பொது செய்தி

இந்தியா

செப்டம்பரில் கொரோனா தடுப்பூசி தயார்: இந்திய நிறுவனம் நம்பிக்கை

Updated : ஏப் 28, 2020 | Added : ஏப் 28, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட செப்டம்பர் மாத இறுதிக்குள் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படலாம் எனவும், அதன் விலை சுமார் 1,000 ரூபாய் இருக்கலாம் என்வும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அடர் பூனாவாலா தெரிவித்துள்ளார்.உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்க பல்வேறு நாடுகளும் தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் மும்முரமாக
Corona Vaccine, India, coronavirus, coronavirus india, coronavirus treatment,
, சீரம், நிறுவனம், கொரோனா, தடுப்பூசி, இந்தியா, நிறுவனம், செப்டம்பர், ஆக்ஸ்போர்டு

புதுடில்லி: கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட செப்டம்பர் மாத இறுதிக்குள் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படலாம் எனவும், அதன் விலை சுமார் 1,000 ரூபாய் இருக்கலாம் என்வும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அடர் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்க பல்வேறு நாடுகளும் தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. சில விஞ்ஞானிகள், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்க குறைந்தது 18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை ஆகலாம் எனக் கூறினர்.

இந்நிலையில், இன்னும் ஒரு சில மாதங்களில் தடுப்பூசி தயாராகிவிடும் என சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைவர், அடர் பூனாவாலா தெரிவித்துள்ளார். இந்நிறுவனம், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்க, இங்கிலாந்து மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.


latest tamil news


இது குறித்து பூனாவாலா கூறியதாவது: நாங்கள் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறோம். இப்போது நாங்கள் சோதித்து வரும் மாதிரிகள் செப்டம்பர் மாதத்திற்குள்ளோ அல்லது அக்டோபர் மாதத்திற்குள்ளோ வெற்றிகரமான முடிவைத் தந்தால், அதை உடனடியாக இந்தியாவிற்கும் உலகிற்கும் கொடுத்து விடுவோம். நாங்களுமே 2021ம் ஆண்டுதான் தடுப்பூசியை கண்டுபிடித்து தயாரிக்க முடியும் எனக்கூறி வந்தோம். ஆனால், ஒரு வாரத்துக்கு முன்னர் நாங்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் போட்டு பணியாற்றத் தொடங்கினோம். தற்போது மனிதர்களிடம் தடுப்பூசி சோதனையை செய்து வரும் அவர்கள், தடுப்பூசி கண்டுபிடிப்பில் மிகுந்த முன்னேற்றம் அடைந்துள்ளனர்.


latest tamil news


தடுப்பூசியின் விலை குறித்து இந்த சமயத்தில் சொல்வது சரியாக இருக்காது. ஆனால், சுமார் 1,000 ரூபாய் இருக்க வாய்ப்புள்ளது. எனக்கு ஆக்ஸ்போர்டு குழு மீது நம்பிக்கை உள்ளது. அவர்கள் எபோலா வைரசுக்கும் விரைவாக தடுப்பூசியைக் கண்டுபிடித்தார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், மனிதர்களிடம் தங்களின் சோதனையை கடந்த ஏப்.,23ம் தேதி ஆரம்பித்தது. உலகளவில் கிட்டத்தட்ட 100 குழுக்கள், கொரோனா தடுப்பூசியைத் தயாரிக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைத் தவிர சுமார் 7 இடங்களிலும் கொரோனா வைரசின் கிளினிக்கல் டிரையல் செய்யப்பட்டு வருவதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswam - Mumbai,இந்தியா
28-ஏப்-202020:19:30 IST Report Abuse
Viswam செப்டம்பர் வரை ஆறு மாசம் தாங்கணுமே என்று எல்லோரும் நினைக்கும்போது, இவ்வளவு சீக்கிரம் வாக்சின் கொண்டுவந்ததே பெரிய பாடு என்று விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள்.
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
28-ஏப்-202016:47:47 IST Report Abuse
Chandramoulli Vaalthukkal.
Rate this:
Cancel
Raj - nellai,இந்தியா
28-ஏப்-202015:47:49 IST Report Abuse
Raj செப்டம்பர் வரை காக்கணுமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X