாக்' ஊழியர்கள் தர்பார்!

புல்லாங்குழல் இசையுடன், மொபைல் போன் ஒலித்தது. செய்தித்தாள் வாசித்து கொண்டிருந்த மித்ரா, ''ஹாய்... சித்து அக்கா, எப்படி இருக்கீங்க?''கேள்வி கேட்டாள்.''பைன்,''என பதிலளித்த சித்ரா, ''என்ன ஒரே இரைச்சலா கேட்குது,'' என்றாள்.''ஆமாக்கா... பக்கத்தில, ஏதோ ஒரு கட்சிக்காரங்க நிவாரண பொருள் கொடுக்கிறாங்க. அதனை வாங்க வந்தவங்க சத்தம்தான். யாரு மொதல்ல வாங்குறதுன்னு போட்டிக்கா. அதனால, இடைவெளி விட்டு வாங்க. அப்பதான் தருவோம்னு, நிறுத்தி வச்சிட்டாங்க,''''அதானே கேட்டேன். இதுபோல, வெள்ளகோவிலில் பொருள் கொடுக்க போய் கட்சிக்காரங்க பண்ணுன கூத்தில, கொடுக்காம கொண்டு போய்ட்டாங்க,''''அடடா... ஏங்க்கா, என்னாச்சு?''''அப்பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம் கொடுக்க, சேவை அமைப்பு நிர்வாகிகள் போயிருக்காங்க. நகராட்சி சமுதாய கூடத்துல வச்சு, கொடுத்திருக்காங்க. தகவல் தெரிஞ்சு, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி பிரமுகர்கள் போயி, நாங்கதான் கொடுப்போம்னு, சத்தம் போட்டிருக்காங்க,''''அடக்கொடுமையே''''கொஞ்ச நேரத்தில், இரு தரப்புக்கும் சண்டை முத்திடுச்சாம். உடனே, நகராட்சி ஆபீசர் வந்து, எல்லாத்தையும் வெளியே போக சொல்லி, சமுதாய கூடத்தை பூட்டிட்டாராம்,''''இவங்க உதவி செய்யாட்டி கூட, பரவாயில்ல. அடுத்தவங்க கொடுக்கறதையாவது தடுக்காம இருக்கலாம் அல்லவா?''''அக்கா... அங்க ரெண்டு கட்சிக்கு இடையில் பிரச்னை. இங்க, ஒரு கட்சிக்குள்ளயே பிரச்னை?''''புரியற மாதிரி சொல்லுடி மித்து,''''''எம்.எல்.ஏ.,கள் சார்பில், அம்மா உணவகத்துல இலவச உணவு கொடுக்க ஏற்பாடு செஞ்சாங்க. கூட்டம் அதிகம் சேர்ந்ததால தியில விட்டுட்டாங்க. அதுக்கப்பறம், முதல்வர் சேலத்தில, இலவசமா சாப்பாடு போட ஆரம்பிச்சாரு; அதயே பார்த்துட்டும் கூட, எம்.எல்.ஏ.,க்களும், மாஜியும் கண்டுக்கலையாம்,''''ஆனா, கார்ப்ரேஷன் தரப்பில, ஒருவழியா எம்.எல்.ஏ.,கள்கிட்ட பேசி, இலவச சாப்பாடு போட ஏற்பாடு செஞ்சாங்களாம்,''''எப்படியோ, கஷ்டப்படறவங்களுக்கு சாப்பாடு கிடைச்சா சரிதான் மித்து,''''அக்கா... கவனிச்சீங்களா, இந்த மூனு நாள்தான், கொரோனா பயத்தை காட்டியிருக்கு போல''''உண்மைதான்டி. ரோட்டில, ஒரு ஈ, காக்கா கூட இல்ல. எந்த கடையுமில்லே. அதே மாதிரி, 'முதல்லயே, கறிக்கடையை மூடியிருந்தா, சிட்டியில கூட்டம் சேராம பண்ணியிருக்கலாம். இது விஷயத்தில், கலெக்டர் ஏன் யோசிக்கிறாருன்னு தெரியலைடி,''''ம்... என்னன்னு தெரியலை. அக்கா... பக்கத்தில, கோழிப்பண்ணையூரில், அதிகாரியோட பதில கேட்டீங்கன்னா, டென்சன் ஆகிடுவீங்க,''''அப்படி என்ன பதில் சொன்னார்?''''வேலையில்லா கஷ்டப்படற தொழிலாளிங்க சிலர், சாப்பாடு இல்லாம கஷ்டப்படுகிறோம்னு, வருவாய் அதிகாரிக்கு போன் போட்டாங்களாம். ஆனா, அந்த அதிகாரி 'அதெல்லாம், உங்க வார்டு மெம்பர்கிட்ட கேளுங்கன்னு சொல்லிட்டு,' படக்குன்னு லைனை 'கட்' பண்ணிட்டாராம்,''''வெளி மாநில தொழிலாளிங்க கஷ்டப்படறாங்கன்னு, ஒரு அக்கறை இல்லாம நடக்கும் அதிகாரிகளை என்னன்னு சொல்றது தெரியல போ,''என்ற சித்ரா, கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டு தொடர்ந்தாள்.''அக்கா... நம்ம டிஸ்ட்ரிக் புல்லா 'டாஸ்மாக்'சரக்கு சேல்ஸ் 'டாப்'பா நடக்குது தெரியுங்களா?''''என்னடி. சொல்றே. அதான், கடையை பூட்டி 'சீல்' வச்சாச்சு. அப்புறம் எப்படி விப்பாங்க?''''நானும் அப்டித்தான் யோசிச்சேன். ஆனா, நடுராத்திரி, மெக்கானிக்கை கூட்டிட்டு போயில், 'வெல்டிங்' வச்சு, கடையை திறந்து பெட்டி பெட்டியா 'சரக்கு' எடுத்துட்டு போயி, நாலு மடங்கு வச்சு வித்து, லாபம் பாக்கறாங்களாம்,''''குறிப்பா, சொல்லோணும்னா, அவிநாசி, உடுமலை, பல்லடம், திருப்பூரில்தான் அதிகமாம். இப்படித்தான், சிட்டியில, மது வித்த ஒரு நபரை புடிச்சு, 25 ஆயிரம் 'கப்பம்' வசூலிச்சிட்டு போயிட்டாராம். இதிலென்ன விஷயம்னா, எல்லை விட்டு எல்லை வந்து வசூல் செய்யலாம் என பிரச்னை வரவே, அவரை அனுப்பி வைத்ததே ஒரு அதிகாரினு தகவல் வந்ததும், போலீசார் 'கப்... சிப்' ஆகிட்டாங்களாம்,''''மித்து, நீ 'டாஸ்மாக்' மேட்டர் சொன்னதும், இன்னொன்னு, நினைவுக்கு வந்துடுச்சு?''''என்ன மேட்டருங்க?''''அவிநாசி, மங்கலம் ரோட்டில், நாலஞ்சு கடையோட மொத்த சரக்குகளையும், ஒரு குடோனில் வச்சு, 'சீல்' வச்சிருக்காங்க. ஆனா, அதோட, 'இன்சார்ஜ்' ராத்திரி போயி, எடு்ததுட்டு வந்து, கொள்ளை லாபத்துக்கு விக்கறாராம்,''''இது தெரிஞ்சதால், கட்சிக்காரங்க, போலீஸ்காரங்க, அவரை மிரட்டி ஏகப்பட்ட 'சரக்கு' வாங்கிட்டாங்ளாம். இநத பிரச்னை வெளியே கசிஞ்சததில், 'கனக'மான சூப்பர்வைசரை மாவட்ட அதிகாரி 'சஸ்பெண்ட்' செஞ்சிட்டாராம்,''''அக்கா... இதே மாதிரி மொரட்டுப்பாளையம், அவிநாசி கடைகளிலும், சூப்பர்வைசர்கள் தங்களோட கைவரிசையை காமிச்சதால், என்கொய்ரி போயிட்டிருக்குது,''''வேலியே பயிரை மேய்ற கதையாட்டம் போனா, எங்கே போய் முடியும்னு தெரியலை,'' என்ற சித்ரா, ''ஜி.எச்.,சில், ஏதோ, அதிகாரிகள் மத்தியில் பனிப்போராம்,''''என்னனு சொல்லுங்க...''''ஏற்கனவே இருந்தவருக்கும், இப்ப புதுசா வந்தவருக்கும் இடையே கருத்து மோதலாம். புதுசா வந்தவர், அவர் சொல்றதை, காதில வாங்கிக்கறதி்ல்லையாம். இதனால், ரெண்டு பேருக்கும் இடையே நீயா, நானா?னு போட்டி வந்துடுச்சாம்,''''இந்த ரெண்டு பேர்கிட்ட சிக்கிட்டு, சுகாதாரத்துறை ஊழியர்கள் படாதபாடு படறாங்களாம்,'' என்ற சித்ரா, ''ஓ.கே., மித்து, மழை வர்ற மாதிரி இருக்கு. மாடியில காயற துணியை எடுக்கோணும். மறுபடியும் கூப்பிடறேன்,''என்றவாறு, இணைப்பை துண்டித்தாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X